தமிழ் நாட்டில் ஊடக புரட்சி வருமா !

கிரி அவர்களுக்கு நான் ஏப்ரல் 7 அன்றே அன்ன ஹசாரே அவர்களை பற்றியபதிவு போட்டேன் . ஒட்டு மொத்தமாக திட்ட வேண்டாம் வேண்டுகோள் மட்டும் வைப்போம்.

எனக்கும் ஆதங்கம் ஏன் இப்படி இந்த தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்று . என்ன செய்வது கிரி உங்களுக்கும் எனக்கும் அட்லீஸ்ட் ப்ளாக் ஆவது இருக்கு வைத்தெரிச்சல கொட்டி தீர்ப்பதற்கு , ஆனால் பாவம் நடுத்தர மக்கள் எந்த பக்கம் பார்த்தாலும் இடிதான் .

பல பேருக்கு என்னையும் சேர்த்து வட மாநில மீடியாக்கள் மீது வருத்தம் தமிழன் செய்தி என்றால் முழுக்க அதை இருட்டடிப்பு செய்வது , இது பல காலமாக தொடர்கின்றது, ஒரு வட மாநிலகாரன் தாக்கப்பட்டாலும் ஓங்கி குரல் கொடுக்கும் வட மாநில மீடியாக்கள் ஏன் தமிழன் என்றால் மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்கின்றனர் .

அவர்களை நாம் கேள்வி கேட்க கூட தகுதி இல்லை என்றே தோன்றுகிறது . காரணம் பல. முதலில் நமது தமிழ் மீடியாக்களை எடுத்துக்கொள்வோம், என்ன செய்து கொண்டிருகின்றனர் மக்களை மாக்கள் ஆக்கி பலனை ( அவன் இரத்தத்தை அட்டைகளை போல் உறிஞ்சி நடை பிணமாக அலைய விட்டுருக்காங்க) கோடிகளில் சொத்துக்களையும் தன் வளர்ச்சியையும்(குடும்பம்) பெருக்கி கொண்டே இருக்கின்றனர். தமிழ் மீடியாக்கள் அனைத்தும் ஏதாவது கட்சியின் விருவாசியாகவே இருக்கின்றது . அவர்கள் சொல்வது தானே மக்களுக்கு போய் சேரும் . அதுவும் ஒரு செய்தியின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இன்று தமிழன் படும் பாடு சொல்ல முடியாத அளவிற்கு கேவலங்கள் அரங்கேறிக் கொண்டிருகின்றன. யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்றே தெரியவில்லை . பாவம் இதில் அதிகம் பாதிப்பது படிக்காத, மெத்த படிக்காத நடுத்தர கிராம புற மக்கள் .

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சன் டி.வி., கலைஞ்சர் டி.வி.செய்யும் அட்டுழியும் தங்களடா சாமீ .. அதற்கு அடுத்த இடம் ஜெயா டி. வி. புதுசா கேப்டன் டி.வி.வேற இதுல ஐக்கியம் ஆயிடுச்சி. மக்கள் தொலைகாட்சி இவங்க யாரு பக்கம் எப்ப சாதகமா நியூஸ் வெளியிடுவாங்கன்னே சொல்லமுடியாது ( அட அவங்களாலே சொல்ல முடியாது ) . வின் டி.வி கொஞ்சம் நடுநிலைமையா இருக்கும் அப்படின்னு நினைக்கும் போது அவங்களும் இப்ப புதுகாட்சி ஆரபிச்சிட்டாங்க. அட இன்னும் நிறைய சேனல் இருக்குபா ஹயோ ஹயோ . அதுக்கெல்லாம் பாவப்பட்டதுங்க . இந்த தருதல சன் , கலைஞ்சர் டி.வி.ய பகைச்சிகிட்டு தொழில் பன்ன முடியுமா ? நம்ம சன் டி.வி கரங்களே கலைஞ்சர் டி.வி. கரான்கள ஒன்னும் பன்ன முடியல . மதுரையில தினகரன் அலுவலகம் மற்றும் 3 ஊழியர்கள் நிலைமைய பார்த்த பின்னாடியுமா ? யாரும் எதிர்ப்பாங்க .

இந்த லட்சணத்துல தான் தமிழ் மீடியாக்கள் இருக்கு . தமிழன பற்றிய செய்திய நம்ம ஆளுங்களே வெளியில சொல்றது இல்ல . அப்புறம் மக்களுக்கு எப்படி தெரியும் . அந்த குடுபத்துக்கு ஒண்ணுன்னா மட்டும் அலறும் தமிழகமே , அவங்க டி.வில வேற நிகழ்ச்சி இருக்காது . என்னமோ உலகம் முழக்கமே அழிஞ்சி போனா மாதிரி அலறுவானுங்க கொஞ்சம் கூட(வெக்கமே ) கேப்பே இல்லாம ரீமிக்ஸ் ஆடியோ ,.ஸ்பெசல் எபகிட் வேற . இந்த நிலைமையில தான் இன்னைக்கு தமிழ் நாட்டோட தலைவிதி ஒரு குடும்பம் நிர்னைக்குது .

மக்களை முழுக்க சினிமா , சிரியல் , லைவ் ஷோ ( டான்ஸ் மானட மயிலாட ) கேம் ஷோ . இப்படியே முழுக்க தமிழன் மூளைய மழுங்கடிக்கப் பட்டிருக்கு. போதாததற்கு ஆண்களுக்கும் இளைஞ்சர்களுக்கும் ஊரெல்லாம் மதுக்கடை , பெண்களுக்கு சீரியல். திரைப்படம் குழந்தைகளுக்கு கார்டூன் கொஞ்சம் பேர் நியூஸ் பாக்கலான்னா என்னத்த பாக்குறது எப்படியே வீட்டுல சண்டை போட்டு நியூஸ் சேனல் வச்சா அவனுங்க புராணம் தான் ஓடுது . தமிழன் கொத்து கொத்த கொன்னுகிட்டு இருந்தப்ப இந்த சன் டி.வி. கலைஞ்சர் டி.வி. என்ன பண்ணானுங்க அப்படின்னு உலகத்துக்கே தெரியும் . அப்பும் எப்படி மக்கள் கிட்ட விழிப்புணர்வு வரும் . கொஞ்சம் பேரு தான் நெட்ல நியூஸ் படிக்கறது , இங்கிலீஷ் நியூஸ் பாக்கறாங்க . மக்களை குறை சொல்லி என்ன பலன் . முதல்ல நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும் அதன் பின்னாடியும் மக்கள் சக்தி வீறு கொண்டு எழும் என்பது சத்தியம்(எந்த விதத்திலும் தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல, இன்று மயக்க மருந்து தொடர்ந்து கொடுத்தாதால மயக்கத்துல இருக்கான் தண்ணியோ, சோடாவோ தெளிச்சி எழுப்பி பாருங்க அப்புறம் தெரியும் தமிழனின் வீரம் ரோசம் ) .

முதலில் தமிழகத்தில் ஊடக புரட்சி வர வேண்டும் பின்புதான் தமிழ் நாட்டில் நல்ல மாற்றம் வரும் . அன்ன ஹசாரே அவர்கள் விசயத்தில் கூட தமிழ் மக்கள் தவறு இழைக்க வில்லை முன்னெடுக்க நல்ல தலைவனும் இல்லை . செய்தியை கொண்டு சேர்க்க நடுநிலை ஊடகமும் இல்லை . அப்புறம் எப்படி புரட்சி தீ பரவும் . நடிகர்களை பற்றி தயவுசெய்து யாரும் கவலை படாதீர்கள் அவர்களுக்கு எந்த நிரந்தர உணர்வும் இல்லை அப்ப அப்ப அவங்களுக்கு சாதகமா அது வரும் அப்புறம் யாரு அதிகாரத்துல இருக்கன்களோ அவங்கள காக்க (பாராட்டு விழா நடத்தி பிடிச்சி சாதிச்சிக்குவங்க. அப்படி தப்பி தவறி யாரவது இருந்த அவன ஒரே அடியா ஓரம் கட்டிடுவாங்க . அதனுடைய பலான தான் இப்ப சினிமா உலகம் அனுபவிச்சிகிட்டு இருக்கு . பாவம் அவங்களுக்கும் இப்ப சுதந்திரம் இல்ல .

எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் என்னடா மிக முக்கியமான ஸ்டார் விஜய் டி.வி. விட்டுட்டேனே அப்படின்னு தானே! பாக்குறீங்க . அதான் அவங்க நியூஸ் போடறதே இல்லையே அவங்க பாணியில அவங்க நல்ல விதமாகவே போறதா எனக்கு தெரியுது . காரண முழுக்க கலை, பொழுது போக்கு அப்படின்னு அந்த டி.வி ஒழுங்கா தான் இருந்தது அதையும் போட்டி போட்டு கெடுத்துட்டானுங்க இந்த பாவி பயலுங்க ... இருந்தாலும் அவர்கள் பல பல மடங்கு மேல் மற்ற டி.விய விட (முதலாளி வேற நாடு என்பது வேறுகதை இருந்தாலும் அவங்க கூட பரவாஇல்லை . நியூஸ் விஜய் டி.விலையும் போட்டாங்க நடுநிலையோடு . அதையும் ஊத்தி முடிட்டானுங்க நம்ம பிரபல குடும்பத்தினர் .

நான் மிகுந்த வருத்தத்தோட ஒரு செய்தியை பதிவிடுகிறேன் நானே என் ப்ளாக்ல மிகவும் வாசகர்கள் வருகை குறையும் போது சினிமா சம்பந்தமான பிதிவை போட்டு தான் வருகிறேன் என்ன பண்ணுவது . மக்களின் மனம் இப்படி மாறி போனதற்கு யார் காரணம் .

விதண்டா வாதம் செய்பவர்கள்,? ஏன் அந்த டி.வி .ய பாக்குறீங்க அப்படின்னு விதண்டா வாதம் செய்வாங்க . அவங்களுக்கு ஒரு செய்தி விபசாரம் தவறு என்பது அனைவரும் மாற்று கருத்து இல்லாமல் ஒப்புகொள்வார்கள். ஆனால் அதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் நடிகர், நடிகைகளை பற்றிய செய்திகளுக்கும், அவர்களுக்கும் காத்துக்கிடப்பார்கள் , கிசுகிசு என்றால் முதலில் அதை தான் படிக்கின்றனர், அன்றாட செயதிகள், நிகழ்வுகளில் அடுத்து தான் செல்கின்றனர் .

இதை போன்றது தான் மக்கள் மன நிலை. முழுக்க சினிமாவே ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றது இன்றைய மக்களை இடைவெளியே இல்லை மற்ற நிகழ்வுகளை பார்ப்பதற்கு . உறவு சொந்தங்களே இப்போது சந்திப்பு என்பது குறைந்தது போனது. முதலில் தமிழ் நாட்டில் ஊடக புரட்சி வரவேண்டும் நண்பகளே ! முடிந்தால் யாரவது முன்னெடுத்து செல்லுங்கள் . அனைவரும் பின்தொடருவார்கள் உங்கள் பினனால் முதலில் சற்று தயக்கத்துடன் தொடர்ந்தால் மிக தைரியமாக பின்னால் வருவார்கள்.

முதலில் எந்த கட்சியை சாராமல் டி.வி.நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் நாடு நலம் பெரும் . நல்ல நடுநிலையான செயதிகள் வரும் .
முடிந்தால் இணைய பதிவுலக புரட்சியாக (செய்ய முடிந்தால்) செய்யலாமே !.

கருத்துகள்

  1. செந்தில் நீங்களே அனைத்தையும் கூறி விட்டீர்கள். நான் புதிதாக கூற எதுவுமில்லை.

    எனக்கு வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக பிடிக்காது. ஒன்றுமில்லாத விஷயத்தை நாள் முழுவதும் காட்டி வெற்று பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அடுத்த விஷயம் கிடைத்தவுடன் இதை மறந்து விடுவார்கள்.

    ஈழ தமிழர்கள் விசயத்தில் இவர்களின் புறக்கணிப்பு எல்லாம் நிச்சயம் மன்னிக்க முடியாதது ஆனால் தற்போது அன்னா ஹசாரே விசயத்தில் இவர்கள் காட்டிய வேகம் அது எதற்க்காக இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் காசுக்காகவே செய்து இருந்தாலும் அதை பற்றி நமக்கு கவலையில்லை. அதனால் நமது தமிழர்கள் பாசத்தை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல. இவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை அதனால் இவர்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றால் இழப்பு நமக்குத்தான். எப்படியோ தமிழகம் வேகம் பெரும் போது உண்ணாவிரதமே முடிந்து விட்டது.

    இவர்கள் எதற்க்காக செய்து இருந்தாலும் மக்களிடையே இதை கொண்டு சேர்த்ததில் இவர்களுக்கு முக்கிய பங்குள்ளது.

    ஈழ தமிழர்கள் விசயத்தில் வட மாநில ஊடகங்களை திட்டுகிறோம் ஆனால் நீங்கள் கூறியது போல இங்கே என்ன நடந்தது? தமிழக ஊடகங்களே புறக்கணித்து விட்டார்களே! இது பற்றிய செய்திகளை. அப்படி இருக்கும் போது வட மாநில ஊடகங்களை குறை கூறி என்ன பயன்? சொல்லப்போனால் அவர்களை எதுவுமே கூற முடியாது.

    நாமே சரியில்லை அப்புறம் எங்கே மற்றவர்களை இது பற்றி கேள்வி கேட்பது!

    உங்கள் பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அப்புறம் ஊடக புரட்சி எல்லாம் நம்ம ஊரில் வராது :-) குறைந்த பட்சம் இதைப்போல அரசியல் இருக்கும் வரை.

    பதிலளிநீக்கு
  3. கிரி உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி , ஒரு தவறு ஏன் பெயர் பாலா நீங்கள் செந்தில் என்று குறிபிட்டிருகின்றீன்கள். இருந்தாலும் நன்றி . இந்த பதிவு வர காரணமே நீங்கள் தான் அதனால் உங்களுக்கு தான் நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் கிரி , ஆனால் இந்த தமிழக அரசியலை யாராவது அன்னா ஹசாரே மாதிரி முன்னின்று நடத்தினால் ஒரு வேளை நடக்கலாம் . அல்லது கலைஞ்சர் குடும்பத்தை இன்னும் கொஞ்சம் கோடி சேர்த்து அவங்களுக்கு கொடுத்து வேற நாட்டுக்கு அனுபிட்டாலும் புரட்சி வர வாய்ப்பு இருக்கு. எல்லாம் ஒரு ஆதங்கம் தான் என்ன பண்றது . ப்ளாக் எழுதறதுக்கே பல பேர் என்னை எதுக்குகையா உனக்கு இந்த வேளை அப்படின்னு சொல்லும் மக்கள் தான் இன்னும் இருக்காங்க .

    பதிலளிநீக்கு
  5. பாலா மன்னிக்க நண்பரிடம் பேசி விட்டு அதே நினைவில் அடித்து விட்டேன் :-) உங்களுடைய சமீப லோக்பால் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக