நாதி அற்ற நாட்டில் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பும் நடுத்தர ஏழை மக்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ச்சி !!!

கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள்-சாந்திபூஷன்
இந்த செய்திய படிச்ச உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடர நீதி மன்றம் இருக்கு நீதிபதி ஊழல் செய்தல் எங்கே முறை இடுவது . ஞாபகம் வந்துடுச்ச அதேதான் அந்த வசணமே தான் (வற்றாத ).
என்ன அவங்களும் இந்தியர்கள் தானே அவர்களுக்கும் நாட்டு பற்று (பண பற்று ) இருக்கத்தானே செய்யும் , இந்த மாதிரி நீதிபதிகள் இருந்தால் எப்படியா? நீதி கிடைக்கும், பணத்துக்கு சலாம் தான் போடா சொல்லும் .
இவர்களை நம்பி கடன வாங்கி , நிலத்த வித்து , நாயம் கிடைக்குமுன்னு நினைச்சி , நீதி மன்றம் போகும் சுப்பனும் , குப்பனும் என்னடா ஆவனுங்க , அங்கேயும் பணம் தாண்ட சுத்தியால் தட்டி நாயம் சொல்லுது . எப்படி? நீதிய ,நாயத சொல்லும் ! ஆமா சொல்லிபுட்டேன் . பாவி பயலுகளே ! நீங்களுமாட இளைத்தவனை எட்டி உதைப்பது . நீங்க தூக்கி நிறுத்தட்டியும் பரவா இல்லை , மேலும், மேலும் அவனை தலையில அடிச்சி படுக்க வச்சிடாதீங்க !!. உங்களை நம்பி வரவங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதிங்க !. அது அவனை மட்டும் இல்ல அவன் சமூகத்தையே அழிச்சிடும் . அப்புறம் யாருக்கு நீதி சொல்ல போறீங்க !!!!!
யோசிங்க ! உங்களை தெய்வங்களா பாக்கும் இந்த நீதிக்காக போராடும் அப்பாவிகள முடமாகிடாதீங்க !. அது அவனை அழித்து பின் உங்களையும் ஒருநாள் அழிக்கும் மறந்திடாதீங்க ! ஆறுதலான ஒரு விஷயம் 6 பேர் நல்லவங்களா இருக்கறதா பார்த்து என் மனம் சொல்லுது , இன்னும் நீதி சகலைடா !!!!!!! . அது கொஞ்சம் ஆபத்தான கட்டத்துல இருக்கு தகுந்த மருந்து கொடுத்த குணமாகும் . நீதியும் பிழக்கும் , நம்புவோம் !!!!!!!!!

செய்தி :
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.

சில வருடங்களுக்கு முன்பு டெஹல்கா இதழுக்கு சாந்திபூஷனின் மகனும், சட்ட வல்லுநருமான பிரஷாந்த் பூஷன் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் கடைசி 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் கறை படிந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கக் கோரி சாந்தி பூஷன் மனு செய்துள்ளார். அத்தோடு தனது மகன் சொன்னது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்களையும் தான் தாக்கல் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குறித்த விவரங்களையும் ஆதாரங்களையும் மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேசமயம், 6 பேர் மிக மிக நேர்மையானவர்கள். 2 பேர் எப்பட்டிப்பட்டவர்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

டெஹல்கா இதழில் இதுதொடர்பான பிரஷாந்த் பூஷனின் பேட்டி வந்திருந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 16 பேர் விவரம்...

ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடாச்சலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.என்.பன்ச்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லஹோத்தி, வி.என்.காரே, ஒய்.கே.சபர்வால் ஆகியோர்.

சாந்தி பூஷன் தனது மேலும் கூறுகையில், இந்த மனுவை ஒரு 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிப்பது கேலிக்கூத்தாக இருக்கும். மாறாக, ஒட்டுமொத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சேர்ந்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும். காரணம், இதன் மூலம் இந்திய நீதித்துறையை முற்றிலுமாக சுத்தப்படுத்த வழி பிறக்கும் என்பதால் என்று தெரிவித்துள்ளார் சாந்தி பூஷன். நன்றி தட்ஸ்தமிழ்

கருத்துகள்