தேர்தல் முடிவுகள் அறிவிப்பு : சிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் !


1 . கருத்து கணிப்புகளை அடித்து நெருக்கி அ .தி.மு.க. அமோக வெற்றி

2. தி.மு.க.படுதோல்வி , கூட்டணி காட்சிகள் உள்பட .....

3. தி.மு.க. எதிர்கட்சியாக கூட தகுதி அற்றதாக தமிழக வாக்காளர்கள் செய்தது .

4. தே.மு.தி.க . எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு முன்னேறி இருப்பது .......

5. காங்கிரஸ் தமிழகத்தில் மண்ணை கவ்வி இருப்பது .......

6. 3 இடங்களை மட்டுமே கொடுத்து பா.ம.கா .விற்கு ஆப்பு அடித்திருக்கும் வன்னிய மக்கள் .

7. இதை விட ஒருபடி மேலே சென்று விடுதலை சிறுத்தைகளை தலித் மக்கள் தாளித்திருப்பது .

8. பெரும்பான்மையான அமைச்சகள் படு தோல்வி அடைந்தது .

9. மக்கள் எனக்கு ஓய்வு அளித்துள்ளனர் என்று கலைஞ்சர் அறிவித்தது .

10. தி.மு.க. அபிமானிகள் அரண்டு போய் உள்ளது . கைபுள்ளையின் கபாளம் தெறிக்கும் செயதிகள் காலை முதலே வெளிவந்து கொண்டிருப்பது ..........

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் .........

தி.மு.கா.வின் படு தோல்விக்கு காரணம் என்ன அலசி ஆராய பெரியதாக ஒன்றும் புதிய காரணங்கள் இல்லை , நான் பல பதிவுகளில் குறிபிட்டதும்
பல ஊடகங்கள் , பதிவர்கள் சொன்னது தான் நடந்துள்ளது . ஆனால் இதில் என்ன விஷேசம் என்றால் ஆனைவரும் ஏன் ஜெயலலித்தாஅவர்களோ , அவர்கள் கூட்டணி கட்சியினரோ , அவர்கள் கட்சி தொண்டர்கள் கூட நினைத்து பார்க்காத வெற்றி கிடைத்துள்ளது . மக்களின் வெறுப்பு எந்த அளவிற்கு இருந்திருகின்றது என்பது கண்கூடாக இன்று வெளி வந்த முடிவுகள் சொல்லி இருக்கும் .

இதில் இன்னொன்றை நான் குறிபிட்டே ஆக வேண்டும் . இது எதிர் பார்த்தது தான் இருந்தாலும் சொல்லுகிறேன் . காங்கிரஸ் சண்டை போட்டு வாங்கிய தொகுதிகளை கூட ஜெய்க்க முடிய வில்லை என்பது தான் ஒரு தமிழனாக இருந்து சந்தோஷ பட வேண்டிய முக்கிய நிகழ்வு .............

இன்னும் காங்கிரஸ் துடைதெரியப்படும் தமிழகத்தை விட்டு . அவர்கள் தமிழகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் போக்கை மாற்றி கொள்ளவில்லை என்றால் .......... அடியோடு தமிழகத்தில் குழி தோண்டி புதைக்க படும் . இது எச்சரிக்கை மட்டுமே !

அடுத்து, எல்லாம் நல்ல விதமாகவே முடிந்து அ இ.அ .தி.மு.க தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்திருகின்றது .......
அடுத்து நாட்டில் அரங்கேறும் நல்ல விசயங்களை மனபூர்வமாக ஆதரிப்போம் . மறந்தும் மக்கள் விரோத போக்கை கடை பிடித்தால் மறுபடியும் புரட்சி வெடிக்கும் முன்பு போல் இல்லை இன்று மக்கள் மன நிலை . சட்டைய பிடிச்சி கேள்வி கேட்கும் அளவிற்கு இல்லா விட்டாலும், குறைந்த பட்சம் குரல் எழுப்பவாவது கொஞ்சம் போர் தயாராக இருகின்றனர் ....

இனி நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து ( வேண்டி) தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர் . அதை புரிந்து நல்லாட்சி நடத்திட அ.தி.மு.க. வருங்கால முதல்வர் ஜெயலலித்தா முயற்சி எடுப்பார் என்று நம்பலாம் ..............

அப்படி செய்ய வில்லை என்றால் என்று எதிர் கேள்வி கேட்பவர்களுக்கு . அப்படி நடந்தால் அன்றும் எதிர்த்து முதல் குரல் கொடுப்பவர்கள் தமிழ் இணைய பதிவு உலகத்தை சார்ந்த அனைவரும் முன்னோடியாக இருப்போம் என்று உறுதி கூறுகின்றோம் .


கருத்துகள்

  1. மு.க.வுக்கு சரியான ஆப்பு. அடுத்த எலக்ஷ்னுக்கு ஐயா இருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
  2. எப்போதும் வாக்குப்பதிவு இயந்தறத்தை குறை சொல்லும் ஜெய்லலிதா முடிவு தனக்கு சாதகமானதும் வாய்திற்க்க வில்லை. பாதகமாக இருந்தால் என்ன சொல்லி இருப்பார்... ?

    பதிலளிநீக்கு
  3. DrPKandaswamyPhD @
    நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் , அவர் பாவம் நீடூழி வாழட்டும் பெற பிள்ளைகள் உடன் . ஆனால் மறுபடியும் குடும்ப அரசியலை கொண்டு வந்து விடாமல் இருந்தால் சாரி . அவர்கள் திறமையில் யார் வளர்ந்தாலும் அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள் அங்கெ குடும்ப அரசியல் என்ற வாதம் வராது , ஆனால் அப்பா, தாத்தா முதல்வர் என்ற உடனே அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் மந்திரி பதவி யாரையும் தொழில் செய்ய விடாமல் அடக்கு முறை இத்தை தான் குடும்ப அரசியல் என்று சொல்கின்றோம் . மற்றவர்களோடு சாரி நிகர் சமானமாக போட்டி இட்டு செய்தது காட்டுங்கள் ( தாத்தாவின் பின்னாடி ஒளிந்து கொண்டு அல்ல )

    பதிலளிநீக்கு
  4. malar #
    நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்
    நீங்கள் ஒரு விஷயத்த மறந்து விட்டீர்கள் . ஒட்டு பெட்டியில் கோளாறு தன்னால் வராது அதை அவாறு செயல் படித்தினால் வரும் இது யந்திரத்தின் விதி . நாம் சொல்வதை கேட்கும் சரியா . தேர்தல் கமுஷன் சரியாக வேலைசெய்யவில்லை என்றால் மேலே சொன்ன அனைத்தும் நடந்திருக்கும் இதை யாரும் மறுத்து விட மாட்டார்கள் . இந்த தேர்தலிலே முதன்மையாக வாக்காளர்கள் நன்றி சொல்வதே தேர்தல் கமுசனுக்கு தான் . காரணம் உங்களுக்கும் தெரியும் . இது வரையில் நடை பெறாத நல்ல மாற்றத்தை தேர்தல் கமுஷன் நிறைவேற்றி நல்ல முறையில் தேர்தலை நடத்தி கொடுத்திருக்கின்றது . அதற்காக தேர்கள் கமுசனை அனைவரும் கட்சி பாகு பாடு இல்லாமல் பாராட்டியே ஆக வேண்டும் . ரிசல்ட் சாதகமாக வந்து விட்டதால் வை திறக்க வில்லை என்று எப்படி நீங்கள் சொல்லுகின்றீகள் என்று தான் தெரிய வில்லை . அப்படி ஒரு வேளை நடந்திருந்தால் தி.மு.க விற்கு சாதகமாக வைத்திருந்தாலும் ஜெயலலித்தா குறை சொல்லி இருக்க முடியாது . காரணம் ஆறாம் முதற் கொண்டே தேர்தல் கமுசனை குறை சொல்ல வில்லை மாறாக கலைஞ்சர் தான் எல்லை இல்லாத அளவுக்கு குறை சொல்லி அதிகாரத்தை எல்லாம் குறைக்க சொல்லினார் என்பதை மறந்து விட கூடாது ...............

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக