காவிரியை வைகையுடன் இணைக்க அனுமதிக்க மாட்டோம்: அன்புமணி

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010,23:52 IST
மனசுக்கு மிகவும் அழுத்தத்தையும் , வருத்தத்தையும் தர கூடிய செய்தி
என்னதாம்பா உங்க அரசியல் , என்ன சொல்ல வரீங்க ! உங்களை நாடு கடத்தீனா என்ன என்று தோன்றுகிறது . உங்களையும் கொஞ்சம் மக்கள் பின்தொடருகிறார்களே ! பாவம் அவர்களை நினைத்து வருத்த படுவதை தவிர என்ன செய்வது உங்களை குண்டர் சட்டத்துல உள்ள போடா முடியாத? எப்படி நடிக்கிறீங்க இந்த லட்சணத்துல நீங்க நடிகர்களை எதிர்கிறீங்க . நீங்க ஒரு காமெடி பீஸ் , இருந்தாலும் உங்களுகென்று ஒரு கட்சி , டி. வி .சேனல் , சின்னம் எல்லாம் இருக்கே அது தான் சங்கடமா இருக்கு . தமிழ்நாட்டின் நதிநீர் இணைப்புக்கே இந்த கதி என்றால் நீங்க எல்லாம் எதுக்கு காவேரி பிரச்சனை பற்றி பேருறீங்க ? . அப்புறம் எப்படி தென் இந்திய நதிகளை இணைப்பீங்க , இந்திய நதிகளா இணைப்பீங்க , போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ,இப்ப எல்லாம் மக்களுக்கு எது நல்லதோ அதை எதிர்கறது தான் அரசியல் என்றாகி விட்டது .
அவன் வேற மாநிலம் பரவா இல்ல, நீங்க உங்க வீடுவரை எதாவது மாநிலமா மாத்திட்டீங்களா !! . தமிழ் வாழ்க , எப்படி வாழும் இங்க இருக்கும் தமிழனுக்கே இந்த கதி . இவனுங்க தான் தமிழன காப்பாத்து ராங்கலாம் !!! அய்யோ , அய்யோ !!


சேலம் :""தமிழக அரசு காவிரியை வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிட்டிருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சேலம், நாமக்கல் மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் பா.ம.க., தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறி, தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வரும் வரை அடங்காது.பா.ம.க.,வை யாராலும் அழிக்கவும் முடியாது; அடக்கவும் முடியாது. சினிமா, வசனம் ஆகியவற்றை நம்பியே தமிழக அரசியல் உள்ளது. தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானமாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு இலவசங்கள் வழங்கப்படுகின்றன.


இங்கு யாரும் இலவசமும் பிச்சையும் கேட்கவில்லை. கேட்பது எல்லாம் இலவச கல்வியும், வேலைவாய்ப்பும் தான். தமிழகத்தில் 33 சதவீத வன்னியர்கள் உள்ள நிலையில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்கிறோம். இதுவும் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களின் உரிமையை கேட்கிறோம். அந்த உரிமையை தரவில்லை என்றால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும். அது எந்த வகையான போராட்டம் என்பதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்.


தமிழக அரசு காவிரியை, வைகை ஆற்றுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. அதை பா.ம.க., அனுமதிக்காது. காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை வடமாவட்ட மக்களுக்கே பயன் படுத்த வேண்டும். அதற்காக திட்டமிட வேண்டும்.திட்டம் தெரிய வில்லை என்றால் நான் திட்டமிட்டு தருகிறேன். ஆட்சியை எங்களிடம் ஆறு மாதம் மட்டும் தந்து பாருங்கள் பார்க்கலாம். "சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் சேவை, ரயில்வே கோட்டம் ஆகியவற்றை நாங்கள் கொண்டு வந்தோம்' என்கின்றனர்.இவை யார் கொண்டு வந்தது என்பது மக்களுக்கு தெரியும். நான் விளம்பரம் தேடிக் கொள்ள இதை சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள்.இவ்வாறு அன்புமணி பேசினார்.கூட்டத்தில் பா.ம.க., தலைவர் மணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்