உண்மை உண்மை இது சத்தியம் ........ இது சத்தியம்


தனது 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளையோ அல்லது தான் கண்டுள்ள வெற்றிக் கூட்டணியையோ நம்பவில்லை.
மாறாக....

இலவசத்தை மிகவும் நம்பியே
தனது ஆட்சிக் கனவை நனவாக்க முயற்சிக்கிறது
தி.மு.க.


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசப்பட்ட இலவசங்கள்
அதனை
ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா என்பது
ஐயத்திற்குக்குரியதே..!


பொதுவாக நிலவிவரும் ஆட்சிக்கு எதிரான
அதிருப்தி 50 விழுக்காட்டிற்கும் அதிகமானது
என்பது தேர்தல் மதிப்பாளர்களின்
கருத்தாகும்.

மின் தடை பெருமளவிற்கு பாதித்தது விவசாயிகளைத்தான்.
அவர்களின் கோபத்திற்கு அரசிடமும் பதில் இல்லை,
தேர்தல் அறிக்கையிலும் பதில்
இல்லை. “

வெட் கிரைண்டர் அல்லது மிக்சி

எந்த அளவிற்கு விற்கும் என்பது ஐயத்திற்குரியதே.
ஏனெனில் இந்
5 ஆண்டுக் காலத்தில் மின் தடை என்பது
தி.மு.க. ஆட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயரை பெற்றுத் தந்துவிட்டது.


2ஜி அலைக்கற்றை ஊழலில்
அதன் கூட்டணிக் கட்சி
யான காங்கிரஸிற்கு பெரும் பங்கு உண்டென்றாலும்,
மத்திய ஆட்சி அதனிடம் உள்ளதால், தி.மு.க.வை தனித்துக் காட்டி,
தன்னை காங்கிரஸ் காப்
பாற்றிக்கொள்ளும்.
இந்த ஊழல் வழக்கில் வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்
குற்றப்பத்திரிக்கை தி.மு.க.வின் தேர்தல் ‘வெற்ற
ி’க்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற ஒரு திட்டம்

செயல்படுத்தவில்லை


‘பலமான வெற்றிக் கூட்டி’ அமைத்தாலும்,
“ஐந்தாண்டுக் கா
ஆட்சியில் செய்த சாதனைகள்
தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது உறுதி”

என்று முழங்கினாலும், இவை யாவும் தங்களை ஆட்சியில் அமர்த்துமா
என்பதில் தி.மு.க. அணிக்கு உள்ள ஐயப்பாடே இந்த இலவச அறிவிப்புக்களு
க்குக் காரணம்
என்பதில் ஐயமேதுமில்லை.


இவை எல்லாம் தி.மு.க .வின் தோல்வி பயத்திற்கான காரணங்கள் .
தன் தன்மானத்தை இழந்து தான் . தி.மு. கூட்டணியும் அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே !

உதாரணமா காங்கிரஸ் காலில் விழுந்தது, ராஜினமா நாடகம் நடத்தியும் நடக்காதது . இது வரை இல்லாமல் தான் மானம் இழந்து 119 தொகுதிகளில் மட்டும் தேர்தலில் நிற்பது . கடைசி நிமிடம் வரை சண்டை கோழியாக இருந்து விட்டு ப.ம.க.விற்கு 30 தொகுதிகள் அள்ளி கொடுத்தது .

திருடனுக்கு தேள் கொட்டினாமாதிரி ரெண்டு கூட்டு களவானி பயல்களும் ஒன்னா சேர்ந்து கிட்டு 2 ஜி மேட்டரை அமுக்க பார்த்தது . ரெண்டு பெரும் பிரிஞ்சிருந்தால் நாறி போய் இருக்கும் ஊழல் மேட்டர் இன்னும் வெளிவராத மேட்டர் எல்லாம் வெளிவந்திருக்கும் . அப்படி வெளி வராம இருக்க ரெண்டு திருடனுகளும் ஒன்னா சேர்ந்து அதில் அதிக லாப அடைந்தது என்னவோ காங்கிரஸ் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது .

இதையும் மீறி தி.மு.க மறுபடும் ஆட்சியில் அமைந்தால் . அதற்கு முழு காரணம் தேர்தல் அறிக்கையோ , அல்லது இலவச அறிவிப்புகளோ , அல்லது கூட்டணி பலமோ அல்ல . எல்லாம் அந்த அம்மாவின் கருணையே !( ஆணவம் , அகங்காரம் மட்டுமே ).

எவ்வளவு தான் கலைஞ்சரை திட்டினாலும் அவர் மேல ஒரு கருணை இருக்கத்தான் செய்யுது ஜெயலலித்தாவிற்கு . இல்லைன்னா தான் ஜெயிக்க எல்லாவிதமான வசதிகள் சந்தர்பங்கள் அமைச்சி குடுத்தாலும் ( அதுவா அமைஞ்சாலும் ) அதை பயன் படுத்த தெரியால அளவிற்கு முழுகி போய் இருக்கும் தான் என்ற அகங்காரம் , திமிர் , கூட ஜால்ரா போடும் ஒரு சிலரை மட்டுமே நம்பும் போக்கு , பொது மக்கள் நேரடி பரிச்சயம் இல்லாதது , யாரையும் எளிதில் நெருங்க விடாத அடங்க பிடாரி தனம் . இவைகள் தான் முக்கிய காரணங்களாக இருக்குமே தவிர வேறெதும் இல்லை பரா பரனே !

இல்லை என்றால் வைகோவை எந்த மடையனாவது வெளில் விடுவானா ?
ஜெயலலித்தா வெளியில விட்டாச்சி . ஜெயலலித்தா பேசுறத அல்லது சொல்றத எவன் நம்புறான் அவங்க டி. வி .மாதிரியே ( ஜெயா டி.வி. ) அல்லது நல்ல பேச்சாளர் இருக்கான அவங்க கட்சியில . காலுல விழுவது மட்டுமே தான் எல்லாருக்கும் ஞாபகம் வருது , அல்லது எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பினது ஞாபகம் வருது , ஜெயலலிதா சசிகலாவோடு சேர்ந்து போட்ட ஆட்டம் , ஆடம்பரம், ஞாபகம் வருது .

கூட்டணி இருக்கறவங்களுக்காவது ஜெயலலிதா மேல நம்பிக்கை இருக்கா அதுவும் இல்லா . இதுவும் பெரிய மைனஸ் இந்த கூட்டணிக்கு . கூட்டணி தலைவர்களிடமே நேரடியாக பேச மறுக்கும் ஜெயலலித்தாவின் போக்கு
அனைவரிடமும் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது என்பதே நிதர்சன உண்மை.

இதை எல்லாம் மீறி ஒரு வேளை ஜெயலலித்தா ஆட்சியில அமர்ந்தால் அதற்கு முழு முதல் காரணம் தி.மு.க . வின் மீது இருக்கும் மக்களின் வெறுப்பே அன்றி வேரு ஒன்றும் இல்லை . இதும் நிதர்சன உண்மை ...........
எப்படியோ கலைஞ்சருக்கும் ஜெயலலிதாவிற்க்கும் மக்களிடம் மவுசு இல்லை என்பதே ! உண்மை உண்மை இது சத்தியம் ........ இது சத்தியம்
வேரு நல்ல தலைவன் அல்லது ஜெயிக்கும் தலைவன் இல்லாததே மற்றொரு காரணம் ......

ஏப்ரல் 13 மக்கள் என்ன நினைக்க போறாங்களே ! அல்லது மே 13 குள்ள என்னவெல்லாம் நடக்க போகுதே ! அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ..

கருத்துகள்