தொடர் கதையான பள்ளியில் கட்டணக் கொள்ளை.....


இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தே தான் நடக்குது . நீதிமன்றம் அதிக கட்டணம் வாங்க கூடாது என்று சொன்னாலும் . சட்ட சபையில அறிவிச்சதையே அமல் படுத்தாத இந்த அரசாங்கம், நீதிமன்ற ஆணையாவா அமல் படுத்த போகுது .
அரசாங்கம்
தூங்கி வழிவதாலும் . அவங்களுக்குள்ள உள்குத்து( நிறைய அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை ) இருகிறதாலையும் பள்ளி கூடம் நடத்தும் தொழில் அதிபர்களுக்கு ( இப்ப தொழில மாறிபோச்சி ) பெற்றோர்களை பார்த்தாலே ரு அலட்சியம், மிரட்டும் தோரணை எல்லாம் நடக்குது .

பெத்தவங்க குழந்தைங்கள நல்ல படிக்க வைக்க நினைச்சாலும் இனி ஏழைங்க படிக்க வைக்க முடியாது . காலத்துக்கும் அடிமைகளாகவே வாழவேண்டும் என்ற மனப்பான்மை . இதே வெட்க கேடு தான் கல்வி கடன் வழங்கும் திட்டத்திலும் . வாகனத்திற்கும் வாங்கினால் கடனுக்கு 0 % அல்லது குறைந்த வட்டி ஆனால் கல்விக்கு மட்டும் 12 to 13 % ,அதுவும் இப்பொழது இன்சுரன்ஸ் வேறு போடபடுகின்றது .

இவங்க தான் நாட்ட வல்லரசா மாத்த போறாங்க , எங்க படிச்சிட்ட கேள்வி கேட்பானோ ? என்ற பயமும் முழிசிகிட்ட நாம எல்லாம் வீட்டுக்கு போகவேண்டியது தான் என்ற எண்ணமும் , நம்ம பணத்தை நமக்கே இலவசம் என்ற லேபில் ஒட்டி கொடுத்து , சரக்கையும் ப்ரீயா திறந்து வச்சி மயகத்துலையே சம்பாதிக்கற பணத்தையும் உருவிக்கிட்டு மயக்கத்திலே ஏழைகளை நாட்டுல அலைய விட்டிருக்காங்க. எங்க உருப்பட போகுது நாடு , எப்படி? எப்ப மயக்கத்தில இருந்து முழிக்க போறாங்க மக்கள் .

இந்த நாடு . மக்களுக்கு கேள்வி கேட்கும் தைரியம் வரவேண்டும் . தனியாக இன்றைய நிலையில் வேண்டாம் குழுவாக சேர்ந்து போராடுங்கள் .தட்டினால் மட்டுமே திறக்கும் உலகு ..........

செவிட்டு காதுகளுக்கு கேட்டும் கேட்காமல் பழகி போச்சி . இனி உங்கள் போராட்டம் காச்சிய கம்பியாக தான் இருக்க வேண்டும் ( தீவிரமாக இருக்க வேண்டும் ) . தொடர்ந்து தட்டுங்க ஒரு நாள் கதவு திறக்கப்படும் அல்லது உடைக்கப்படும் . உரிமைக்கு போராடுங்கள் தன்மானத்தை இழக்காதீர்கள் என் தமிழ் உறவுகளே !!!!!!!

செய்தி : நாடக நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி நடத்தும் காலிபர் அகாடமி எனும் பள்ளியில் மிக அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 பெற்றோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மேலும் பள்ளிக் கல்வித் துறை அனுமதி பெறாமல் இந்தப் பள்ளி நடத்தப்படுவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனமாகத் திகழும் பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் துணை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது காலிபர் அகாடமி. இந்தப் பள்ளியை மதுவந்தி அருண் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார்.

இதில் மாணவர் சேர்க்கையின் போது குறிப்பிடப்பட்டதை விட மிக அதிக அளவு கட்டணம் கேட்டு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காலிபர் அகாடமியில் படிக்கும் மாணவர்களின் 27 பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். காலிபர் அகாடமி பள்ளிக் கல்வித் துறையின் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் மதுவந்தி அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கருத்துகள்

  1. பணம் இருக்குறவங்க கட்டிடுறாங்க... இல்லாதவங்க கேள்வி கேட்க தைரியமில்லாமல் இருக்குறாங்க...

    பதிலளிநீக்கு
  2. @ Philosophy Prabhakaran வருகைக்கு நன்றி நண்பா
    இந்த அவல நிலை தான் இன்றைய நாள் வரை , எதிர்த்து கேட்பவனையும் ஏளனமாக பார்க்கும் மக்கள் மனங்கள் மாறவேண்டும் . துணிந்து தோள்கொடுக்க வேண்டும் , கிடைக்க போவது அனைவருக்குமே என்ற எண்ணம் வளர வேண்டும் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக