அடுத்த சூடான சுவையான அ .தி.மு.க.வின் இலவசங்கள் பட்டியல் ....(தேர்தல் அறிக்கை )





















திருச்சி: திமுகவுக்குப் போட்டியாக அதிரடியான அறிவிப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில், இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.

- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.

- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.

- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

- நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

- +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.

- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.

- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.

- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- கரும்பு கொள்முதல் விலையை ரூ. 2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை

- வறுமைக் கோட்டுக்கு் கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை

- தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை

- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

- விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

என்னமோ போங்க என்னதான் நடக்குது இந்த நாட்டுல தெரியல ,
இதென்ன தேர்தல் தானா இல்ல தமிழ் நாட்டு மக்களை ஏலம் விடறாங்களா ? ........ தெரிஞ்சா சொல்லுங்க .........
இப்பவே கண்ண காட்டுது
இந்த திராவிட கட்சிகளின் ஆட்சி செய்யும் நிலைய கண்டு , அல்லது தமிழ் நாட்டு மக்கள் முட்டாள் தான்னு நினைசிட்டங்களா ?
வேலை வாய்ப்பை பத்தியோ அல்லது கல்லூரி , பள்ளி கட்டணங்கள் , பஸ் கட்டணம் விலைவாசி உயர்வு எதை பற்றியும் யாரும் கவலை பட்டதாக தெரிய வில்லை . இலங்கை தமிழர் நிலைய பற்றியும் (அட நீங்க வேற தமிழ் நாட்டு மக்கள் நிலையே இங்கு கவலை கிடமா இருக்கு இதுல ) எந்த அறிவிப்பும் இல்லை . ஆறுதலா இலங்கை அகதிகளின் வாழ்க்கைய பற்றி கொஞ்சம் கவலை பட்டிருக்காங்க பரவ இல்லை .
மொத்தத்தில் ஏட்டிக்கு போட்டி தேர்தல் அறிக்கை மட்டுமே !
அல்லது எங்க இலவசத்தை பார்த்து ஒட்டு போட்டுடுவாங்களோ அப்படீன்னு பயமா ? .

அட நம்புங்க நான்தான் தமிழன் தமிழ் நாட்டு குடிமகன் .............
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ....

கருத்துகள்