தமிழன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய தொகுதிகள் : (கவனிப்பார்களா ! அல்லது வழக்கம் போலவே தொடச்சி கூவத்துல போட்டுடுவாங்களா ! அவங்க சொரணைய )

இதை சொல்வதற்கு ஈழத்தமிழனை கொன்று குவித்தது மட்டும் முக்கிய காரணம் அல்ல, தமிழனுக்கு எதிராக இந்த சோனியா தலைமையிலான அரசு செய்யும் அட்டுழியம். தாய் தமிழ்நாட்டில் நிம்மதியாக யாராலும் வாழ முடியவில்லை , மீனவன் கடலில் மீன் பிடிக்க முடியவில்லை சுண்டக்காய் நாடு இலங்கைக்கு வெஞ்சாமரம் வீசிக்கொண்டிருகிறது . கேட்டால் சீனா, பாக்கிஸ்தான் பயமுறுத்துகிறது என்ற நொட்டை சாக்கு வேரு , இதற்கெல்லாம் காரணம் யாரு. நீங்கள் தானே !.

ஈழத்தமிழனுக்கு உதவி இருந்தால் அல்லது எல்லாத்தை மூடிகிட்டு சும்மா இருந்திருந்தாலே இந்த நிலை இன்று வந்திருக்காது . உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும். ஆனால் இப்ப நிலமை தலை கீழ் இப்பவும் பாதிக்கறது தமிழன்தான் . இப்ப தாய் தமிழ் நாடு .

சோனியா தலைமை இருக்கும் வரை இதே நிலைமை தான் தமிழனுக்கு . அவங்களுக்கு அவங்க ( ஊழல் , கொள்ளை , கருப்பு பணம் , வரி ஏய்ப்பு இன்னும் பல வகையில் ) கல்லா கட்டினாலே போதும். மக்களை பற்றியோ , நாட்டை பற்றியோ , நாட்டு பாதுகாப்பை பற்றியோ , விலை வாசி உயர்வு பற்றியோ அல்லது அடுத்த நாட்டின் வஞ்சகத்திற்கு அடி பணியாமல் துணிந்து நிற்கும் தைரியமோ இல்லாத ஒரு சுயநல பண முதலைகள் . அவர்களுக்கு பணம் படைத்தவன் , கோடிகளை கொட்டி(பெட்டி ) கொடுப்பவனின் நலன் மட்டுமே முக்கியம் , அவர்களுக்கு ஒரு குறையும் ஏன் மன சங்கடத்தையும் கூட வர விட மாட்டார்கள் .

தப்பி தவறி ஏதாவது வெளிய தெரிஞ்சிட்டா அல்லது எல்லாரும் காட்டு கத்து கத்தினா, முடியாத கட்டத்துல பதவி ராஜினமா நாடகம் அரங்கேறும் (அவன் தான் ஏழு தலைமுறைக்கு அடிச்சிட்டனே!, அப்புறம் எதுக்கு அவனுக்கு பதவி ஜாலியா அடிச்ச பணத்துல வாழ்க்கைய அனுபவிக்க போயிடுறான் ). இன்னொரு காமெடியும் இப்ப நடக்குது , உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவிச்சா அந்த தவறுக்கு பிரதமர் பொறுப்பேத்துகுவாறாம். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம ( அப்படின்னா என்னன்னு கேட்குறாரு நம்ம மன்மோகன் சிங் ) . நீங்க அதற்காக குறைஞ்ச பட்சம் பதவி விலகியாவது இருந்திருக்கணும் . நீங்க பொறுப் பேத்துகரதாலையோ மந்திரிங்க ராஜினமா பண்றதாலையோ பாதித்த அப்பாவி நாட்டு மக்களுக்கு என்ன பலன் .

இந்த காங்கிரஸ் அரசு இருக்கும் வரை ஊழல் மலிவாக நடந்து கொண்டேதான் இருக்கும் . இதை பெரியதாக கண்டு கொள்ளாத மக்களால் , மாநில கட்சிகளுக்கும் பல ஆயிரம் , லட்சம் கணக்கிலான கோடிகளில் ஊழல் செய்ய தைரியம் வந்திருகின்றது .........

மக்கள் தான் சிந்திக்க வேண்டும் , இது நடந்துக் கொண்டுதான் இருக்கும் இது ஒரு தொடர்கதை என்று வாதிடும் மூடர்களே ! உங்கள் எதிர்ப்பையாவது காட்டுங்கள் அப்பயாவது வீட்டை காலி பண்ணாம பொருளமட்டுமாவது கொள்ளையடிப்பாங்க . வீடே( நாடே ) இல்லாம என்னத செய்ய போறீங்க மக்கா?
யோசிச்சி முடிவெடுங்க ...... உங்களால் முடியும் .........

நமக்கும் (மக்களுக்கும் ) நாட்டிற்கும் கொஞ்சமாவது நல்லது நடக்கறா மாதிரி முடிவெடுங்க ....... அம்புட்டுதான் ...... ஏதோ சொல்லனுமுன்னு தோணுச்சி அவ்வளவே ! எல்லாரும் யோசிக்க ஆரபிச்சிட்டாங்கபா ....... ஏதோ நம்மால முடிஞ்சது ...........

இந்த கோழி மாதிரித்தான் மக்களும் தினம் தினம் நெருப்பு(வாழ்க்கை ) வலையதுகுள்ள போய் போய் செத்த பிணமா ஆயிகிட்டு இருக்கான் .....



செய்தி :
சென்னை
: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்
குறித்த விவரம் இன்று வெளியானது.

முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் இடையே இன்று இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் உடன்பாடு கையெழுத்தானது. இதையடுத்து தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

  1. திருத்தணி
  2. பூந்தமல்லி (தனி)
  3. ஆவடி
  4. திரு.வி.க.நகர் (தனி)
  5. ராயபுரம்
  6. அண்ணா நகர்
  7. தியாகராய நகர்
  8. மயிலாப்பூர்
  9. ஆலந்தூர்
  10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  11. மதுராந்தகம் (தனி)
  12. சோளிங்கர்
  13. வேலூர்
  14. ஆம்பூர்
  15. கிருஷ்ணகிரி
  16. ஓசூர்
  17. செங்கம் (தனி)
  18. கலசப்பாக்கம்
  19. செய்யாறு
  20. ரிஷிவந்தியம்
  21. ஆத்தூர் (தனி)
  22. சேலம் வடக்கு
  23. திருச்செங்கோடு
  24. ஈரோடு மேற்கு
  25. மொடக்குறிச்சி
  26. காங்கேயம்
  27. உதகை
  28. அவிநாசி (தனி)
  29. திருப்பூர் தெற்கு
  30. தொண்டாமுத்தூர்
  31. சிங்காநல்லூர்
  32. வால்பாறை (தனி)
  33. நிலக்கோட்டை (தனி)
  34. வேடசந்தூர்
  35. கரூர்
  36. மணப்பாறை
  37. முசிறி
  38. அரியலூர்
  39. விருத்தாச்சலம்
  40. மயிலாடுதுறை
  41. திருத்துறைப்பூண்டி (தனி)
  42. பாபநாசம்
  43. பட்டுக்கோட்டை
  44. பேராவூரணி
  45. திருமயம்
  46. அறந்தாங்கி
  47. காரைக்குடி
  48. சிவகங்கை
  49. மதுரை வடக்கு
  50. மதுரை தெற்கு
  51. திருப்பரங்குன்றம்
  52. விருதுநகர்
  53. பரமக்குடி (தனி)
  54. ராமநாதபுரம்
  55. விளாத்திகுளம்
  56. ஸ்ரீவைகுண்டம்
  57. வாசுதேவநல்லூர் (தனி)
  58. கடையநல்லூர்
  59. நாங்குனேரி
  60. ராதாபுரம்
  61. குளச்சல்
  62. விளவங்கோடு
  63. கிள்ளியூர்

கருத்துகள்