மனைவியைக் கொன்று 2 மாதங்களாக பிரிட்ஜில் வைத்திருந்த என்ஜினியர்

மிருகதனத்தின் உச்சம் என்றே சொல்லலாம் .....................
நம்பிக்கை துரோகத்தின் நரன் என்றும் சொல்லலாம் ........
கோழையை கொன்று வீரன் என்று கொக்கரிக்கும் கொடுங்கோலன் என்றும் சொல்லலாம் ...............
எப்படி சொன்னாலும் போன உயிர் திரும்பாது ...............
முன்னெச்சரிக்கை இல்லாததே ! முதல் காரணம் ,
திருமணம் முடித்த பெண்களே ! சகோதரிகளே ! சகோதரர்களே !
ஒரு கட்டம் தாண்டும் போதும்
பிரச்னையை நீங்கலாக பேசித்தீர்க்க முடியாத போது அதை தீர்க்க அடுத்தவர்களை நாடுவது தவறில்லை ( நெருங்கியவர்களிடம் பெற்றோர் , சகோதர்கள் அல்லது நம்பிக்கையான உறவினர்களிடம் ) . பேசி தீர்க்க முடியவில்லை என்றால் சிறிது காலம் பிரிந்திருக்கலாம் , பிரிவு சில விசயங்களை புரியவைக்கும் . அப்படியும் முடிய வில்லை என்றால் மனநல ஆலோசகரிடம் சொல்லலாம் , கடைசியாக நீதி மன்றத்தில் விவாகரத்து வாங்கலாம் . இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் போது குழந்தைகளின் எதிர்காலம் , நம்பிவந்தவளின் கனவுகள் ( வாழ்க்கை ) பறிக்க யாருக்கும் உரிமை இல்லை . இது தண்டிக்கவும் கண்டிக்கவும் வேண்டிய முக்கி நிகழ்வு ..........
சிந்திவுங்கள் அழகான வாழ்க்கையை கெடுக்காதீர்கள் குறிப்பாக உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ள உங்களுக்கே உரிமை இல்லாத போது எப்படி அடுத்தவர்கள் வாழ்வில் விளையாடுகிறீர்கள் .........??????????????????
டேராடூன்:

மனைவியைக் கொன்று கடந்த 2 மாதங்களாக பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சாப்ட்வேர் என்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியைக் கொன்று சிறு சிறு துண்டுகளாக்கி ப்ரீசரில் அவர் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

37 வயதாகும் ராஜேஷை கைது செய்தபோது இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணின் சகோதரர் தன் சகோதரி எங்கிருக்கிறாள் என்பது பற்றி கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது.

டேரா டூனைச் சேர்ந்த சாப்டவேர் என்ஜினியர் ராஜேஷ் (37). இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் அனுபமாவின் தலையை சுவரைச் சேர்த்து முட்டியுள்ளார். இதில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். உடனே ராஜேஷ் அவரை கழுத்தை நெறித்து கொன்று, அவர் உடம்பை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்துவிட்டார்.

பிள்ளைகளிடம் அம்மா டெல்லிக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார். அனுபமாவின் சகோதரர் சுஜனிடம் தானும், தனது மனைவியும் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சுஜன் டேராடூனிற்கு வந்தபோது அனுபமா வீட்டில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு தான் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இதே போன்று ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தில் மனிதவளம் மேனேஜராக இருந்தவர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கூலாக ஜாக்கிங் சென்றுள்ளார். பின்னர் போலீஸ் பிடித்து விசாரித்தில் தனது பெற்றோரை அவமதித்ததால் மனைவியைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

மனைவியை பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு விவாகரத்து அதைவிட்டு ஏன் இந்த பாதக படுகொலை?

கருத்துகள்

கருத்துரையிடுக