நான் கண்ட கனவு கனவாகி போகுமோ!


நான் கண்ட கனவு கனவாகி போகுமோ ! இந்திய வல்லரசாக வேண்டாம் முதலில் நல்லரசாக வேண்டும் . முதலில் நம் நாட்டு மக்களின் நலன் கவனிக்கப்பட வேண்டும் , அந்நியன் இங்கு வந்து கொழுத்து போக மட்டுமே அல்லது இந்திய பண முதலைகளையும் பற்றி கவலை படும் அரசு பாமரானின் வாயிற்று பசியை போக்கி சுயகாலில் நிற்க கற்றுகொடுக்க வேண்டும் அதற்கு படிப்பறிவை இலவசமாக வழங்க வேண்டும் .ஐயா அரசியல் தலைவகளே ! நீங்கள் இலவசங்களை முதலில் நிறுத்துக்கள் உழை க்காமல் வாங்கும் எந்த பொருளும் அவனை கூனி குறுக செய்யும் , ஒரு பிடி சோறாக இருந்தாலும் , தான் சம்பாதித்தது என்றால் அவனுக்கு துணிவு வரும் , தன்மானம் வளரும் , அதற்கு முதலில் அனைத்து சலுகைகளையும் இலவசங்களையும் நிறுத்தி, முழுக்க பள்ளிக் கல்வியை இலவசமாக தாருங்கள் .மேல் படிப்பிற்கு மான்னியம் தாருங்கள் அப்பொழுது அவனுக்கு நாட்டின் மீது பற்று வளரும் தனக்கு கல்வியை வழங்கிய நாட்டி டின் மீது பிடிப்பு வரும் நாட்டிற்காக உழைக்க தோன்றும். அப்பொழுது நாடு தானாக வல்லரசாக மாறும் . இன்று நடப்பது இதற்கு நேர் எதிர் கல்வியை பணம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றியது யார் ? இதற்கு அனுமதி வழங்கியது யார் ? பணம் உள்ளவன் மட்டுமே ! படிக்கிறான் பாவப்பட்டவன் மேலும் கிழ் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் .இதே நிலை நீடித்தால் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் ஏழ்மையை போக்க முடியாது, தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது, இந்தியா என்றும் வல்லரசாக முடியாது . அப்படி நீங்கள் நாங்கள் வல்லரசு என்று சொல்வீர்கள் என்றால் . தலை கீழாக நின்றாலும் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது .! தீவிரவாதத்தின் தீர்க்கமான காரணம் முதல் காரணம் ஏழ்மையே ! யோசிக்குமா ? இந்திய மேல்தட்டு மக்கள் அரசியல்வாதிகள், அரசை வழி நடத்தும் படித்த அறிவு ஜீவிகள் . இந்திய வல்லரசாக போகிறது. ஆனால் ஒரு கடைகோடி குடிமகனுக்கு குடிபதற்கு மகளை விற்கும் நிலைமையை என்ன சொல்வது....நாம் எங்கே செல்கின்றோம் உயர்ந்தவன் மட்டுமே மேலும் மேலும் உயர்கின்றான். ஆனால் அடிமட்டத்தில் இருப்பான். அப்படியே இருக்க என்ன காரணம்? நமது பொருளாதார கொள்கைய இல்லை நமது அரசியல் வாதிகளின் வோட்டு வங்கியை கணக்குபோட்டு அடித்தட்டு மக்களுக்கு முறையான கல்வியும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்காமல் இருக்க முட்டுக்கட்டை போடுகிறார் களா................??? - பாலா உண்மையான இந்திய குடிமகன் .

கருத்துகள்

  1. (ஐயா அரசியல் தலைவகளே ! நீங்கள் இலவசங்களை முதலில் நிறுத்துக்கள்) அரசியல் தலைவர்கள் நிறுத்தினாலும் வாங்கி பழகிய நம் மக்கள் சிந்திக்க மாட்டார்கள் பாலா சார்

    பதிலளிநீக்கு
  2. க.சசிகுமார் : மிக்க நன்றி , உழை க்காமல் வாங்கும் எந்த பொருளும் அவனை கூனி குறுக செய்யும் , ஒரு பிடி சோறாக இருந்தாலும் , தான் சம்பாதித்தது என்றால் அவனுக்கு துணிவு வரும் , தன்மானம் வளரும் , அதற்கு முதலில் அனைத்து சலுகைகளையும் இலவசங்களையும் நிறுத்தி, முழுக்க பள்ளிக் கல்வியை இலவசமாக தாருங்கள் ........
    நமது அரசியல் வாதிகளின் வோட்டு வங்கியை கணக்குபோட்டு அடித்தட்டு மக்களுக்கு முறையான கல்வியும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்காமல் இருக்க முட்டுக்கட்டை போடுகிறார் களா................???

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக