தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது பலத்தை காட்ட தே .மு.தி.. முனைந்துள்ளது . இது கூட்டணி சேரும் கட்சிக்கு காட்டும் பலமாகவும் இருக்கும் .
எப்படியே தனது பலத்தை நிருபித்துள்ளார் என்றே தோனுகிறது . காரணம் சேர்ந்த கூட்டமோ அல்லது சேர்த்த கூட்டமோ அது முக்கியம் இல்லை , இதன் மூலம் தானும் பெரிய கட்சிதான் என்பதை சரியான நேரத்தில் நிருபித்துள்ளார் விஜயகாந்த் ....
ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது தே .மு.தி. தேர்தலை கூட்டாகவே சந்திக்க போகின்றது . அது மட்டுமில்லாமல் .தி.மு. உடன் கூட்டணி சேருவது ஏறக்குறைய முடிவாகிவிட்டதாகவே தோன்றுகிறது . எது எப்படியோ கூட்டணி பலமாக இருந்தால் தைரியமாக தேர்தலை சந்திக்க முடியும் என்பது எதிர்கட்சிகள் உணர்துள்ளதாகவே தெரிகிறது .
சேலம், ஜன. 9: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் தே.மு.தி.க.வின் மாநில மாநாடு சேலத்தில் நடந்தது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதர முக்கிய தீர்மானங்கள்:
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செய்த 1.76 லட்சம் கோடி முறைகேட்டால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி.
மத்திய, மாநில அரசுகளில் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து இயங்கும் சக்தியாக திமுக மாறிவிட்டது.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் வியாபித்து கபளீகரம் செய்யும் முதல்வரின் குடும்பத்தில் இருந்து தமிழகத்தையும், ஜனநாயகத்தையும் மீட்க ஒரு பெரும் போராட்டத்தை மக்கள் சக்தியைக் கொண்டு நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களும் ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க விரும்புவோரும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து மக்கள் உரிமைகளை மீட்க மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், கருணாநிதியின் ஆட்சியை அறவே நீக்கி முடித்து வைக்க, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னை: உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்கள், அரசுப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். உலக அரங்கில் இலங்கை அரசுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாதபடி இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் அமைந்துள்ளன. இத்தகைய வரலாற்றுப் பெரும்பழியைச் செய்துவரும் இந்திய அரசையும், அதற்கு துணை நின்ற கருணாநிதி அரசையும் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

  1. நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக