எரியும் நெருப்புல புடுங்கின வரை லாபம் . என்று நினைக்கும் தி.மு.க .

நெந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் மத்திய அரசும் , மன்மோகன் சிங்கும் , ஏதாவது செய்து அரசின் கெட்ட பெயர்களை மூடி மறைக்க முடியுமா ? என்று முடிந்த வரை முயன்று பார்த்து , தோற்று போகவே மத்திய அமைச்சரவை மாற்றம் என்ற முடிவுக்கு போயிருக்கிறது .

என்ன மாற்றி, என்ன பயன் தொடரும் ஊழல்களும், வக்கற்ற ஆட்சி முறைகளும், தவறான வெளியுறவுக்கொள்கையும், தொடரும் விலைவாசி உயர்வுகள் , திராணி இல்லாத தெளிவற்ற அறிக்கைகள் மக்கள் ம
னதில் குழப்பத்தையும் , ஆத்திரத்தையும் இந்த அரசு மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது .

உலக அரங்கி ஒவ்வொரு இந்தியனையும் வெட்கி தலைகுனி
ய செய்திருக்கும் மெகா உழல்களை அடுக்கிகொண்டே போகலாம் . ஒவ்வொரு நாளும் புதுப் புது தலைவலிகளை சந்தித்து வரும் அரசு இப்போது ஏதாவது தில்லு முல்லு செய்து யாரையெல்லாம் அமைச்சரவையில் கழட்டி விடலாம் என்று யோசித்து இதுதான் சரியான நேரம் , சட்டசபை தேர்தல்கள் நெருங்கி கொண்டிருப்பதை கருதில் கொண்டு தனது அரசியல் காய் நகர்த்த முனைதுள்ளதாக தோன்றுகிறது .

இதை உணர்ந்த தி .மு.க . பறி போன ஒரு மத்திய மந்திரி பதவியை எப்படியும் வாங்கிவிடுவதென்று இத்தனை
அசிங்கங்களுக்கும் பிறகும் திமுக கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு புகார் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை பதவி விலக வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ். ஆனால் ராசாவை பதவி விலக வைக்க, திமுக தலைவர் கருணாநிதியை அத்தனை சுலபத்தில் இணங் வைத்துவிடவில்லை காங்கிரஸ்.

மீண்டும் திமுகவை சேர்ந்த ஒருவருக்கு கேபினட் அந்தஸ்திலான மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் பேரிலேயே ராசாவை பதவி விலக வைத்தார் கருணாநிதி.

ஆனால் ராசாவின் பதவி விலகல் கடிதத்தை வாங்கியதுமே, காங்கிரஸ் கட்சி அதிரடியாக கபில் சிபலிடம் ராசா வகித்த தொலைதொடர்பு இலாகாவை ஒப்படைத்தது. கூடவே இந்த இலாகா இனி திமுகவுக்கு தரப்படாது என்று கருணாநிதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், ராசாவுக்கு பதிலாக திமுகவில் வேறொருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்வைத்தபோது, பார்க்கலாம் என தட்டிக்கழித்துவிட்டது காங்கிரஸ்.
இப்பொழுது காங்கிரஸ் கொஞ்சம் தைரியமாக , தி.மு..விடம் நடந்து கொள்வதாகவே தெரிகிறது . காரணம் எதிர் காட்சிகள் ஒரு அணியாக மாறும் என்று தோன்றுகிறது நம்மை விட்டால் வேரு நாதி இல்லை என்பதை உணர்திருகிறது
காங்கிரஸ் . இந்த கூட்டணி நீடித்தாலும் உள்குத்துகள் நிறைய தேர்தலில் நடைப்பெறும் என்பது தெளிவு .

கருத்துகள்

  1. அரசியல் பதிவுகள் கூட எழுதுவீர்களா... உங்க அரசியல் பார்வை நல்லாத்தான் இருக்கு...

    என்னுடைய பதிவில் வந்து இன்னொரு பாலா உருவாகுவதை விரும்பவில்லை என்று கூறியிருந்தீர்கள்... அப்படி என்னதான் பிரச்சனை என்பதை விருப்பமிருந்தால் தனி மெயிலில் பகிர்ந்துக்கொள்ளவும்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை சூழல் என் எழுத்தை தடுத்தது, எழுதியதை பதிய என் வேலை தடுகிறது . முடியும் என்றால் முடியும் !!!
    என் புத்தகத்தில் பதிந்த என் கனவுகளை (எழுத்துகளை ) என்று தான் என் வலைபதிவகுமோ ! காலமே ! பதில் சொல் , நேரமே விடை சொல்
    உங்கள் எழுத்துக்களுக்கு தடைபடாமல் வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்ளவும்.நான் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் எழுத இருக்கிறேன் சத்தியமா சுய சரிதை இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக