ரஹ்மான் செய்தது தவறு தங்கர் பச்சான் பாய்ச்சல்! தங்கர் பச்சானுக்கு எதற்கு இந்த வேலை ?

Rahman
தங்கர்பச்சன் அவர்களே , எதற்கு இந்த வேலை ?
இவ்வளவு நாளா ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ !!!
எதுலதான்
குறை கண்டு பிடிக்கறது என்பதில் வெவஷ்தையே இல்லையா ? தங்கர் . உங்களை விட பல மடங்கு தமிழ் பற்று மிக்கவர் ரகுமான் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் . யார் தமிழுக்கு கௌரவம் சேர்த்தாலும் அதை பாராட்ட கற்றுகொள்ளுங்கள் . காரணம் நீ யார் என்பதை உலகிற்கு பறை சற்று முதலில் உன் ஆளுமையை மெருகேற்று, தானாக உன்னை இந்த உலகம் தேடி வரும் .
நீங்கள் ஒருவேளை ஆஸ்கர் வாங்கி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?
உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் !
ரகுமான் தமிழனை உலகிற்கு இசையில் அடையாளம் காட்டி உள்ளார் . அது இசையால் அவரால் முடிந்தது செய்தார். மற்றும் ஒரு தமிழன் சங்கர் எந்திரன் படம் மூலம் உலகிற்கு அடையாளம் காட்டினார் . இப்படி ஒவ்வொரு துறையாக வளர்ந்து தமிழனை அடையாளம் காட்டும் அனைவரையும் பாராட்டுங்கள் .
குறை இருந்தால் சுட்டி காட்டுங்கள், அதற்காக கிடைத்த அங்கீகாரத்தை வாங்காதே என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை .
ஒரு வேலை இலங்கை அரசு விருது கொடுத்திருந்தால் அவராகவே மறுத்திருப்பார் நினைவில் கொள்ளவும் .
நீங்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் ?
ஈழத்தை ( இலங்கை) விடுங்கள் தாய் தமிழ் நாட்டிற்கு மக்களுக்கு அல்லது இங்கே இருக்கும் தமிழ் ஈழ அகதிகளுக்கு ஏதாவது செய்தீர்களா ?
அல்லது என் தமிழ் இனத்தை காப்பாற்றாத
மத்திய
, மாநில அரசுகள் வழங்கிய விருதுகளை திருப்பி கொடுத்தீர்களா ?
எதற்க்காக இந்த அரசியல் உங்களுக்கு ......
ரகுமான் பல முறை தமிழுக்காக , இந்தியாவிற்காக இசையால் புகழ் சேர்த்திருக்கிறார் . இனியாவது விமர்சிப்பதற்கு முன் அவர்கள் முழு விவரம் அறிந்து பேசுங்கள் ...
எனக்கும் ரகுமானிடம் சிறிது கோவம் உண்டு .
தமிழ் வார்த்தைகளை கொல்லாமல் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் . நீங்கள் முன்பு இசை அமைத்த பாடல்கள் (மெலோடி) இன்றும் மனதில் இதமாய் ஒலிக்கிறது . முன்பு வளர்ச்சி கருதி சில இயக்குனர்கள் செய்த ( கொடுத்த இம்சைகள் ) சதி . ஆனால் இன்று நீங்கள் சொன்னால் கேட்கும் அளவிற்கு முன்னியில் இருக்கின்றீகள் .முயற்சி செய்யுங்கள் என் போலே தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக எடுத்துகொள்ளவும் .
உங்கள் இசை பயணம் விண்னை தொட என்றும் வாழுத்தும் ஒரு தமிழ் உள்ளம் .

செய்தி ; தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யாரெல்லாம் எதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களோ தெரியாது. ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளத்தை திரட்டப் போகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான். நல்ல விஷயம். செய்யட்டும். ஆனால் அவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் ரஹ்மான் ரசிகர்கள் மனசில் கொள்ளிக் கட்டையை வைத்து தேய்க்காத குறை.

மக்கள் பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறார்கள் திரையுலகத்தினர். விருது வாங்குவதுதான் பெரிய அங்கீகாரமா? அந்த விருதை வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க போகிறீர்களா? ஆஸ்கர் விருது கொடுக்கும் போது, ஈழத்தமிழர் வதை படும்போது இதை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லியிருந்தால் தமிழனின் பிரச்சனை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்கிறார் தங்கர் பச்சான்.

ஈழத்தமிழர் வேதனையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்தான். ரஹ்மான் பெற்ற ஆஸ்கர் விருதை புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமையோடு நினைக்கும் போது இடையில் தங்கர் ஏன் குழப்பியடிக்கிறாரோ, அவருக்கே வெளிச்சம்! - நன்றி www.tamilcinema.com

கருத்துகள்