லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதே இல்லை: உச்ச நீதிமன்றம் வேதனை


ரொம்ப லேட் உச்ச நீதிமன்றம் நீதிபதிகளே !!!
எந்த நாட்டுல இருக்கோமுன்னு ஞாபகம் இருந்தால் சரி, என்ன பண்றது நீங்க தீர்ப்பு
எழுதினாலும் நாங்க தானே அமுல் படுத்தனும் என்ன நான் சொல்றது ( அரசியல்வாதிகள் ).
போங்கையா போய் பொழப்ப பாருங்க. சும்மா காமெடி பண்ணாதீங்க ...
சிப்பு வருது ....... சிப்பு வருது ........
பொதுமக்கள் இத சொல்லவாவது தைரியம் இருக்கே நமது நீதிபதிகளுக்கு சபாஷ் ...
நம்ம ஆளுங்க(அரசியல்வாதிகள்) எத சொன்னாலும் கேக்க மாட்டனுன்களே !!!!
புதுதில்லி,அக்.10: ""லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை, எனவே ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் லஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும், அதிகாரிகளுக்கும் வீணாக பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது'' என்று உச்ச நீதிமன்ற "பெஞ்ச்' வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்து தெரிவித்தது.

வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர், வருமான வரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ""ரூ.25,000 லஞ்சம் தர வேண்டும்'' என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு ""10 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும்'' என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெற முற்பட்டபோது சி.பி.ஐ. போலீஸôர் அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம், ""போதிய ஆதாரம் இல்லை'' என்று கூறி சர்மாவை விடுவித்துவிட்டது. ஆனால் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்குர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.

இந்த லஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது, ஆனால் உயர் நீதிமன்றம், வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலும் இருந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதிகள், "வருமான வரித்துறை, சுங்கத்துறை, விற்பனை வரித்துறை போன்றவை லஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன; இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு லஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால், பொதுமக்களுக்கும் லஞ்ச அளவு தெரியும், அதிகாரிகளும் பேரம் பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து லஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக் கொடுக்கமுடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது' என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.

""அதிகாரிகள் இப்படி லஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது; அவர்கள் என்ன செய்வார்கள் - பாவம், விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது'' என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர். "லஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும்' என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதில் அளித்தார்.

காசோலை வழக்கு: அடுத்தபடியாக, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து, ""உங்களுடைய அனுபவம், திறமை, தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா; மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான், இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?'' என்றனர்.

""நீங்கள் சொல்வது சரிதான், அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே'' என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

கருத்துகள்