தனியார்பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த பள்ளிக் கட்டணம் செல்லும்-சுப்ரீம் கோர்ட்

இன்றும் ஒரு சில பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளுமே அதிக கட்டனங்களையே வசூலித்து வருகின்றனர் . காரணம் அரசின் மெத்தன போக்கு தான் , இதுவரை எந்த ஒரு பள்ளியின் மீதும் நடவடிக்கை இல்லை என்பதே இதற்கு காரணம் . கேள்வி கேட்கும் ஒரு சில பெற்றோர்களையும் , வஞ்சம் தீர்க்க துடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள் ( இவர்களை இப்படித்தான் சொல்ல முடியும் ) . குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமே என்ற பயம் பெற்றோர்கள் மனதில் பீதியை ஏற்படுத்தி உள்ளது .
முறையான அனுகுமுறையோ அல்லது கொள்கையோ அரசிடம் இல்லை என்பதும் , பலர் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பதாலும் , போராடும் பெற்றோரையும் காவல்துறை களைந்து செல்ல சொல்வதும் , பள்ளிகளின் மீது நடவடிக்கை இல்லாததுமே பெற்றோர்கள் எதிர்த்து கேட்க தயங்குவதின் காரணம் . 90 % பள்ளிகள் முந்தைய வருட கட்டணத்தை விட இந்த வருடம் அதிகமா வசூலித்து கொண்டிருப்பது வேறு கதை .......
இதெல்லாம் தெரியாதா இந்த அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும் , காவல்துறைக்கும் , அப்படி தெரியாது என்று சொன்னால் சிறு குழந்தை கூட உங்களை பார்த்து எள்ளி நகையாடும் . நீங்களெல்லாம் அரசு துறையில் இருப்பதற்கே தகுதியட்டவர்கள் நினைவில் வைத்துகொள்ளுங்கள் .
அறிவிப்பு செய்வதற்கு முன்பு அதை பற்றி நன்மை தீமை , சாதக பாதகங்களை எண்ணி பார்த்த பிறகே சட்டமாக வெளியிடுங்கள் . பிறகு தீவிரமாக கண்காணியுங்கள் , முடியாது என்றால் கண்டுக்காம விட்டுடுங்க கொள்ளை அடிக்கறவன் அடிச்சிகிட்டு இருக்கட்டும் , முடிந்தால் சைடுல நீங்களும் சிலரைய பார்த்துகோங்க . மக்களை தேவை இல்லாமல் குழப்பாதீர்கள் ....?
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்ளுங்கள் அரசுதுறையில் இருக்கும் அரசியல்வாதிகளே ! , அதிகாரிகளே ! , காவல்துறை சேர்ந்தவர்களே ! மக்கள் அனைத்தையும் கவனமாக பார்த்துகொண்டிருக்கின்றனர் நினைவில் வைத்து கொள்ளுங்கள் ......... மக்கள் வரிபணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் ........
இனியாவது அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை இருக்குமா ????, அதிகமாக செலுத்தி இருக்கும் பணம் மீண்டும் பெற்றோர்களுக்கு கிடைக்குமா ?????????????????????

டெல்லி: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இக்கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பெருமளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை முறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக அரசுக்கும் ஏராளமான புகார்கள் சென்றன.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில்ஒரு நபர் கமிட்டியை தமிழக அரசு நிர்ணயித்தது. இந்த கமிட்டி கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அரசுக்குப் பரிந்துரைத்தது. இதை இந்த ஆண்டு முதலே அமல்படுத்துமாறும் அது அரசுக்குத் தெரிவித்தது. இதை ஏற்ற தமிழக அரசு புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.

ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக கோவிந்தராஜன் கமிட்டி கட்டண விகிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதை விசாரித்த நீதிபதி வாசுகி, கட்டண விகிதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வில்சன் அப்பீல் செய்தார். அதேபோல பெற்றோர் சங்கங்கள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்ரபால் தலைமையிலான பெஞ்ச் இடைக்காலத் தடையை ரத்து செய்தது. மேலும், நடப்பு ஆண்டு முதலே கல்விக் கட்டண நிர்ணயத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தன.

இந்தச மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் செல்லும்.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

கருத்துகள்