மக்களே எலக்சன் வேணான்னு மட்டும் சொல்லிடாதீங்கோ !

என்னமோ போடா மாதவா ! எப்படிடா உன்னால மட்டும் முடியுது எல்லாத்தையும் சகிச்சிக்க)... என்னமோ போடா .......... . மக்கா புரியலையா? இது ஜனகராஜ் அண்ணாநகர் முதல் தெரு படத்துல அடிக்கடி அவரு தனக்கு தானே பேசிக்குவாரு ..............
இந்த நிலைமைதான் இன்றைய நாட்டு மக்கள் நிலைமை .........
தீர்வு(நீதி தாங்கோ ) கேட்கும் ஆளுக்கு அதற்கு தகுதி இருக்கனுமில்ல, இது நாம துணை முதல்வர் கேள்வி , அதெல்லாம் சரிதான் . நாங்க ஊழல் பண்ணா உங்களை எதுவும் கேக்க கூடாதா ? இது நம்ம முன்னால் சி.எம்முங்கோ ....

வாதம் எல்லாம் சரிதான் , இந்த சின்ன ஊழல்( அரசியல்வாதிகளுக்கு ) கூட தீர்வு வராம எவ்வளவு நாளுதான் இழுத்தடிப்பீங்க . இது மக்கா நம்ம புலம்பல் ,
பாவம்
மேடம் கொஞ்சம் கலக்கத்துல தான் இருக்காங்க எலக்சன் வர இன்னும் ஒரு நாலு மாசந்தான் இருக்கு அதுக்குள்ளார ஏதாவது கேசுல தீர்ப்பு வந்து தொலைச்ச நிலைமை கஷ்ட காலமா மாறிடுமோ ? அப்படின்னு பாவம் பயபடுறாங்க .......

என்ன சொல்லி வோட்டு கேட்க முடியும் , இப்படி வச்சிக்குவோம் ..

1. 1.76 லட்சம் கோடி ஊழல் எங்கே ? சில நூறு கோடி எங்கே சிந்திப்பீர் வாக்கால பெருமக்களே ? வாக்களிப்பீர் !

2. பெரிய குடும்பத்தை பாரீர் ! என்னுடைய சிறிய ( சசிகலா மட்டும் ) குடும்பத்தை பாரீர் ! வாக்களிப்பீர் !

3. மனைவி, துணைவி , பிள்ளைகள் , பேரன்கள் ,பேத்திகள் , ............ இப்படியே நீண்ட பெரிய குடும்பம், எல்லாருக்கும் தனித்தனியே கோடிகணக்கில் (ஆட்டைய போட்ட) சொத்து என்னகில்ல , எதோ போயர்ஸ் காடன் , கொடைக்கானல் , ஹைதராபாத் , கர்நாடகா அப்படின்னு கொஞ்சபோல எனக்கும் , தோழிக்கும்
மட்டும் சொத்து இருக்கு , வாக்களிப்பீர் .

4 . எதை செஞ்சாலும்(ஊழல் , கொள்ளை) செஞ்சாலும் வெளிப்படையா தான் செய்வேன் எல்லா மந்திரிகளையும் கூட்டு சேத்துகுவேன். கொள்ளை அடிச்ச பிறகு, அதை தெரியாம பதுக்க தெரியாது ...சயன்டிபிக் ஊழல் எல்லாம் செய்ய தெரியாது வாக்களிப்பீர் .

5 எதோ எலக்சனுக்காக தமிழ் ஈழம் அப்படினாவது குரல் கொடுத்தேன். அதை கூட செய்யாத மைனாரிட்டிக்கா உங்கள் வாக்கு ............ வாக்களிப்பீர்

6. எதோ ஒருமுறை தெரியாம அரசு ஊழியர் மீதி நடவடிக்கைக்னு கொஞ்சம் விளையாடிட்டாத சொன்னாங்க .. இப்ப திருந்திட்டேன் . நீங்க தான் வோட்டு பூத்துல உட்காருவீங்கன்னு முன்னமே யாரவது சொல்லி இருந்த இப்படி எல்லாம் செய்திருப்பேனா ? வாக்களிப்பீர் !.
7. இனி என் பேர எல்லாத்துக்கும் வைக்க மாட்டேன் , நீங்களே பார்த்து ஏதாவது டெய்லி பாராட்டு விழா, பட்டமுன்னு குடுத்தீங்கன்னா போதும் . நானா கேட்க மாட்டேன் . வாக்களிப்பீர் !.

8. கொள்ளை அடிக்கும் போது கண்டிப்பா இனி மத்திய அரச கூட்டு சேத்துகுவேன்!
தனியா கொள்ளை அடிச்சி மாட்டிக்க மாட்டேன். அப்படியே கொள்ளை அடிச்சாலும் வேலில தெரியாம பாத்துகிறேன் வாக்களிப்பீர் !
9. குறிப்பா இனி டெல்லிக்கு போகவே மாட்டேன் லெட்டர் மட்டும் எழுதுவேன் .
எதுக்கும் தோழி சசிகலா விடம் கேட்டுட்டு மறுபடியும் சொல்றேன் .
இல்ல இல்ல அவங்களா வீட்டுல விட்டுட்டு வரேன் நம்புங்க, வாக்களிப்பீர் !

இப்படியும் கூட வாக்கு கேட்க தோணலாம் ( எல்லாம் என் கற்பனையே )இப்படி அடிக்கி கொண்டே போகலாம் !. பாவம் நாம்தான் ,கொள்ளைல எந்த கொள்ளை கம்மியா இருக்குனா ? கணக்கு போட முடியும் !

மொத்ததுல இன்றைய நிலையில எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் இல்லை என்பது தான் எதார்த்த உண்மை . சிலருக்கு வாய்ப்பு கிடைச்சி இருக்கு , சிலருக்கு வாய்ப்பு கிடைக்கல அவ்வளவு தான் ,அதுனால மத்தவங்களுக்கு(ஜெலிசில்) தான். அட வைத்தெரிச்சல் தான் . யாரு வந்தாலும் கொள்ளை கொள்ளையா தான் போக போகுது . ஒன்னுவேணா செய்யலாம், யாரு கம்மியா கொள்ளை அடிச்சி , கொஞ்சமாவது அதுல நல திட்டம் செய்யறாங்க அப்படின்னு பாக்கலாம் .

இல்ல யாருக்கும் மொத்தமா டெண்டர் விடமா ? . மாத்தி, மாத்தி வோட்டு போடலாம் . என்ன ? அவங்க அடிச்ச கொள்ளையாவது மக்களுக்கு தெரிய வரும் .
மக்கள் ஆட்சி போய் மன்னர் ஆட்சிக்கு வழி விடாம ஆட்சி மாற்றம் செய்துகிட்டே இருக்கலாம் . மக்கள் கிட்ட இருக்கிற வோட்டு போடுற உரிமையையாவது தக்க வச்சிக்கலாம் . அட நீங்க வேற சின்ன புள்ள தனமா பேசிகிட்டு (அப்படின்னு நீங்க சொல்றது என் காதுக்கு கோக்குது) . அட அப்பயாவது எதோ கொஞ்சம் கருப்பு எல்லாம் வெளுக்கறாங்க . வோட்டுக்கு காசாவது கிடைக்குது யாரு சும்மா குடுப்பாங்க , யோசிச்சி பாருங்க எலக்சன் மட்டும் இல்லாம இருந்துதுன்னா ? . ஹயோ ! நாம எல்லாம் இந்நேரம் அவங்க (அரசியல் மாமன்னர்கள் அதாவது திறமைய கொள்ளை அடிக்க தெரிஞ்சவங்க) கொத்தடிமைய , எல்லாத்தையும் இழந்து ஜால்ரா போட்ட மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைமைக்கு ஆளாயிடுவோம். எதிர்த்து பேசினா இல்ல உண்மைய சொன்ன உடனே தூக்கு தான் ( விக்கி லீக்ஸ் நிறுவனர் நிலைமை இன்று இதுதான் ) .

அதனால மக்களே எலக்சன் வேணான்னு மட்டும் சொல்லிடாதீங்கோ !
அரசியல்வாதிங்க குஷி ஆயடுவங்க . அடிச்ச கொள்ளை எல்லாம் அப்படியே சொத்தாயிடும். நாம தலைய பிச்சிகிட்டு நிக்க வேண்டியதுதான்.
எல்லாரும் வோட்டு போடுங்க சிந்திச்சி ( இத நானே சிந்திச்சேன்) அதுக்காக நீங்க ரூம் போட்டெல்லாம் சிந்திக்க வேணாம் . பார்த்து குத்துங்க வோட்ட சாரி இப்ப அழுத்துங்க ( வோட்டு மெசின் தானே)

படிச்சிட்டு டென்ஷன் ஆனவங்க எல்லாம் வோட்டு போட்டுட்டு வாங்க ரூம்போட்டு எப்படிஎல்லாம் அடிக்கலாமுன்னு யோசிச்சி முடிவு பண்ணிக்கலாம். அங்க எதோஆட்டோ வராமாதிரி தெரியுது விடு ஜூட் ........
..

செய்தி : குவிப்பு வழக்கு-ஒரு பாராவை திருத்த 6 மாதம் அவசாகம் கோரிய ஜெ!


பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:

முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு ௧ கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்