துஷ்டதெய் வங்களின் (காட்டுமிராண்டிகளின்) நிலையை நினைத்து என் உள்ளக்குமுறல்!

கிரி அவர்களுக்கு ,
அண்ணாத்த நானும் உங்களை மாதிரி தான் , இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை இத மாதிரி கூத்தெல்லேலாம் அரங்கேறும் , ஆங்கிலேயனுக்கு வரி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதற்கே (அதுவும் நாம நாட்ட சுரண்டிகிட்டே ) கட்ட பொம்பன தூக்குல போட்ட வரலாறு எல்லாம் இந்த தே. பசக்களுக்கு தொரியாது தல விடுங்க. எனக்கு உங்களை போலதான் பயங்கர கடுப்பு ,கோவம் , வெறுப்பு , வெறி எழுதின சத்தியமா லிமிடட தந்திடுவேன் இருந்தாலும் எழுத நேரம் கிடைக்கல ,
உங்க பதிவ பார்த்த உடனே உங்களை பாராட்டிட ஒண்ணுமில்ல, உங்களுக்கு தோல் கொடுக்கணும் நினைக்கறேன் தல. ஒரு விஷயம் மூணு பேரோ, முப்பது பேரோ அது மேட்டர் இல்ல அங்க நடந்தது என்ன காட்டு மிராண்டி தனம்முனு மிருகங்களா கொச்ச படுத்த விரும்பல , என்ன மிருகங்க கூட அதுங்களா தொல்ல கொடுத்த தான் கொல்லும் , இதுங்கள எந்த லிஸ்ட்ல சேர்திகறது கிரி . எனக்கு தெரிந்து இவனுங்களுக்கு தூக்கு கூட பத்தாது, உடனே உயிர் போயிடும் கஷ்டம் இல்லாம . இந்த காட்டு மிருகங்க கூட போககரத்துக்கு யோசிக்கும் இடமா பார்த்து கொண்டுபோய் தனியா தொலச்சிடனும் கூட்டமா இல்ல, அல்லது ராக்கெட்ல பயன்படுத்த ( அதாவது எலிய வச்சி சோதிப்பான்களே ! ) அந்த மாதிரி ராக்கெட்டேட ( நம்ம இந்திய ராக்கெட்டோட) சேத்தி அனுப்பிடணும் , என்ன ஒரு அப்பாவி எலியாவது மிஞ்சும். எனக்கு வார்த்தை விவகாரமா வந்து தொலைக்குது அதுனால முக்கியமான இன்னொரு விசயத்தையும் சொல்லிட்டு முடிக்கறேன் .
உங்களுக்கு பிரபகரன்னு ஒருத்தர் இருந்தார் ஞாபகம் இருக்கா, அவர பத்திய கதை எல்லாம் எழுதினால் நேர போதாது ஒரு நாலஞ்சி பதிவாத்தான் போடணும் , அதனால சுருக்கமா மேட்டருக்கு வந்துடறேன் . ஒரு கோவலமான விஷயம் ஒரு தலைவனை ஒருத்தன் கொன்னுட்டான் என்பதற்காக அவரை மட்டும் தண்டிக்காம ( அது சரியா தவறா என்பது இந்த பதிவுக்கு தேவை இல்லாதது ), ஒரு இனத்தையே அழிக்க சொன்னாகளே ! அது எந்த மிராண்டி தனம் எனக்கு புரியால,அப்ப இந்த தாய்மை உள்ளம் எங்க போனது தெரியல , இவனுங்க ,இவளுங்க பத்தி யோசிக்க கூட அறுவறுப்ப இருக்கு , பாவப்பட்ட( எந்த தவறு பாவமும் அறியாத ) இந்த மாணவிகள் கொல்லப்பட்டது மனித குலம் இந்த பூமியில் இருக்கும் மட்டும் மன்னிக்காது , அனால் சில துர்தெய்வங்கள் நாட்டுல இருக்குங்க கொலைகாரனையும் , கொள்ளகாரனையும் ,முடிசெரிக்கியையும் , மொள்ளமரியையும் காப்பாத்த ஆபத்தண்டவனுங்களா !! . அரசியல்வாதிகளும் , மனித உரிமைய தவறா புரிஞ்சிக்கிட்ட வங்களையும், எப்படி எந்த மொழில தீட்டினாலும் பத்தாது. குறைஞ்ச பட்சம் தூக்குல போட்டாலாவது ,அந்த உயிர்கள் சம்பந்த பட்டவங்களாவது ஒரு சதவீதமாவது ஆறுதல் அடைவாங்க , அது மட்டுமே நம்மளால தரமுடிந்த நிவாரணம் . கிரி சாருக்கு ஒரு விண்ணப்பம் உங்கள் அனுமதி இல்லாம உங்க பதிவ என் ப்ளாக் ல போடா போறேன் நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் . ஏன் என்றான் நான் எழுத நினைத்த பதிவு விட சிறப்பாக சுருக்கமாக உங்கள் பதிவும் இருப்பதால் உங்கள் பதிவையே உபயேகித்து கொள்கிறேன் . நன்றி
ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!

by கிரி on September 14, 2010

நான் இங்கு எழுதியதில் சில வார்த்தைகள் கடுமையாக இருக்கும் ஆனால் கண்டிப்பாக யாரையும் தனித்து குறிப்பிடுவன அல்ல. என் ஒட்டுமொத்த கோபமே இந்த இடுகை (Post). யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் இதை விட நாகரீகமாக!! எனக்கு இந்த விஷயத்தை எழுதத் தோன்றவில்லை, முடியவில்லை.

தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் எரிக்கப்பட்டதற்கு குற்றவாளிகளுக்கு வழங்கிய தூக்குத்தண்டனையைப் பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். பெரும்பாலனவர்கள் தண்டனையை சரி என்றும் சிலர் அது தவறும் என்றும் மற்றும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வர்ணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எப்போதும் ஒரு பிரச்சனை விவாதம் என்றால் அனைவரும் ஒரே மாதிரி பேச மாட்டார்கள் இரு வேறு கருத்துகள் இருந்தாக வேண்டும் காரணம் எளிது அனைவரும் ஒன்றுபோல சிந்திக்க முடியாது. எந்த விசயமாக இருந்தாலும் கண்டிப்பாக அதில் மாற்றுக்கருத்து இருக்கும் இருக்க வேண்டும். எனவே இதிலும் மாற்றுக்கருத்துகள் இருந்ததில் எனக்கு எந்தவித ஆச்சர்யமுமில்லை அதை தவறாக நினைக்கவுமில்லை. நம் கருத்தை சரி என்று நினைக்கும் போது மற்றவர்கள் அவர்கள் கருத்து சரி என்று ஏன் விவாதம் செய்யக்கூடாது? அவரவர்க்கு அவரவர் நியாயம். இருக்கட்டும்.

என்னோட பார்வையில் தூக்குத்தண்டனை சரி! கண்டிப்பாக வேண்டும்!! என்ற என் கருத்தை முன் வைக்கிறேன். எனக்கு எப்போதுமே சமுதாயத்தின் மீது கோபங்கள் உண்டு. எனவே என்னை தொடர அழைத்த “தேவதை” டென்ஷன் ஆகாம இருந்தா சரி! பதிவில் கூட என் கோபத்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பேன்.

இதிலும் என் கோபங்களை ஆதங்கத்தை கொட்டப்போகிறேன். இதனால் ஒரு வெங்காயமும் ஆகப்போவதில்லை என்று உறுதியாக தெரிந்தாலும் கூறக்காரணம் குறைந்தது மனதில் உள்ளதை கொட்டினால் மன அழுத்தமாவது குறையுமே என்ற என்ற எண்ணம் தான். பதிவுலகில் வெட்டி விவாதம், அரசியல் செய்வதை விட இதைப்போல உருப்படியான விசயத்தில் என் கருத்தை கூற முடிகிறதே! என்பது இங்கே வந்ததற்கு திருப்தி அளிக்கிறது.

கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் நின்று விடுமா?

justice ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!பொறுமையாக யோசித்தால் குற்றங்கள் கடுமையான சட்டங்களால் நிற்பதில்லை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடுமையான சட்டங்கள் இருக்கும் சவுதி மற்றும் அதைவிட கொஞ்சம் படி குறைவாக இருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் இருந்தும் பல குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. அப்புறம் என்ன உங்க பிரச்சனை? என்று அவசரப்படாதீர்கள்!

இந்த சட்டங்களால் 10 தவறு நடக்க வேண்டிய இடத்தில் 10 யையும் குறைக்க (முடியாது) முடியவில்லை என்றாலும் ஒரு நான்கையாவது குறைக்கலாம். அந்த நான்கைத்தான் என்னைப்போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறைந்த பட்சம் அந்த நான்கு பேர் தவறு செய்யாமல் இருந்தால் கூட அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவார்களே என்ற ஆதங்கம் தான்.

ஒரு ஊரில் பத்து பெண்கள் வன்புணர்வு (தயவு செய்து கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் ரொம்பக் கேவலமாக உள்ளது) செய்யப்படுகிறார்கள் என்றால் கடுமையான சட்டங்களால் பத்து பேரும் திருந்தவில்லை என்றாலும் ஒரு நான்கு பேராவது அதற்கு பயந்து அந்த எண்ணத்தை கை விட்டால் அந்த நான்கு பெண்களின் வாழ்க்கையாவது தப்பிக்குமே என்பது தான் பலரின் எண்ணம். எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு இந்த நான்கு அல்லது மூன்று பேர் தான் அனைவரும் இல்லை என்றாலும்.

காட்டுமிராண்டித்தனம்

தூக்குதண்டனை தவறு என்று கூறுபவர்கள் பெரும்பாலும் கூறும் வார்த்தை “இது காட்டுமிராண்டித்தனம்” என்று. எதுய்யா காட்டுமிராண்டித்தனம்? மூன்று பெண்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் அனைவரின் முன்பும் பெட்ரோலை ஊற்றி எரிக்கிறார்கள் அது காட்டுமிராண்டித்தனமா இல்லை இந்த கொடுமையான செயலை செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள் காட்டுமிராண்டிகளா!

அந்தப்பெண்ணின் பெற்றோரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் இறந்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம் 22 வயது வரை வளர்த்து அதுவும் இயற்கை மரணம் என்றால் என்றால் கூட மனதை தேற்றலாம் இந்த மாதிரி தன் பெண் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டால் அந்தப்பெண்ணின் பெற்றோரின் மனம் எப்படி துன்பப்படும் என்று அவர்கள் நிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள்.

தூக்கில் போடுவதால் இறந்த பெண் வந்து விடப்போகிறாரா?

நல்லா கேட்டீங்க.. நறுக்குன்னு! பகுத்தறிவா யோசித்து புத்திசாலித்தனமா கேட்டீங்க! பொட்டில் அடிச்ச மாதிரி கேட்டீங்க. எங்களுக்கும் தெரியும் இறந்தவங்க வரமாட்டாங்க என்று ஆனால் பாதிக்கப்பட்டவங்களுக்கு என்ன சொல்வீர்கள்? அவர்கள் அடைந்த துன்பம், மன உளைச்சல்களை எப்படி திரும்பப் பெறுவீர்கள்?

இந்தப் பெண்ணை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை தாமதத்தால் ஒரு பெண்ணின் தந்தை அந்த மன உளைச்சலிலே இறந்து விட்டார். அது தெரியுமா உங்களுக்கு? நியாயமே தெரியாமல் இறந்து போன இந்த காட்டுமிராண்டித் தந்தைக்கு எங்க இருந்து பதில் கூறுவீர்கள்? தன் மகளை எரித்தவர்களை எதுவுமே செய்ய முடியாமல் இவ்வளோ நாளாக மனம் புழுங்கி இறந்து போன இவருக்கு காட்டுமிராண்டியாக இல்லாத நீங்கள் என்ன வானுலகம் சென்று பதில் தருவீர்களா?

உணர்ச்சி வேகத்தில் பேசாதீர்கள்?

சிரிப்பு தான்யா வருகிறது இதை கேட்டு. உணர்ச்சி இருப்பதால் தான்யா நாங்க இதைப்போல பேசுகிறோம். இந்தக்கோபம் இந்தப்பெண்களை எரித்ததால் மட்டுமே வருவதல்ல காலம் காலமாக நியாயம் கிடைக்காமல் தவறு செய்பவர்கள் ஜாலியாக வெளியே சுற்றிக்கொண்டு இருப்பதை தினம் தினம் பார்த்து புழுங்கி வெறுத்து போய் வரும் வார்த்தைகள். இப்போது மட்டுமல்ல எப்போது கேட்டாலும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தூக்கு தண்டனை வேண்டும் என்று தான் கூறுவார்கள். அப்போது பேசி மறந்தால் மட்டும் தான் உணர்ச்சி வேகத்தில் பேசுவது இவை எல்லாம் காலம் காலமாக மனதில் இருந்து வரும் வார்த்தைகள் தானே ஒழிய உணர்ச்சிவசப்படுவதால் வருவதல்ல.

காட்டுமிராண்டித்தனம் பற்றி எங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தண்டனைகளின் வீரியம் புரியும். தற்போது ஈரானில் தன் முகத்தை காட்டியதற்காக ஒரு பெண்ணிற்கு 99 கசையடி கொடுத்தார்களே அதன் பெயர் தான் காட்டுமிராண்டித்தனம். நாங்கள் ஒன்றும் பிக்பாக்கெட் அடித்தவனை கொண்டு போய் தூக்கில் போடக்கூறவில்லை. குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.

தனக்கு ஏற்பட்ட இழப்பை ஒருவரால் மீண்டும் பெற முடியாது என்றாலும் குறைந்த பட்சம் குற்றம் செய்தவருக்கு சரியான தண்டனை கிடைத்தால் மன திருப்தியும் ஆறுதலுமாவது பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும். இதைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதில் என்ன தவறு கண்டீர்கள்? அனைவரும் உங்களைப்போல மன்னித்து விட காந்தி அல்ல.

மனித உரிமை

இதற்கு பதிலாக *** உரிமை என்று வைத்து இருக்கலாம். மனித உணர்வுகளை புரிந்து கொண்டால் ஏன்யா நீங்கள் எல்லாம் இப்படி பேசப்போகிறீர்கள். ஒரு குற்றவாளிக்கு காட்டும் மனித உரிமையையும் அக்கறையையும் பாதிக்கப்பட்டவருக்கு ஏன் காட்ட மறுக்கிறீர்கள்? நான்கு பேரை வன்புணர்வு செய்து இருப்பான் அவனை தூக்கில் போடாதே! என்று சொம்பை தூக்கிக் கொண்டு வந்து விடுகிறீர்கள். அந்த பொறம்போக்கை எல்லாம் என்ன அழைத்து கொஞ்ச சொல்கிறீர்களா? அவனை வெளியில் விட்டால் இன்னும் இரண்டு பேரை இதே நிலைக்கு ஆளாக்குவான். அப்போது என்ன சொல்வீர்கள்? அப்போதும் கருணை காட்ட வேண்டுமா?

இதில் ஒரு சில பெண்கள் கூட இந்த பன்னாடைகளுக்கு பரிந்து பேசுகிறார்கள் அது தான் இன்னும் கடுப்பை கிளப்புது. அம்மாமார்களே! ஒரு பெண்ணின் மனது, உணர்வுகள் மற்றொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்பார்கள்…. உங்களைப் போன்றவர்களைப் பற்றி எல்லாம் தெரியாமல் இந்த வசனத்தை கூறி விட்டார்கள் போல உள்ளது. இப்படி பேசுற உங்களையெல்லாம் எவனாவது…… சரி விடுங்க! ஏதாவது அசிங்கமா சொல்லிடப்போறேன். நல்லா இருங்க!

மனித உரிமை மனித உரிமை என்று பேசிப்பேசியே தூக்குத்தண்டனை ஏற்கனவே இல்லாம பண்ணிட்டீங்க! கடைசியா தூக்குல போட்டது குறைந்தது பதினைந்து வருடம் முன்பாவது இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால திருட்டுத்தனம் கேப்புமாரித்தனம் பண்ணுற மொள்ளமாறிக எல்லாம் எப்படி இருந்தாலும் வெளியே வந்துடலாம் என்று தைரியமா தப்பு பண்ணிட்டு இருக்கானுக. யோவ்! குழந்தைகளை கடத்தி கை காலை எல்லாம் உடைத்து, கண்ணை குருடாக்கி பிச்சை எடுக்க வைக்கறானுகய்யா!

இவனுகளை எல்லாம் எப்படியா மன்னித்து விடச்சொல்றீங்க? “இவங்க எல்லாம் தெரியாம பண்ணிட்டாங்க… எதுவும் திட்டம் போட்டு செய்யவில்லை அவர்களுடைய சூழ்நிலையால் அப்படி செய்துட்டாங்க” அப்படின்னு மட்டும் சொன்னீங்கன்னு வைங்க… ஊர்ல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தையிலும் உங்களை நான் திட்டுனதா வைத்துக்குங்க. இவங்க மேல விட இவனுங்களுக்கு பரிந்து பேசும் உங்க மேலதான் அதிக ஆத்திரமாக வருகிறது.

திரைப்படத்தில் எல்லாம் கதாநாயகன் இதைப்போல தவறு செய்தவர்களை தண்டிக்கும் போது ஏன் விசிலடித்து வரவேற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? தன்னால் செய்ய முடியாததை தன் பிம்பமாக இன்னொருவன் செய்யும் போது கிடைக்கும் மனத் திருப்திக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். அதனால் தான் நம்ம ஊர்ல எல்லாம் இதைப்போல படங்கள் வெற்றி பெறுகிறது. தானே தண்டித்ததாக நினைக்கிறார்கள். நிஜத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை இப்படியாவது ஆறுதல் பட்டுக்கொள்வோம் என்ற எண்ணம் தான்.

வன்புணர்வு

உலகிலேயே கொலையை விட மிகவும் கொடுமையான செயல் என்று நான் நினைப்பது வன்புணர்வு. ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினாலே தாங்க முடியாது ஒருவன் வன்புணர்வு செய்து விட்டான் என்றால் அந்தப்பெண்ணின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அந்தப்பெண்ணுக்கு தன் உடலே அருவருப்பாகி விடாதா! ஐயோ! என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை கொடூரமாக இருக்கிறது. இதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று கூறுங்கள் “தூக்கில் போடச்சொல்லும் நீ ஒரு காட்டுமிராண்டி” என்று! செருப்பைக் கழட்டி அடிப்பார். இதையும் மீறி ஒருவர் மன்னிக்கிறார் என்றால் அவரை கடவுள் லிஸ்ட்ல் சேர்த்து விடலாம்.

உண்மைச்சம்பவம்

எங்கு நடந்தது என்று நினைவில்லை ஆனால் சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது. ஒரு கர்ப்பிணி பெண் தன் தங்கையுடன் பூங்காவிற்கோ அல்லது எங்கயோ வந்த போது அங்கு இருந்த ஒரு காட்டான் துப்பாக்கியை கர்ப்பிணியின் வயிற்றில் வைத்து மிரட்டி உடன் வந்த தங்கையை தன் அக்காவின் முன்னாலே வன்புணர்வு செய்து விட்டான் அதாவது உடன் படவில்லை என்றால் வயிற்றில் சுட்டு விடுவேன் என்று! இவனை என்ன பண்ணலாம்? என்று சொல்லுங்கள். மன்னித்து விடலாமா! நியாயமா இவன் *** நறுக்கி காக்காய்க்கு போடணும்! நாங்க இவனைப் போல பரதேசிப் பயலை எல்லாம் தூக்கில் தானே போடச்சொல்கிறோம்.

மனித உரிமை பேசும் நல்லவர்களே! நீங்கள் கேட்பது சரி என்று வைத்துக்கொண்டாலும் இவனை மனிதன் லிஸ்ட்லையே சேர்க்க முடியாதே! சரி விலங்குகள் லிஸ்ட்ல சேர்க்கலாம் என்றாலும் அவை நம்மை கேவலமாக பார்க்கும். அப்புறம் இவனை எல்லாம் எந்த லிஸ்ட்ல தான் சேர்க்கிறது.. எந்த லிஸ்ட்ல சேர்க்கிறதுன்னு தெரியாத இந்த பன்னிப்பயலுக்கு எல்லாம் பரிந்து பேச வருவீர்கள்.. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி யோசிக்க மாட்டீர்கள். நல்லா இருக்குயா உங்க மனித உரிமை நியாயம்!!!

நோகாம நோன்பு கும்பிடுற உங்களுக்கு என்னையா தெரியும் உணர்ச்சிகளைப் பற்றி? இதைப்போல நடந்த பெண்ணிற்கு தன் இழப்பை இந்த தண்டனை கொடுப்பதன் மூலம் ஈடு செய்ய முடியாது ஆனால் குறைந்த பட்சம் அந்த கம்முனாட்டிக்கு கொடுக்கப்படும் தண்டனை மூலம் ஒரு ஆத்மா திருப்தியாவது கிடைக்குமே. அதைக்கூட “முடியாது! நாங்க சொம்பை தூக்குனா கீழே வைக்க மாட்டோம்” என்று கூறினீர்கள் என்றால் என்னையா அர்த்தம்?

மனித உரிமையைப் பற்றி எங்களிடம் கூறாதீர்கள். உங்களைவிட நாங்கள் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறோம் அதனால் தான் எங்கள் உரிமைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா! நியாயம் கிடைக்காதா!! என்று எதிர்பார்க்கிறோம். மனித உரிமைக்காக போராட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எல்லாம் எங்களுக்காகத்தான் போராட வேண்டும்.

கொள்ளை அடித்தவனும் ஊரை எமாத்துறவனும் வன்புணர்வு செய்தவனும் கொலை செய்தவனும் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அப்படியே சிறையில் போட்டாலும் ஏதாவது அரசியல் தலைவர் பிறந்த நாள் இறந்த நாள் என்று தண்டனையை குறைத்து வெளியே விட்டு விடுகிறார்கள். வெளியே வந்து பாதிக்கப்பட்டவங்க கிட்டே வந்து “பார்த்தியா! நான் வெளியே வந்துட்டேன்.. நீ என்ன மயிரை புடுங்க முடிந்தது? என்று கேட்பான். நாக்கை புடிங்கிட்டு சாகலாம் போல இருக்கும். ஏன் என்றால் மனித உரிமை பற்றி தெரியாத எங்களைப்போன்ற காட்டுமிராண்டிகளால் அதை மட்டும் தானே பண்ண முடியும்.

இந்தப்பெண்களை எரித்தவர்களுக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதிப்படுத்தி இருந்தாலும் இன்னும் கருணை உள்ளம் ஜனாதிபதி அம்மா பிரதீபா இருக்காங்க.. அவங்க கருணை பொங்கி இவர்களுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யலாம்… பின்ன அத்தனை பேரை கொன்ற தீவிரவாதிக்கே யோசித்துட்டு இருக்காங்க!! இவர்கள் என்ன மூன்று பேரைத்தானே எரித்தாங்க… சின்னப் பிரச்சனை தானே! மனித உரிமை பாதிக்கப்படக்கூடாதல்லவா!

இந்த வெண்ணைகளுக்கு எல்லாம் அப்பவே தண்டனை கொடுத்தால் இனி யாரையாவது எரிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஒரு கணம் யோசிக்க மாட்டானா! ஐயோ! நம்மை தூக்கில் போட்டுவிட்டால் என்ன செய்வது என்று! இவர்களையும் மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை என்று விட்டு விடுங்கள் இனி மற்றவர்களும் அட்வான்ஸ் புக்கிங்கில் எரிப்பார்கள். அப்போதும் மனித உரிமையைப் பற்றி லபோ லபோ என்று அடித்துக்கொண்டிருங்கள் அப்போது நீங்கள் கூறுவதை கேட்க உங்கள் வீட்டில் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

தூக்குதண்டனையை நிறைவேற்றினால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படமாட்டார்களா?

ங்கொய்யாலே! புல்லரிக்குதுய்யா! நல்லவேளை மாடு பக்கத்துல இல்லை. என்னய்யா உங்கள் கேவலமான லாஜிக்! பாதிக்கப்பட்டவனை பற்றி மயிரைக்கூட நினைத்து பார்க்க மாட்டேன் என்கிறீர்கள் அனைத்தையும் தப்பு செய்தவனுக்காகவே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கு மட்டும் தான் குடும்பம் குட்டி எல்லாம் இருக்கா பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்ன அநாதை(நா)யா! இந்த மாதிரி ஒரு பொறம்போக்கை பெற்றதற்கு வளர்த்ததற்கு குற்றம் செய்தவனின் அம்மா அப்பா வெட்கப்பட வேண்டும்.

அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று நினைப்பது அந்தக் கடவுளால் கூட முடியாது? அப்படி இருக்கும் போது குற்றம் செய்தவனின் குடும்பத்தை நினைக்க சொல்கிறீர்கள். ஏன்யா! உங்க கண்ணுக்கெல்லாம் இவர்கள் மட்டும் தான் தெரிவார்களா! பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் உங்கள் மனித உரிமை லிஸ்ட்ல வரவே மாட்டாங்களா!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…. தூக்குத்தண்டனையை விட சிறைத்தண்டனை ரொம்பக் கொடுமையானது அதனால் தூக்குத்தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை தரச்சொல்கிறீர்கள், நியாயமான பேச்சுத்தான் ஏற்றுக்கொள்கிறேன். சரி! உங்கள் வழிக்கே வருகிறேன்… சிறைத்தண்டனை என்றால் அந்த தண்டனையை முழுவதுமாக அனுபவிக்க அனுமதிப்பீர்களா! கஞ்சா, சிக்கன், மட்டன், தம்மு, அபின், சரக்கு, குட்டி, செல் போன் இதெல்லாம் இல்லாமல் உண்மையான முழுமையான தண்டனையை அனுபவிக்க உறுதி தருவீர்களா! ம்ம்ம் முடியாதுல்ல. அப்ப என்ன பண்ணனும்…. அதே தான்.

இந்த இடுகை (Post) உணர்ச்சி வேகத்தில் எழுதிய இடுகையல்ல… இன்றல்ல எப்போது கேட்டாலும் இதுவே என் கருத்து. அதெல்லாம் முடியாது! அதெப்படி! மனித உரிமைன்னு…. மறுபடியும் ஆரம்பித்தால்….. ஐயா! சாமி ஆளை விடுங்க. உங்க அளவிற்கு நான் நல்லவனல்ல அதே போல உங்களைப்போல நல்லவனாக இருக்க விருப்பமும் இல்லை. உங்கள் வாதப்படி காட்டுமிராண்டியாக இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் அவமானமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்