தமிழக அரசின் குட்டைய குழப்பும் கொள்கை அற்ற அறிவிப்புகள் ( பில்டிங்கு ஸ்டாங், பேஷ் வீக்கு )

தமிழக அரசின் குட்டைய குழப்பும் கொள்கை ( தெளிவற்ற )அறிவிப்புகள் :
( பில்டிங்கு ஸ்டாங், பேஸ்மட்டம் வீக்கு ) . கல்வி துறை ஆகட்டும் , நிதித்துறை ஆகட்டும் , கூட்டணி ஆகட்டும் , இலவச அறிப்புகள் , இப்படி எதை எடுத்தாலும் குழப்பமான அறிவிப்புகள் ,திட்டங்கள் ஏன் ? இந்த தடுமாற்றம் கலைஞ்சருக்கு தெரியவில்லை . குழம்பிய அல்லது குழப்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமுன்னு நினைக்கறாரோ ? அது அவருக்கும் , அவர் சகாக்களுக்கும் தான் வெளிச்சம் . அவங்க கூட்டணின்னு ஒன்னு இருக்கே ! அதன் தலைவருக்கு அரசுக்கு ஆமாம் போடமட்டுமே ! பழகி போன பூம்பூம் மாட்டு மாதிரிதான் அவரு , அதுக்கு மேல அவர பற்றி சொல்ல ஒண்ணுமில்ல . மற்ற தலைங்க ஆட்சில பங்கு கேட்டு பங்காளி சண்டை போடறதுக்கே வீளை சரியா இருக்காங்க !. அதிருப்தி தலைங்க வெளியில சீட்டு பேரம் பேசுதுங்க . நம்ம இளிச்ச வாய் தமிழன் தேமேன்னுன் முழி பிதுங்கி , காதல் பட நாயகன் மாதிரி இறுதில முடிய பிச்சிகிராமாதிரி ( பைத்தியம்) , நாள கடத்திக்கிட்டு இருக்கிறான் .
ஏன் இந்த தடுமாற்றம் இந்த தமிழக அரசுக்கு ! கொஞ்சம் அலசி பார்க்கலாம் ஒரு பாமரனாக .

கருத்துகள்