வேறு தொழில்களுக்கு..............

"என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் , ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் , உயரும் உன் மதிப்பு வெளி நாட்டில் " இது எம். ஜி. ஆர். படத்துல வாயசச்சி நடிச்ச பாடல் வரிகள் ... பார்த்துட்டு நம்மளும் ஆஆ ஓஒ அப்படின்னு வாய பிளந்துட்டு இருந்துட்டான் .

இந்த வரிகளில் இருந்த உண்மையை ஏனோ நடிகர்கள் மீதிருந்த மோகத்தில் மறந்து போனதாகவே தெரிகின்றது . படிக்காத கிராமத்து விவசாயி வேர்வை சிந்தி வயலில் வேலை செய்து விளைவிக்கும் எந்த பொருளுக்கும் அவன் விலை வைக்க முடிவதில்லை முதற் காரணம் , அதனால் கிடைக்க வேண்டிய நாயமான வருமானம் கிடைக்க வில்லை . இன்னும் காரணங்கள் பல உண்டு.

இன்று இதன் காரணமாக, தான் படிக்காததால் தான் இந்த நிலை என்று நினைத்து தன் வாரிசுகளாவது படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விவசாயத்தை தவிர்க்கின்றனர் . இதற்கு முழு பொறுபேற்பது யார் ? , அரசாங்கமா , அப்படி ஒன்று நம் நாட்டில் இருந்தால் தானே சொல்வதற்கு . தன் மக்களை கொன்று அதன் மீதி தொழில்சாலை அமைத்து வெளிநாட்டவன் சம்பாதிக்க விலை நிலங்களை தாரை வாக்கும் அரசாங்கங்கள் அல்லவா நம்மை ஆண்டுக்கொண்டிருகின்றது .

உழவன் சேற்றில் கால்வைத்தால் தான் நமக்கு உணவு என்று தெரிந்தும்
மெத்தன போக்கு , அம்பானிக்கு தலை முடி ஒன்று விழுந்து விடுவது போல் கனவு கண்டாலே அலறி அடித்து கொண்டு ஓடும் நிதித்துறை அமைச்சகம் , விவசாயி வாங்கின பயிர் கடன் வட்டி காட்ட முடியாமல் தற்கொலை செய்யும் போது வேடிக்கை பார்ப்பது வினோதமே வேதனையே !.

அதன் பலனை இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம் , ஒவ்வொரு உணவு பொருள்களுக்கும் அண்டை மாநிலம் , அண்டை நாடுகளிடம் கை ஏந்தும் அவலம் . இந்த போக்கு தொடருமேயானால் உணவு புரட்சி வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை . நீங்கள் பணத்தை தான் (காகிதம் ) தின்ன வேண்டும் கழுதைய போல .......

அப்போதும் அரசியல்வாதியும் , பெரும் பண முதலைகளும் தப்பித்து கொள்கின்றனா பணத்தை காட்டி சாதித்து கொள்கின்றனர் . பாதிப்பு என்னவோ ஏழை நடுத்தர பாவப்பட்ட மக்களுக்கே ( காரணம் மான, அவமானம் எல்லாம் இவர்களுக்காகவே பிறந்தைவை ) . கோடிகளை கொள்ளை அடிச்சவன் கொக்கரிக்கரன் வெளியில, டி .வி லா வெக்கமே இல்லமா பேட்டி கொடுக்கறான்.வாங்கின பயிர் கடன் வட்டி காட்ட முடியாம தூக்குல தொங்குறான் விவசாயி.

இந்த நாட்டுல எப்படி விவசாயி பிழிப்பான் . அதான் வந்த வரை லாபன்னு ரியல் எஸ்டேட் காரன்னுங்க விரிக்கிற வலையில மாட்டிக்கறான் விவசாயி . எந்த ஒரு விவசாயியும் விரும்பி நிலங்களை விக்கறதில்ல. தொடரும் கொடுமைகள் தான் காரணம் . போதுமான விழிப்புணர்வு அரசிடமோ , அல்லது அதை வழி நடத்தும் அரசு அதிகாரிகளிடமோ இல்லை மாறாக அலைச்சியமே நீடிப்பதால் இந்த தொடர் தற்கொலைகளும் , விலை ஏற்றமும் தவிர்க்க முடியாததாகி விடும் என்பதை இறுகிய மன வருத்ததோடு இங்கே பதியம் போடுகிறேன் .

செய்தி : விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.


இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.


இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, "விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


"கடன் தள்ளுபடி' திட்டம் கண்துடைப்பு : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும். - என்ன கொடும சார் இது என்று புலம்பும் ஒரு பாமர மனிதன்

கருத்துகள்

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு... மனமார்ந்த பாராட்டுக்கள்... உங்கள் சேவை தொடரட்டும்...


    பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    Please remove tamil ulagam vote bar... it will slow down ur site...

    பதிலளிநீக்கு
  2. Philosophy Prabhakaran @ thanks friend sure now remove it . once again thanks for ur comment .
    நான் வராமலா வந்து ஒரு குத்தாட்டம் போட்டுட்ட போகுது

    பதிலளிநீக்கு
  3. அருமையாக எழுதி உள்ளீர்கள் நண்பா, கடன் தள்ளுபடி திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களே, அதிலும் ஏழை விவசாயிக்கு கிடைத்தது பட்டை நாமம்தான், எங்கள் ஊரில் எனக்கு தெரிந்து யாரும் கடன் தள்ளுபடி பெற்றதாக தெரியவில்லை, தொடர்ந்து எழுதுங்கள் நண்பா ...

    பதிலளிநீக்கு
  4. இரவு வானம் @
    வருகைக்கு,கருத்திற்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக