பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்!

இப்படி எல்லாம் கதை விட்டோ அல்லது நாடகம் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது . என்னத்த சொல்ல , இது எப்படி இருக்கு தெரியுமா ? , ஆள வச்சி இவனுங்களே கொள்ளுவான்கலாம். பிறகு துக்கம் தொண்டைய அடைக்குது என்று நீலி கண்ணீர் வடிக்கும் கூட்டம் தான் நினைவுக்கு வருது . எதுக்கு சுத்தி வளச்சி பேசிகிட்டு பளிச்சுன்னு ஒரு உதாரணம் . நம்ம மு. . எம் .ஜி. ஆர் .இறந்தப்ப இப்படித்தான் நீலி கண்ணீர் வடிச்சாரு (ஆனால் மக்கள் அதை எல்லாம் நம்பள என்பது வேற விஷயம் ). உயிர்ரோடு இருக்கும் போது கண்ட மேனிக்கு திட்டினாரு , ஐஸ் பெட்டியில வச்சிட்டாங்க மருத்துவ மனையில பொணத்த படுக்க வச்சி ஆட்சி நடத்துராங்கோ எல்லாம் பேசினாரு , இறந்த செய்திய கேட்ட உடனே அப்படியே பிளேட்ட மாத்தி நாங்கள் இருவரும் நட்பின் அடையாளம் என்றெல்லாம் கதைவிட்டது தான் எனக்கு நாபகம் வருது . இந்த இளிச்சவாய் பய தமிழன் இதையும் நம்பத்தான் போறான் . என்னத்த சொல்ல , ஒன்று மட்டும் ஆணித்தரமாக சொல்ல முடியும் , அந்த வயதான தாய் உள்ளம் ஒரு நாளும் சிங்களவனையும் , மு.கவையும் மன்னிக்காது . காரணம் இவள் பிரபாகரன் ஒருவருக்கு மட்டுமே தாய் அல்ல வீரம் விளைந்த ஒவ்வொரு தமிழனுக்கும் வீரத்தாய் . இழந்தது ஒரு மகனல்ல ஒரு குடும்பம் அல்ல ,ஒரு இனம் !!!! .அந்த தாய்க்கு
மரணம் என்பதொல்லாம் ஒரு பொருட்டே அல்ல !. வீரம் என்றும் தோற்றது இல்லை . கோழை என்றும் நலமாக வாழ்ந்ததில்லை . ஒரு சில சிங்களவர்களை தவிர்த்து அனைத்து சிங்களவனும் அப்படியே ! வெறிபிடித்த கோழைகள் .

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை மருத்துவமனை [^]க்கு வந்து பார்த்து சிங்களர்கள் காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக செய்திகள் [^] கூறுகின்றன.

இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடமராட்சி பகுதிக்கு சுற்றுலா வருபவர்களில் ஏராளமானோர் பார்வதியம்மாளை பார்க்க வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.

இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக - இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள்