வேண்டாம் வெள்ளையர் உடை!-பட்டமளிப்பு விழாவில் கலாம் பேச்சு


லக்னோ: இந்திய பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்தப்படும் கவுன்கள் வெள்ளையர் காலத்திய மிச்சங்கள். இனி அவை வேண்டாம். இந்தியாவுக்கேற்ற எளிய ஆடைகளை பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்த வேண்டும், என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் பட்டம் வழங்கும் முக்கிய பிரமுகர்களும், பட்டம் பெறும் மாணவ-மாணவிகளும், முந்திய ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நீண்ட கவுன் மற்றும் தொப்பியைத்தான் இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கவுன்கள் கனமானவை, செலவுமிக்கவை, பயன்படுத்த கடினமானவையும் கூட.

இந்த உடைகளைப் பயன்படுத்துவது குறித்து ஏற்கெனவே சில இந்திய அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு [^] தெரிவித்திருந்தனர்.

மத்திய அமைச்சர் [^] ஜெய்ராம் ரமேஷ் ஒருமுறை பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோது இந்த கவுனை அணிய மறுத்துவிட்டார். இன்னொரு விழாவில் திரிபுரா முதல்வர் [^] மாணிக் சர்க்கார் இந்த கவுன் பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் மிச்சம். இதை அணியமாட்டேன் என்று கடுப்பாகவே சில மாதங்களுக்கு முன் சொன்னது நினைவிருக்கலாம்.

ஆனால், லக்னோவில் உள்ள பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த டாக்டர் கலாம், விழாவில் தனக்குத் தந்த பட்டமளிப்பு கவுனை வாங்கி அணிந்து கொண்டார்.

அதேநேரம் இந்த கவுன் குறித்த தனது கருத்துக்களை, தனது சிறப்புரையின் போது குறிப்பிடத் தவறவில்லை.

அவர் கூறுகையில், "ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கவுனைத்தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது அல்ல. கவுன் மிகவும் எடையுள்ளது. அதற்கு பதிலாக எடை குறைந்த இந்திய ஆடையை பயன்படுத்தலாம். அங்கவஸ்திரம் போல ஒரு ஆடையைப் பயன்படுத்தலாம். அல்லது அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய ஆடையை அணியலாம்.

இது பற்றி பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் கூடி ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் மிச்ச நினைவுச் சின்னமாக உள்ள இந்த கவுன்கள் வேண்டாம்'' என்றார்.

கருத்துகள்