ஜெயலலிதாவின் உண்மை முகம் ( சுயநலத்தின் உச்ச கட்டம் )

அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?-பெரும் குழப்பத்தில் மதிமுக, சிபிஐ. மூன்றாவது அணி அமையுமா ?
இது செய்தி ஆனால் உண்மை நிலை என்ன வென்று ஆராய்ச்சி செய்தால் ஜெயலலிதாவின் உண்மையான முகம்(ஜெயலலிதாவின் உண்மை முகம் தான் முதலமைச்சர் பதவி வெறி,யாரையும் மதிக்காத குணம் ) பட்டவர்த்தனமாக தெரியும் . சுயநலத்தின் மொத்த முகமாக விளங்குவதாகவே தெரிகின்றது .
கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்காக தனது ஈழ தமிழர் பிரச்சணையை கையில் எடுத்தார் , வீரா வேசமாய் எல்லாம் பேசினார் . பிறகு அதை தூக்கி குப்பையில் போட்டார் . ஏன் ?
அடுத்தது சட்ட சபை தேர்தல் எப்படியாவது காங்கிரசை தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, எங்கே இருக்கிறது உங்களுக்கு கொள்கை கேட்பாடு எல்லாம் . இப்போது ஈழ தமிழன் பேச்சையே காணோமே என்ன ஆனது ?

2 ஜி விசயத்தில் தி.மு.க.வைமட்டுமே சாடிய ஜெயலலிதா ஊழலின் மொத்த எஜமானனாக விளங்கும் காங்கிரசை விட்டு விட்டது ஏன் ?

உழலை எதிர்ப்பதென்றால் முதலில் காங்கிரசை எதிர்க்க வேண்டும் . அடுத்து உடந்தையான ( முக்கால் பாகம் ) தி.மு.க .வை எதிர்க்க வேண்டும் . ஏன் செய்யவில்லை . அடுத்தடுத்த ஊழல் புகாரில் சிக்கிய மத்திய காங்கிரஸ்சை நீங்கள் எதிர்க்காதது( பலமாக ) ஏன் ?

அடுத்து உங்களுக்கு உண்மையில் தமிழன் மீது பற்றிருந்தால் கொன்று குவிக்க காரணமான காங்கிரஸ்சை ஏன்? உங்களுடன் கூட்டணி சேர்க்க துடிக்கின்றீர்கள்

உங்களுக்கு
ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பது கூட தப்பில்லை அதற்காக உங்களுடன் இவ்வளவு நாள் இருக்கும் கூட்டணி கட்சிகளை தவிர்த்து விட்டு ( அவமதித்து விட்டு ) புதியதாக வரும் கட்சிகளுக்கு சீட்டுகளை கொடுப்பது , கூட்டணி கட்சி உடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் விட்டு விட்டது .மிச்ச மீதி ஏதாவது இருந்தால் கொடுக்கலாம் அல்லது கழட்டி விடலாம் என்று நினைப்பது .

எப்படி
உங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் ....
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் கண்டிப்பாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஏதோ தி.மு.க .& காங்கிரஸ் மீது இருக்கும் கடுப்பு தான் வேரு வழி இல்லாமல் உங்களுக்கு விதியே என்று வாக்களிப்பார்களே தவிர , உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை இல்லை . கூட்டணி கட்சிகளையே மதிக்க தெரியாதா தலைவி ?

இப்படி நீங்கள் நடந்து கொள்வதால் கூட்டணில் இருப்பவர்களே ! உங்கள் காலை வாரிவிடுவார்கள் நினைவில் வைத்து கொள்ளவும் .

உங்களை( ஜெயலலிதா ) பற்றி தெரிந்ததால் தான் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. உங்களை பார்த்தாலே தலைதெறிக்க ஓடுறாங்கோ !

தமிழ்நாட்டு மக்களுக்கு தான் நேரம், விதி சரி இல்லை . ஒரு நல்ல தலைவன் கிடைக்க மாட்டேங்கறான் (அது சாரி என்னமோ எல்லா இடத்திலும் நல்ல தலைவன் இருக்குறா மாதிரி நீங்க புலம்புவது எனக்கு கேட்கின்றது ).
ஏமாளி ( இளிச்ச வாயன்) தமிழனாக இருந்தவன் இப்ப என்னமோ கொள்ளை அடிப்பவன் கூடாரமாக(மாறி ) முன்னேறி இருக்கு தமிழகம் .

இன்னும் தேர்தல் முடியறதுக்குள்ள என்ன என்னவெல்லாம் நடக்குமோ! இப்பவே கண்ணா காட்டுதுடா சாமீ .....

கருத்துகள்

  1. நிறைய எழுத்துப்பிழை....

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி, ஆமாம் நிறைய தவறுகள் இருந்தது முடிந்தவரை திருத்தி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக