14 வயதில் குழந்தை பெற்றுள்ள பிரிட்டன் காதலர்கள்

இந்த செய்தி நம் நாட்டு செய்தி அல்ல ஆனால் யோசிக்க வைக்கும் செய்தி,
நடந்தது என்னவோ பிரித்தானியவில் தான் , ஆனால் இந்த விபரீதம் நம் நாட்டில் நடக்கவும் இன்று வாய்ப்புகள் அதிகரித்துள்ளது . இதற்கு முதல் காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி தான் காரணம் , சரி தொழில்நுட்பத்தை விட்டு விடலாமா ? அது முடியாது கூடவும் கூடாது . வளர்ச்சிகள் அதிகரிக்கும்போதே இந்த மாதிரி சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது . பிள்ளைகளை தோழமையாய் பார்த்தால் இந்த பிரச்சனைகளை ஓரளவுக்கு களையலாம் , இதன் விபரீதம் என்னவென்றே தெரியாமலே நடக்கும் சம்பவங்கள் , தவறான கருத்துகள் பரவிகிடப்பதாலும் , தொலைக்காட்சி கார்டூன் சேன்னல்களின் தரம் தாழ்ந்த கதை வசனங்களின் தாக்கமே பெரும் காரணமாக இருக்கின்றது , பாடல்களின் வரும் மோசமான அங்க அசைவுகள் குழந்தைகளின் மனதில் தெரிந்து கொள்ளும்
ஆர்வம் அதிகரிக்கின்றது . சிறுவர்கள் ஒரு கட்டத்தில் தவறு என்று தெரியாமலே அதற்கு அடிமை ஆகி போகின்றனர். முடிந்த வரை பிள்ளைகளை அரவணைத்து அவர்கள் சொல்வதை கேட்டு , சிலவற்றை புரிய வைத்தால் முழுமையாக முடியவில்லை என்றாலும் குழந்தை தவறுகளை குறைக்கலாம் .........
முயல்வோமா ?????????????/. முயற்சி செய்து பாருங்கள் . முழுமையாக இன்னொரு பதிவில் பேசுகிறேன்

பிரித்தானிய செய்தி :




பிரிட்டனில் பாடசாலை சிறுவர்கள் இருவருக்கு 14 வயதில் குழந்தை பிறந்துள்ளது. நாட்டிலேயே மிகவும் இளவயதில் குழந்தை பெற்றுள்ள தம்பதியினராக இவர்கள் கருதப்படுகின்றனர்.

ஜெமி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி ஏப்ரல் வெப்ஸ்டருக்கு இன்னமும் முகத்தில் குழந்தைத்தனம் மாறவில்லை.

சிறுமி 13 வயதாக இருந்த போது தன்னுடைய காதலன் நாதனுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் கருவுற்றிருக்கிறாள். தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகியுள்ளது. குழந்தையை நன்றாக வளர்ப்பது குறித்து பெற்றோர் இருவரும் இணைந்து ஆலோசித்தும் வருகின்றனர். தற்போது குழந்தை சிறுமியுடனும் அவர்தம் தாய் தந்தையரிடத்திலும் வளர்ந்து வருகிறது.

ஆனால் வார இறுதி நாட்களில் குழந்தையை தான் வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் மீதமுள்ள 5 நாட்களிலும் ஏப்ரல் வெப்ஸ்டர் குழந்தையை பராமரித்தால் போதும் என 14 வயதாகும் குழந்தையின் தந்தை நாதன் கூறுகிறார். இருவருமே தெற்கு வேல்ஸ் பகுதியிலேயே வசித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட இன்னும் தங்களுக்கு வயது இருப்பதால் எதிர்காலம் குறித்த முடிவெதையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.


கருத்துகள்