கலைஞ்சர் ஆட்சியை ஒருவர் பாராட்டுகிறார்.....

நண்பர்களே ! ஒரு விஷயத்தை யாரும் மறுக்க முடியாது ( கட்சி அடிமைகளை தவிர்த்து ) நீங்கள் உங்கள் ஆதங்கத்தை எழுதுங்கள் , தயவு செய்து யாரையும் குறை சொல்ல வேண்டாம் உங்கள் கோவம் நாயமானதாகவே இருக்கட்டும் , ஆனால் கலைஞ்சரை ஆதரிப்பவர்களையும் மதியுங்கள் . இப்படியும் கொஞ்சம் பேர் இருக்க வேண்டுமே . மாட்டுக்கு கடிவாளம் மாதிரி ....... கலைஞ்சர் ஆட்சியை ஒருவர் பாராட்டுகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு பொறுமை(எருமை ) சாலி.


மன்னிக்கவும் கலைஞ்சரை நான் குறை சொல்லவில்லை தமிழ்நாட்டை சுடுகாடா மாற்றாம விட மாட்டேன் அப்படின்னு கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கலைஞ்சர் ஆட்சியை தான் குறை சொல்லுகின்றோம் . நாட்டு மக்கள் குடலை பிடுங்கி தான் குடும்ப வாரிசுகளுக்கு மாலை அணிவித்து அரியணை அமர்த்த துடிக்கும் கலைஞ்சரை தான் குறை சொல்லுகின்றோம். இந்த ஆட்சியை பாராட்டும் மன பக்குவம் என்னகில்லை ஒருவேளை பாராட்டுபவர்கள் பாராட்டட்டும் அவர்களும் அவரால் ஆதாயம் அடைதிருப்பர்களோ என்னவோ தெரியவில்லை ( தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனப்பான்மை உள்ளவர்களாக இருக்கும் ) .

இன்றைய நிலையில் யாரும் பொதுவானவர்கள் ( அவர்கள் கட்சிகாரர்கள் கூட) ஜெயலலிததாவை ஆதரிக்கவில்லை, இருந்தாலும் ஆதரிப்பதற்கு காரணம் என்ன ?, இந்த ஆட்சி போகவேண்டும் அது மட்டுமே அனைவரது ( பொதுவானவர்கள் எண்ணம் ) விருப்பமாக உள்ளது. பெட்ரோல் ஊத்தி எரிக்கரவனை விட மெதுவா கொல்லும் விஷம் பரவயில்லை தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கு யாராவது நல்லவங்க பார்த்துட்டாங்கன்னா உயிர் பிழைக்க வாய்ப்பாவது கிடைக்கும் அப்படின்னு தான் நினைக்குறோம். இதுல யாரு எந்த வகை என்பதை நீங்களே முடிவு பண்ணிக்குங்க .

அடுத்தது இரண்டு நாளா நடப்பது நாடகமாகவே இருக்கட்டும், முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும். அதுவே அனைவரது ஆசை விருப்பம் .

நிம்மதியா மூச்சி கூட விட முடியல மத்திய மாநில அரசுகளின் அடாவடிதனம். தலையில உக்காதுகிட்டு தறுதலையா அலையறானுங்க . காரணம் உருப்படியான தலைவன் ( அல்லது எதிர்கட்சி இல்லாததுவே காரணம் ) . ரஜினி முன்னாடி ஜெயலலித்தாவின் ஊழல் , ஆணவ ஆட்சி நடந்த பொழுது அதை தடுக்க சொன்ன வார்த்தை இன்னொரு முறை ஜெயலலித்தா ஆட்சிக்கு வந்தா யாராலையும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது அப்படின்னு குரல் கொடுத்தாரு , அதும் ஒரு காரணமா இருந்தது அப்ப ஆட்சி மாற்றத்திற்கு . ஆனால் இன்று இந்த கலைஞ்சர் ஆட்சி தொடர்ந்தால் தமிழ் நாட்டை அல்ல தமிழனை , தமிழ் நாட்டு மக்களை யாராலும் காப்பாத்த முடியாது.

ஏற்கனவே அனைத்து துறையையும் கலைஞ்சர் குடும்பம் புடிகிட்டாங்க (அனைத்து மீடியா, தொழில் துறை , காலை துறை , தகவல் தொழிநுட்பம் , கட்டிடத் துறை , கல்வித்துறை , டாஸ்மார்க் , இயற்கை வளம் , கட்ட பஞ்சாயத்து, கந்து வட்டி ,விளையாட்டு துறை , மருத்துவ துறை இப்படி அனைத்து துறைகளிலும் கலைஞ்சர் குடும்பம் தான் துரை ( முதலாளி ) .
தமிழன் தமிழன் என்று சொல்லியே ! தம்மிழனை கொன்று குவிக்கும் தலைவன் தேவையா ? . தினம் தினம் அன்றாட வாழ்க்கையை நகற்ற முடியாமல் தவிக்கும் ஏழையின் நிலை தொடர வேண்டுமா ? .

காசு வாங்கி ஒட்டு போடுராங்கோ அப்படீனு கூப்பாடு போடும் வர்க்கமே அன்றாடம் அம்பதுக்கும் நூறுக்கும் தான் தன் மானத்தை அடகு வைத்து வாழ்க்கை ஓட்டுகிறான். அவனுக்கு உங்கள் அரசியல் தெரியாதய்யா . அவனுக்கு அவன் வயிறு காஞ்சி போயிருக்கும் போது நீங்க எந்த கூப்பாடு போட்டாலும் கேட்காது . அவங்களுக்கு மட்டும் என்ன அப்படியே வாழனுன்னா ஆசை . அவனை வாழ விடுவதில்லை உங்கள் அரசியல் வர்க்கம் .

கொள்ளை அடித்து அதில் சிறு துளியை நாக்கில் நக்க கொடுக்கும் தலைவர்கள் தானே இன்று ஆட்சி நடத்தராங்கோ. இந்த கேடுக்கெட்ட தேர்தல் துறை இப்பயாவது கருப்பு பணம் கொஞ்சம் வெளிய வரும் அதையும் தடுத்துட்டாங்க . அப்புறம் என்னமோ இவங்க கருப்பு பணத்தை எடுத்து நாட்டு மக்களுக்கு கொடுத்திடறா மாதிரிதான் . 50,000 கோடி வரி ஏய்ப்பு செய்யரவனுக்கு ஜாமீன் தரும் நீதி துறை, கஷ்ட்டதுல நஷ்டத்துல லோன் பணம் 10 .000 - ஒரு லட்சம் கூட இருக்காது அதை கட்ட தவரியவனை அவன் நாணயம் தவறிவன் என்று பேப்பர்ல விளம்பரம் தர அனுமதி தந்து ,மிச்ச மீதிய பிடிங்கி நாடு தெருவுல நிக்க வைக்கும் நீதி துறை உள்ள நாடு தானே! இந்த எழவெடுத்த இந்தியா நாடு ........

எது எப்படியோ இந்த கலைஞ்சர் ஆட்சி தொடர்ந்தால் தமிழன் நாடு கடத்தப்படுவான் அல்லது தாய் நாட்டிலேயே குடிஉரிமை இழந்து அனாதையாக அலைந்து கொண்டிருப்பான் . தமிழ் நாடு கலைஞ்சர் நாடாக உருமாறும் . தனி சட்ட திட்டங்கள் தீட்டப்படும் . கொத்தடிமைகள் மட்டுமே வாழும் அவலம் உருவாகும் . வாழ்பவனுக்கு இயற்கையே உத்தரவாதம் கொடுத்தாலும் , இவர்கள் ஆட்சியில் உத்தரவாதம் இருக்காது . காது கிழிய ஜால்ரா சத்தமும் , மானாட மயிலாட என்ன மயங்கும் மங்கைகளின் போதையில் டாஸ்மார்க் குடித்து விட்டு ஒரு ரூபாய் அரிசியை கொதிக்க வைத்து தண்ணிக்கு பதில் குடித்து 30 வயதிலேயே மயானத்தில் இடம் வாங்கலாம் . ஒரு குடும்பம் மட்டும் பல நூற்றாண்டுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் ........

நிதானமாக யோசித்து தெளிவான முடிவெடுங்கள் இந்த ஆட்சி தொடர கூடாது, தொடர்ந்தால் ........................................
சொல்வதற்கும், கற்பனை செய்வதற்கும், எழுதுவதற்கும் கூட முடியவில்லை..... சீட்டு பேரம் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது அடுத்து என்ன வேணாலும் நடக்கும் .......... நடப்பவை நல்லவையாகவே நடக்கட்டு. வருத்தபடமட்டுமே நம்மால் முடியும் என்ற மன வருத்தத்தோடு முடிக்கும் .
அடிமை ஆகிவிடுவோமோ என் அச்சத்தில் இருக்கும் ஒரு தமிழன் ...........

கொசுறு :





ஏதோ நம்மளால முடிஞ்சது .........

கருத்துகள்

  1. //எது எப்படியோ இந்த கலைஞ்சர் ஆட்சி தொடர்ந்தால் தமிழன் நாடு கடத்தப்படுவான் அல்லது தாய் நாட்டிலேயே குடிஉரிமை இழந்து அனாதையாக அலைந்து கொண்டிருப்பான் //

    உங்களை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு...இதுமாதிரி ஓபன் ஸ்டேட் மெண்ட் விடுவதால்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மதுரை சரவணன் @
    உங்கள் வருகைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக