87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? - ராகுல்

அட நம்ம ராகுல் தாங்க, அப்ப அப்ப அவர் நினைக்கிறதா அவரால சொல்லாம இருக்க முடியாது . ஒரிஜினல் உளறு வாயன் அவரு . நம்ம தாத்தாவுக்கு என்ன இப்பதான் 25 முடிஞ்சி 26 நடக்குதா ? இல்ல அவங்க கையாளு மன்மோகன் சிங் என்ன துள்ளி குதிக்கும் இளம் சிங்கமா ? போய் பொழப்ப பாருப்பா ! . ஒரு வேளை இப்படி இருக்குமோ தன்னுடைய எதிர்ப்பா மறைமுகமா காட்டுறாரோ !

என்ன இருந்தாலும் ராகுல் இப்படி சொல்லி இருக்க கூடாது . ஆயிரம் கோடி அளவுக்கு தான் ஊழல் செய்ய தெரிஞ்ச உங்களை ,இப்படி லட்ச கணக்கான கோடில எப்படி ஒரே டெண்டர்ல அடிக்கறது என்ற விஞ்சான முறைய சொல்லிகுடுத்தா அவரை போய் விமர்சனம் பண்ணா எப்படி ? . ஹோ உங்க பங்கு கம்மியா கிடைச்சுதா , அப்ப சரிதான் நீங்க கோவ படறது .

இந்த காமெடி பீஸ் வடிவேலு ஒரு படத்துல கொள்ளை அடிச்சத குறைஞ்ச ரேட்டுக்கு வித்திடும் , அப்புறம் அந்த பொருளோட முதலாளி கொள்ளை போன அளவ சொன்ன உடனே தான் தெரியும் இவ்வளவு விலை போகுமா என்று.
அத போல தான் இப்ப காங்கிரஸ் நிலைமை . அடிச்ச கொள்ளை எவ்வளவுன்னு தெரியாம கொடுத்த கமுசனை வாங்கிடிச்சிங்க , இப்பதான் தெரியும் அடிச்ச தொகையோட மதிப்பு . ஐயோ அப்பானு தி. மு. க. வை எப்படில்லாம் குடையலாமோ அப்படீல்லாம் குடையராங்கோ காங்கிரஸ்காரனுங்க . ஆட்றா ராமா ஆட்றா ராமா அப்படின்னு தி. மு. க. வை ஆட்டி வச்சி கிட்டு இருக்காங்க காங்கிரஸ் தலைமை .

தன்னுடைய இயலாமைய உணர்ந்த கலைஞ்சர் இப்ப எலக்சன் கமிசன் மேல விழுந்து பிராண்டுராறு . பாவம் கலைஞ்சர் காங்கிரஸ் ஒரு பக்கம் , மக்கள் எதிர்ப்பு ஒருபுறம் ,எதிர் கட்சிகள் ஒரு புறம் குடையறது பத்தாதுன்னு . எலக்சன் கமிசன் வேற இப்படி அவங்க எண்ணத்துல லோடு கணக்கு மணல் அள்ளி கொட்டி வைதெரிச்ச்சலை கொட்டிக்கறாங்க.
என்னமோ மஞ்சள் துண்டு போட்டும் எப்ப ஒன்னும் நடக்கல செஞ்சது கொஞ்சமா நஞ்சமா ? இன்னும் பலான அனுபவிக்கவே இல்ல அதுக்குள்ளாரவே இவ்வளவு கூப்பாடா ? பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வெல்லாம் நடக்குதுன்னு ......
நாம வேடிக்கை மட்டும் தானே பாக்க முடியும் !

கொச்சி, ஏப். 9: 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள்