தகவல் சரிபார்ப்புக்குப் பின் 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிப்பு


டெல்லி: பாதுகாப்பு [^] காரணங்களுக்காக நடந்து வரும் மொபைல் போன் தகவல் சரிபார்ப்புப் பணியின்போது இதுவரை 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம். தகவல்கள் முறையாக இல்லாத காரணத்தால் இவை துண்டிக்கப்பட்டுள்ளன.

சரியான தகவல்களைத் தராதது, தகவல் சரி பார்ப்புக்கு தேவையானவற்றை சமர்ப்பிக்காதது ஆகிய காரணங்களுக்காக இவை துண்டிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை சரிபார்ப்புக்காக தாங்கள் பயன்படுத்தி வரும் செல்போன் சேவை நிறுவனத்தின் கிளைகளில் கொடுக்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் தரும் தகவல்களும், ஏற்கனவே கொடுத்த தகவல்களும் சரியாக உள்ளதா என்பது ஒப்பிடப்பட்டு வருகிறது. தகவல்கள் சரியாக இல்லாவிட்டால் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

இந்த நடவடிக்கையில் இதுவரை 30 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம்.

கருத்துகள்