அர்த்தம் விளங்கா (காதலர் தின) போராட்டம் .......

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்திய இந்து முன்னணியினர்

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல , இநது முன்னணி நண்பர்களே !
நீங்க என்ன சொல்லவரீங்க அல்லது எதை கண்டிச்சி ஆர்பாட்டம் நடத்தினீர்கள் ?
காதல் தினத்தை கண்டித்தா ?,
காதலை கண்டித்தா ?, காதல் என்ற பெயரில் முகம் சுளிக்கம் காம விளையாட்டையா ? அல்லது பெற்றோர்கள் பார்த்து , சொந்தங்களை அழைத்து மந்திரங்கள் ஓதி , இசை இசைத்து சாரட்டு வண்டியில் பவனி வந்து மணமுடிக்கும் திருமணத்தையா ? கொஞ்சம் புரியலபா எனக்கு ,

யாருக்காவது புரிந்தால் தயவு செய்து சொல்லவும் . உங்கள் எதிர்ப்பை சொல்லுங்கள் அதை தெளிவாக யாருக்கு , எதற்கு எதிராக என்று புரிந்து காட்சிகளை அரங்கேற்றுங்கள் . நீங்கள் செய்திருக்கும் செயல் யாரை புன்படுத்துகின்றீர்கள்( 2 நாய்களை அலங்கரித்து 2 குதிரைகளில் ஊர்வலமாக அழைத்து வந்து மந்திர முழக்கத்தோடு அவைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்). இத செயல் எதை சித்தரிக்கின்றது நீங்களே சொல்லுங்கள் .........

1. பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் (காதல்) நாய் காதலுக்கு சமம் என்கின்றீர்களா ?

2. அடுத்து உங்கள் கருத்திற்கே வருகிறேன், நீங்கள் காதலர் தினம் கொண்டாடுவதை எதிர்கின்றீர்களா ? அல்லது அன்று அரங்கேறும் காம விளையாட்டை எதிர்கிறீர்களா ?

3. அப்படி என்றால் இநது மதமோ , இஸ்லாமிய மதமோ , கிருஸ்துவ மதமோ (நான் எந்த மதத்திற்குள்ளும் செல்ல வில்லை ) , உணர்வோ , நினைவோ , பிறந்த நாளோ அதை கொண்டாடுவதில் தவறில்லை என்பது என் வாதம் .
கொண்டாடும் முறை அடுத்தவர்களை முகம் சுழிக்க வைக்க கூடாது , இதை சுட்டி காட்டுங்கள் தவறில்லை ..... அதை விடுத்து ஒட்டு மொத்தமாக காதலர் தினம் கொண்டாடுவதே தவறென்பது ஏற்றுக்கொள்ளும் படிஇல்லை ......

4. எதிர்ப்பு என்ற பெயரில் உணர்வுகளிலும் அரசியல் செய்யாதீர்கள் . காதலர் தினம் கொண்டாடுவது தவறென்றால் , அனைத்து தினங்களும் தவறே ( எயிட்ஸ் தினம் , அன்னையர் தினம் , தலைவர்கள் தினம் , தந்தையர் தினம் இது நீண்டு கொண்டே போகும் ......)

5. காதல் என்ற பெயரில் கடை தெருவில் செய்யும் காமத்தை வன்மையாக கண்டிகின்றேன் . ஆனால் காதலர் தினத்தை ஆதரிகின்றேன் ........
இந்த கடைத்தெரு காம களியாட்டங்கள் தினம் தோறும் அரங்கேறிகொண்டிருகின்றன.. அன்று ஒரு நாள் மட்டுமே அல்ல .....

6. திரைப்படங்கள் சித்தரிக்கும் காதல் காட்சிகள் தான் இதற்கு முதற் காரணம் , காதல் என்றாலே கட்டிப்பிடிப்பதில் ஆரம்பமாவதாக சொல்ல படுகின்றது . பின்பு காமம் காதலில் ஒரு முக்கிய விசயமாக காட்சிகள் சித்தரிக்க படுகின்றது .( காமம் காதலில் ஒரு அங்கமே ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும் )

7. இன்றைய இளைய சமுதாயத்தை குறை சொல்லி பயனில்லை .... வழி காட்டுதல் சரியாக அமைய வேண்டும் . நம் சமுதாயம் அதை செய்கின்றதா ?

8.இப்பொழுது திரை அரங்கம் சென்று இதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ,
பள்ளிகள் முதற் கொண்டு ( ஸ்கூல் டே என்ற பெயரில் நடை பெரும் திரை பட நடன நிகழ்ச்சிகள் ), வீட்டில் வரவேற்பரையில் அனுமதி இல்லாமல் வந்து விட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகள் .... மானாட மயிலாடவே இதற்கு முதலிடம் .. மற்ற நிகழ்ச்சிகளும் இதை பின்பற்றியே ( கெட்டு குட்டிச் சுவரா போச்சி) வீட்டில் அனைத்து வயதினரும் அமர்ந்து பார்க்க முடிய வில்லை அல்லது பழகி போய் விடுகிறது . ஹோஓஒ இதுதான் சமுகம் போல என்று எண்ணத்தையும் , கூச்சத்தையும் விட்டு விலக்கி விட்டது இளைய சமூகத்திடம் ....

9. மாறி வரும் இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு சில விசயங்களை தவிர்த்து அனைத்தையும் காது கொடுத்து கேட்டு, நாசுக்காக நல்லது கெட்டதை சொல்லி வந்தால் பிள்ளைகள் உங்கள் உடனே நண்பனாக உணருகளை பகிந்து கொள்ளும்,
நீங்கள் முகம் சுளித்தாலூ அல்லது கடுமையாக தண்டிப்பதாலோ எல்லாம் மாறி விடாது . மாறாக அதை அறிந்து கொள்வதிலும் , உங்களை எதிர்பதாக நினைத்து தான் வாழ்க்கை பாதையை கெடுத்து கொள்ளதுமே நடக்கும் .........
யோசித்து எதிர்ப்பை காட்டுங்கள், உங்களுடன் குரல் கொடுக்க சமூக நல விரும்பிகளும் தயாராக இருப்பார்கள் ..................... சிந்தியுங்கள் ...

செய்தி :
சென்னை: இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. ஒரு பக்கம் காதலர்கள் கொண்டாட்டம், மறுபக்கம் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்கள் என சென்னை மாநகரம் பரபரத்தது.

காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதனப் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்து முன்னணியினர் முன்னிலை வகித்தனர். அவர்கள் 2 நாய்களை அலங்கரித்து 2 குதிரைகளில் ஊர்வலமாக அழைத்து வந்து மந்திர முழக்கத்தோடு அவைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்த நூதன திருமண விழாவில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காதலர் தினத்தை கொண்டாட தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள்

  1. காதல் என்ற பெயரில் கடை தெருவில் செய்யும் காமத்தை வன்மையாக கண்டிகின்றேன் .


    ... இப்படியெல்லாம் தெருவிலேயே நடக்க ஆரம்பிச்சாச்சா? "கண்கள் இரண்டால் ......" ஸ்டைல் முடிஞ்சுதா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக