இன்னும் திருந்த மாட்டார்களா இந்த தி.மு.க. அபிமானிகள் (அடிமைகள் )....

இன்னும் எத்தனை காலம் தான் தி.மு.க. அபிமானிங்க அந்த கட்சி தலைமைய தேலில் சுமக்க போறாங்களோ !. யோசிக்கவே மாட்டீங்களா ! ( இது அனைத்து கட்சிகளையும் சாரும் )
ருணாநிதியையோ , அவர் குடுபத்தையோ குறை சொல்வதில் என்ன இருக்கு வெகுளி தனமா பூம்பூம் மாடுகளை போல தலை ஆட்டி , எந்த தவறும் செய்யாத ஆட்டை மக்கள் அவர்கள் சுய லாபத்திற்கு பலிகடாவாக கடவுளுக்கு பலியிடும் கொடுமையை போல் . அந்த குடுபத்திற்காக இன்னும் எத்தனை , எத்தனை நபர்கள் பலியாக போகின்றார்களோ !.

ஆனால் ஒன்று மட்டும் புரியல பலன அந்த ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிக்குது . அவங்களுக்கு சேவை செய்யும் பூசாரிகள் ( மந்திரிங்க ) ஏதோ தட்டுல விழும் கணிக்க மாதிரி , இந்த சில்ற காசுக்காக வெண்சாமரம் பல்லக்கு , அடியால் வேளை என செய்து கொண்டிருக்கின்றன . ஆனால் பக்தர்களோ ( தொண்டர்களோ ) பாவம் . எந்த பிரதிபலனும் பாராமல் . சாமிய குத்தம் கொவபடாம ( சாமி குத்தம் வந்துடுமில்ல ) பய பக்தியா .... கும்பிட்டு அழகு பாக்காரங்க . (அரசியல் வாதிகள் ) வேலையே செய்யாம பக்தர்கள் காணிக்கை பணத்துல ஆடம்பரமா கோவில் , மசூதி , தேவலையங்கள் என விந்து கொண்டு அடிக்கடி கேளிக்கை கொண்டாட்டங்கள் வேறு வருடம் தவறாமல் ........... மக்கள் பணத்தில் ......

மன்னன் செய்தால் தவறில்லை , குடிமகன் முச்சி கொஞ்சம் சத்தமாக விட்டாலும் குற்றம் , கொடும் தண்டனை . இந்த கொடுமையை போல் தான் இன்று அரசியல் கட்சிகளின் கொண்டாட்டங்கள் அமைதிருகின்றன.

ராம் ஜெத் மலானி போன்ற சகுனிகள் நாட்டில் இருக்கும் வரை நாட்டில் எந்த குற்றமும் பணத்தை வைத்துகொண்டு தாராளமாக அரங்கேற்றலாம் .
இவரி ஒரு கேள்வி

கருணாநிதியின் மகளாகப் பிறந்தது கனிமொழியின் துரதிஷ்டமா?:
இல்ல இல்ல உன்ன மாதிரி உள்ளவனுங்க நாட்டுல உலவ விட்டிருக்கிறது தான் துர்ரதிஷ்டம் .............
இப்ப ராசா தான் குற்றவாளி, அடுத்து சரத்குமார் தான் குற்றவாளி . பாவம் எதுவுமே தெரியாதா அப்பாவிங்க கனிமொழியும் , தயாளு அம்மாளும் , இன்னும் அவங்க குடும்ப குள்ளநரி குட்டிகளும் ...........

பணத்த வாங்கி கொடுத்துட்டு பாவம் யாரு பெத்த புள்ளையோ சரத்குமார் பொழச்சி போகட்டுமுன்னு கொடுத்திருக்காங்க கருணாநிதி குடும்பம் எப்படி பாகபிரிவினை நடத்தி ....... இதுக்கு மேல என்னத சொல்ல .........
சொல்லி தான் என்ன ஆக போகுது . ஒரு வேடிக்கை பாருங்க தீர்ப்பு மே 14 அப்ப முடிவு தெரிஞ்சிடும் . அரியணை ஏறினா ஜாமீன் , கவுந்தால் ஜெயில் லா . காங்கிரஸ்சொடதிருவிளையாடலா இருக்குமோ ! எல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் சாரி சாரி கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் உலகம் தானே நம்ம உலகம் ...............
இன்னும் எத்தனை பலிகடாக்களோ தெரியலா ( ஆனால் இந்த பளிகடாக்களுக்கும் பங்கிருக்கு என்பது தான் இதுல விசேஷம் )...

டெல்லி: கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை என்றும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஆசிப் பல்வா மூலம் வந்த ரூ. 214 கோடி பணத்தை, ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான் திருப்பித் தந்துள்ளனர். முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர் என்றும் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றம் சாட்டியது.

2ஜி வழக்கில் கனிமொழிக்கும், கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்த சிபிஐ, அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க (கைது செய்ய) கோரிக்கை விடுத்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது திமுக எம்பி கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழிக்கு கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார்.

முழு பழியும் ராசா-சரத் மீது:

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை. கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

இதன்மூலம் முழுப் பழியையும் ராசா மற்றும் சரத்குமார் மீது போட்டார் ராம் ஜேத்மலானி.

கருணாநிதியின் மகளாகப் பிறந்தது கனிமொழியின் துரதிஷ்டமா?:

இந் நிலையில் இன்றும் இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்தது. அப்போது ராம்ஜேத்மலானி கூறுகையில், கருணாநிதியின் மகள் என்பதால் கனிமொழியை குறி வைக்கிறார்கள். அவருக்கு மகளாகப் பிறந்தது கனிமொழியின் துரதிஷ்டமா? என்றார்.

சிபிஐ எதிர் வாதம்:

அவருக்குப் பதிலளித்துப் பேசிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், கலைஞர் தொலைக்காட்சியை கனிமொழி கட்டுப்படுத்தவில்லை என்பதை நம்ப முடியவில்லை, அந்த வாதத்தை ஏற்கவும் முடியவில்லை. கலைஞர் டிவியில் பங்குதாராராக உள்ள யாரோ ஒருவர் அதை நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரரும் டிபி ரியாலிட்டி தலைவருமான ஆசிப் பல்வா மூலம் தான் ரூ. 214 கோடி வந்துள்ளது. ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான், அந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து கலைஞர் டிவி திருப்பித் தந்துள்ளது. முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர்.

போலியான ஆவணங்கள்:

இந்தப் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை குறித்து கலைஞர் டிவி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானது என நம்ப எந்த முகாந்தரமும் இல்லை.

மேலும் கலைஞர் டிவியை நிறுவுவது தொடர்பாக கனிமொழி தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கலைஞர் டிவியின் மூளையாக கனிமொழி செயல்பட்டிருக்கிறார்.

ராசா தவறு செய்ய கனிமொழி உதவி:

மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரை விட கனிமொழிக்குத் தான் ராசா நெருக்காக இருந்தார். ராசா தவறுகள் செய்ய கனிமொழியும் சரத்குமாரும் உதவியாக இருந்தனர். எனவே அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Read: In English
முன்னதாக நேற்று நீதிமன்ற விசாரணை முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய ராம்ஜேத்மலானி, குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. கலைஞர் டிவி நிறுவனத்தைப் பொருத்தவரை அனைத்து பணப் பரிமாற்றங்களும் காசோலைகள் மூலமே நடந்துள்ளன. எனவே, கருப்புப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் சார்பில் நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய வழக்கறிஞர் அல்தாப் அகமது, சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப் பத்திரிகையில் கலைஞர் தொலைக்காட்சி பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இதற்கான நிதியை பல்வேறு ஆதாரங்களின் மூலம் திரட்ட உரிமை உண்டு. 200 கோடி ரூபாய் பணம் வர்த்தக ரீதியான பணப் பரிமாற்றமே தவிர வேறு ஏதும் இல்லை. அந்தப் பணம் முறைகேடான பணமா, இல்லையா என்பது எப்படித் தெரியும். அந்த 200 கோடி ரூபாய் பணமும் 10 சதவிகித வட்டியுடன் திருப்பி தரப்பட்டுவிட்டது. வணிக நிறுவனங்கள் மீது இப்படி தவறான வழக்குகளை தொடர்ந்தால் இந்தியா எப்படி வளர்ச்சி அடையும் என்றார்.

கருத்துகள்