பெருமை கொள்வோம், நாம் உலக சாம்பியன்

மறக்க முடியாத தருணங்கள் அரங்கேறியது ஆரம்பம் என்னடா இரத்த காட்டேரி(ராஜபக்சே ) இந்தியா வந்துள்ளதே என்று ஆதங்க பட்டது மனது . பிறகு தாஸ் தோல்வி . பிறகு அருமையான இந்தியா துவக்கியது தனது பந்து வீச்சை முடிவில் அடித்து நொறுக்கியது இலங்கை அணி இந்தியா பந்து வீச்சை ....... நொந்து போய் இருந்தாலும் நமக்குத்தான் 7 பேட்ஸ்மேன் இருக்கின்றனரே ! என்று மனம் கொஞ்சம் அமைதி யானது . பிம்பு தொடங்கிய இந்தியா பேட்டிங்கை என்ன என்று பார்ப்பதற்குள்ளே அதிர்ச்சி கொடுத்தனர் சேவாக் 0 ரன்னில் ஆட்டம் இழந்தார் . பின்பு சச்சின் இருக்கின்றாரே பாப்போம் என்று மனம் கொஞ்சம் தைரியம் சொன்னாலும் ஒரு பதட்டம் . பின்பு அவரும் ஆட்டம் இழக்க முடிந்தது இந்தியர்கள் சாம்பியன் கனவு என்று அனைவரும் நினைக்கையில் ...... ஆனாலும் மன திடத்துடன் பார்த்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே ! அதிகம் கிரிக்கெட் பார்க்காத என்னாலே இந்த நிலைக்கு மேல் தாங்க வில்லை மனம் துடித்தது . நிலை கொள்ளாமல் எழுந்து நமது அரசியல் பக்கம் வருவோம் என்று நேற்று ஒரு பதிவும் போட்டேன் . ஆனாலும் மனம் கொள்ளாமல் என் ப்ளாக் லா வரும் கிரிக்கெட் லைவ் ரன் விவரங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன் மனம் சிறிது சிறிதாக நம்பிக்கை அருபாக பூக்க ஆரபித்தது . ஒரு கட்டத்தில் டோனியும் , கம்பீரும் விளையாடி கொண்டிருத்த போது நம்பிக்கை செடியாக வளர்த்தது பின்பு மரமாக வேகமாக வளர்ந்தது . 100 ரன் எடுத்து விடுவார் பின்பு போய் டிவி மறுபடியும் பார்க்கலாம் என்ற போது 97 ரன்னில் ஆட்டம் இழந்தார் . அவருடைய பங்கு மிக சிறந்தது . அந்தந பின்பு யுவராஜ் வந்த உடன் கொஞ்சம் பொறுமையாக பொறுப்பாக விளையாடினார் போன ஆட்டத்தில் கொடுத்த படிப்பினை . இவ்வளவையும் பார்த்து கொண்டு தனது ஆட்ட வருசையையும் மாற்றி கொண்டு தனக்கே உரித்தான எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டாமல் இதற்கு அத கடைசி பந்து சிச்சர் ஆனா போது அவருடைய முக பாவனையை பார்த்தாலே புரியும் . என்ன சொல்வது கை தட்டி கை தட்டி வலி வந்து விட்டது அந்த வழியும் இப்போது தான் தெரிகின்றது ஆனந்தம் பேரானந்தம் அப்போதும் எப்படி தான் தோனியால் மட்டும் அந்த ரியாக்சன் காட்ட முடிகின்றதோ புரிந்து கொள்ள முடிய வில்லை அப்பொழுதும் அவருடைய புன்னகையை மட்டுமே வெளிபடுத்தினார் .......
பிறகு பேசும் போதும் இரண்டு கருத்தை மனவருத்தத்தை வெளிபடுத்தினார் என்றே சொல்ல வேண்டும் நான் ஒரு வேலை தோற்றிருந்தால் இரண்டு கேள்விகள் வந்திருக்கும் . ஒன்று ஏன் அஷ்வினை சேர்க்கவில்லை , இரண்டு என்னது ஆட்ட வருசையை மாற்றியது . அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது யோசித்து பாருங்கள் . டோனி தான் சிறந்த கேப்டன் என்பதை பல முறை நிருபித்தலும் நம்மை போன்ற அரைகுறை அரைவேக்காடு ரசிகர்களும் . மீடியா க்களும் பண்ணும் அனுபல் அதிகம் . நானும் முதலில் அஷ்வினை சேர்க்காததை
மிகவும் கடுமையாக விமர்சித்துகொண்டிருந்தேன் . அதில் நான் இப்போது மாற்று கருத்தில்லை . ஆனால் அவருடைய ஆட்ட வரிசையை மாற்றி முன்கூட்டியே வந்ததை பாராட்டி கொண்டிருந்தேன் . எப்படியோ நல்ல விதமாக அனைத்து முனால் சாம்பியான்களை வீழ்த்தி உண்மையான உலக சாம்பியன் ஆக வளம் வந்து கொண்டிருகின்றனர் நமது கிரிக்கெட் வீரர்கள் ........

பெருமை கொள்வோம் இந்தியா இன்று கிரிக்கெட் விளையாட்டில் உலக சாம்பியன்
28 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்தியா தோனி தலைமையில் வென்று மகுடம் சூட்டி இருக்கிறது
பாராட்டுவோம் .விளையாட்டு என்றாலும் நாம் முதலிடம் என்றால் பெருமை கொள்வோம் மிக சிறந்த அணிகளை வென்றுதான் இந்த கோப்பையை வாங்கி உள்ளனர் உண்மையான உலக சாம்பியன் இந்தியா எந்த அதிஷ்ட காற்றும் வீசவில்லை திறமைக்கு கிடைத்த வெற்றி ..... நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம் நாம் உலக சாம்பியன் என்று ....... தொடரட்டும் வெற்றிகள் ........ வளரட்டும் இந்தியா அனைத்து துறைகளிலும் வாழ்த்துவோம் ...........





தயவு செய்து யாரும் தவறாக கருத்தை வெளியிடாதீர்கள்

கருத்துகள்