இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:


ஐயா மனித நேயம் பேசறவங்களே ! மறுபடியும் கொடிய தூக்கிடாதீங்க !

ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல என் வாதம் இது போல் சில உருப்படியான என்கௌன்ட்டர் கள் நடக்க வேண்டும் . அதாவது போலி என்கவுண்டர்கள் அல்ல (உண்மையான அதிபயங்கர, ஈவு இறக்கம் அற்ற குற்றவாளிகளை மட்டும் ) . அரசியல் வாதிகளின் எதிரிகள் போலீஸ் காரர்களின் பிடிக்காதவர்களை இதே பாணியில் விளையாடாதீங்க ! .

குழந்தைகளை பற்றி கேள்வி பட்ட நமக்கே இப்படி இருந்தால் , பெற்றவர்களின் மன குமுறலை யாரால் ஈடுகட்ட முடியும் நினைத்து பார்க்க முடியல கண்களில் நீர் கசியுது . இதைபோல் உடனடி தீர்ப்புகள் ( தண்டனைகள் ) கிடைத்தால் , அடுத்து இதை போல் யாருக்கும் இந்த எண்ணம் வராது அல்லது பெருவாரியாக குறையும் .

குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்ப முடிய வில்லை. இப்பொழுது , குழந்தைகளை பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக தினமும் ஒரு சில வந்துகொண்டிருக்கிறது . பெற்றோர்களின் கவலையை கவலையை அதிக படுத்தி உள்ளது . நம் நாட்டில் இப்பொழுது அதிகரித்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்திஉள்ளது .

அரசும், போலீஸ் துறையும் , பள்ளிகளும் பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் . குழந்தைகளுக்கு இப்பொழது கல்வியோடு ஒழுக்கத்தை போதிப்பதில்லை . பணமட்டுமே குறிகோளாக தனியார் பள்ளிகள் , குழந்தைகளின் நல்லொழுக்கத்தை மறந்து பெற்றோர்களும் அவர்கள் செய்யும் சில செயல்களை அங்கீகரிப்பதால் அது பிற்காலத்தில் அவர்களுக்கு கேடு விளைவிக்கின்றது .

மீடியா சொல்லவே தேவை இல்ல உலகத்துல என்ன என்ன கெட்டது இருக்கே அதை எல்லாம் தான் காட்டுது . பெரிய திரை ரவுடியையும் , திருடனையும் , அராஜகம் பண்றவனையும் ஹீரோவா கட்டுறாங்க . பொண்ணுகளும் அவங்களையே காதலிக்கறதா காதலையும் காட்டி, சமுதாயத்தை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளத்தையும் செய்யறாங்க . இளைய நம்ம சமுதாயத்துக்கு மேல இருக்கறவன பார்த்து சூடு போட்டுகறான் . ஒரு கட்டத்துக்கு மேல திருட வழிப்பறி செய்யறானுங்க. என்ன காரணம் வெளிநாட்டு மோகம் அதிகரித்திருப்பதாலும் ,பகட்டு வாழ்க்கை , ஈசியா பணம் ( நோகாம ) சம்பாதிக்க நினைக்கருதுமே. இதுல முக்கியமா கல்லூரி பசங்க ஈடுபடறதா சமிபத்திய தகவல்கள் சொல்லுது .

எப்படியோ குழந்தைகளை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு சமாதனம் சொல்லியோ , அறுதல் சொல்லியோ , அந்த குழந்தைகளின் ஆன்மாவிற்கு சாந்தம் உண்டாக்க முடியாது என்பது நிதர்சனம் .

அதோட என்கவுண்டர்ல செத்தவன் குடும்பம் இதோட அம்பேல் தான் ( சொல்ல முடியல வார்த்தை இல்ல ) ஒருத்தன் செய்த தவறால் எத்தனை பேர் பாதிக்க படுகின்றனர் . இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா ?.

கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது:


எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி. கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்

கருத்துரையிடுக