தமிழகம்-வீடுகளு‌க்‌கான மின்வெ‌ட்டு 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌ப்பு

எதிர் பார்த்தது தான் , இருந்தாலும் இன்னும் கொஞ்சம் காலம் (மே 13 வரை ) தாங்குமுன்னு நினைச்சோம் , தாத்தா இப்பவே ஆரம்பிச்சிட்டாரு . எப்படியாவது மக்களை ஏமாத்தி விடலாமுன்னு தான் கணக்கு போட்டாரு இப்ப கொஞ்சம் நிலைமை சரி இல்லைனு உளவு துறை சொல்லிடுச்சாம் . கடுப்புல இன்னும் என்ன என்னவெல்லாம் கட்டாகுமோ தெரியல . இப்பவே அடிக்கடி சொல்லாம கொள்ளாம பவர் கட் ஆகுது . இதுல அறிவிப்பு வேற அப்ப சுத்தம் போல இனி . எல்லாரும் இன்வெர்ட்டர் வாங்கி வச்சிகோங்க கொஞ்சம் சமாளிக்கலாம் . மத்தபடி தலை எழுத்த மாத்தவா முடியும் ............. அனுபவிப்போம் ......... அவங்க ஜாலியா ஜல்சா பண்ணட்டும்..........


சென்னை: தமிழகத்தில் வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன் வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக த‌மிழக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அறிவித்துள்ளளது.

சிலகாலமாக மின்வெட்டு இல்லாமல் இருந்த சென்னை நகரத்திலும் இனி மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாநிலங்களிலும் ‌மி‌ன்சார‌ ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை என்றும் இதனால் தமிழகத்தில் வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌திக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செ‌ன்னை மாநக‌ரி‌ல் இ‌னி பக‌லி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌‌ட்டு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌‌ன்று‌ம்,
நாளொ‌ன்று ரூ. 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், கா‌ற்றாலை மூல‌ம் ‌மி‌ன்சா‌ர‌ம் பெற‌ப்படு‌ம்போது ‌நிலைமை ‌‌‌சீரடையு‌ம் எ‌ன்றும் ‌‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அறிவித்துள்ளது.

இதன்படி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தினமும் 3 மணி நேரம் மின்வெட்டும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

இந்த மின்வெட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கருத்துகள்