சீனாவில் கூகிள் இல்லாமல் போனது ஏன்? - விக்கிலீக்ஸ் கசியவிடும் புது தகவல்!

இப்போது இணைய தளத்திலும் உண்மைகள் வெளி வர முடியாத நிலை உருவாகின்றது . இது உலகிற்கும் ,மக்களுக்கும் கேடாக விளையும் . அதேபோல் இணையதளங்களும் பெறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . உண்மைகளை மட்டுமே வேலிடவேண்டும் , ராணுவ ரகசியம் , தொழிநுட்ப ரகசியங்கள் , அடுத்தவன் பெட்ரூம்ல மூக்க நுழைக்கறது வேண்டாமே ! . விக்கி லீக்ஸ் செய்தது சரியே ! காரணம் அமெரிக்க அடித்த கொட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல .

கூகிள் தேடு பொறி தளம் சீனாவில் இயங்கமுடியாமல் போனதுக்கு, சீன அரசு அதிகாரிகளின் அருவருக்கும் செயற்பாடே காரணம் என

விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 22ம் திகதி சீனாவிலிருந்து தனது தேடுபொறி சேவையை முழுமையாக நிறுத்தியிருந்தது கூகிள்! இதற்கு சீன அரசின் அழுத்தமும், அந்நாட்டு அதிதிறன் தொழில்நுட்பவியலாளர்களினால் கூகிள் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஹேக்கிங் நடவடிக்கையுமே காரணம் என அமெரிக்க இராஜதந்திரிகள் வாஷிங்டனின் இராஜாங்க திணைக்களத்திற்கு இரகசிய தகவல் அளித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும்,

சீன அதிபர் ஹு ஜுண்டாவோ, மற்றும் முதன்மை அரசியல் தலைவர் வென் ஜியாபோ ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் கூகிள் மூலம் மக்களிடம் இலகுவாக பரம்பலடைந்ததே அவர்களை அச்சமடைய வைத்ததாகவும், கூகிளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என அவர்கள் கருதியமைக்கு காரணமும் இதுவே!

அமெரிக்காவை மையமாக கொண்ட மாபெரும் தேடுபொறி தளம் ஒன்று சீனாவில் இயங்குவது ஆரோக்கியமானதல்ல என்பதால் கூகிளின் மின்னஞ்சல்களில் இருந்து பிரதான கோர்ட் குறியீடுகள் வரை, சீன ஹேக்கிங் மன்னர்களால் சிதைக்கப்பட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் சீனாவுடனான தொடர்பிலிருந்து கூகிள் தன்னை விலக்கிக்கொண்டது

என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்