உதட்டு புன்னகையில் பொங்கலோ! பொங்கல் !



வேர்வை சிந்தி உழுவோனை
காக்கும் கடவுள் கதிரோனே !
பச்சை சேலைக் கட்டிய காடு எல்லாம்
தரிசா போச்சே கொடிய மருந்தாலே
மிச்ச மீதி இருந்ததெல்லாம்
கட்டிடமா களவுபோச்சி பணத்தாலே !
நெல்லு வெளைஞ்ச பூமில இன்று,
நெஞ்சை பிளக்கும் அழுகுரலே !
உழுது உழைத்த காளை எல்லாம்
இப்ப அடிமாட போகும் நிலைதானே!
நிலத்து நெல்ல பொங்கல் வச்சி,
கருப்பு ரெண்டு அழக நிறுத்தி,
மஞ்சள் செடிய சாட்சி வச்சி ,
தலைகளிலே கிரிடம் கட்டி ,
சுற்றத்தையும் கூட வச்சி ,
பொங்கி வரும் மகிழ்ச்சியாலே
பொங்கலோ பொங்கல் என்ற
பொங்கல் எங்கே ?
ஒத்த ரூபா அரிசி போட்டு ,
புத்தாடைக்கட்டி , பொங்கல் வைக்க,
பொருளெல்லாம் ஓசி வாங்க
வருச நின்னு கூனி குறுகி
வைத்த பொங்கல் நன்றோ தமிழா ?,
உழைச்ச காசு வீடு வராம,
வழி நெடுக மதுக்கடைய நட்டு ,
வழிபறிதான் நடக்குது இன்று.
வயித்து பசி போக்குறவன் ,
வயித்துக்குதான் ஈரத்துணி,
வாய் கிழிய பேசுறவன் ,
தொந்தி சுமக்க வரிபணமோ .
வறியவனின் வாழ்க்கை இப்போ,
நாதியற்று போச்சுது,
தமிழனுக்கு வந்த விதி
இப்படியா ஆகானும் .
தானியங்கள் விளையாம
கையேந்தி நிக்குறோம் .
டாஷ்மார்க்க குடிச்சிபுட்டு
அகல் விளக்கேற்ற சொன்னதெல்லாம்
தலைக்கி வச்சி ,
படையில படுக்கதானோ ? ,
எதுக்குன்னு விளங்காம,
விக்கிதான் நிக்குறோம் .
தனமானம் போச்சி இப்போ ,
தமிழனுடைய வாழ்க்கையில,
உள்ளுக்குள்ள எரிஞ்சாலும்
உதட்டு புன்னகையில்
பொங்கலோ! பொங்கல் !
- கவிதை பூக்கள் பாலா

கருத்துகள்

  1. வருத்தமா தான் இருக்கு... இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்கள்... வேறென்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ,
    உதட்டு புன்னகையில்
    பொங்கலோ! பொங்கல்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக