விளையாட்டு


சென்னை, ஜன.17: உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் புதிதாக அஸ்வின், பியூஸ் சாவ்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தோனி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் இன்று செய்தியாளர்களிடையே உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார்.இந்த அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் புதிதாக உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லாவுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.ஏற்கெனவே இருந்த அணியில் இருந்து ஸ்ரீசாந்த், ஓஜா, பார்த்திவ் படேல், ரோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இது வெற்றிகரமான காம்பினேஷன் என்றும், இந்த அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:
தோனி (கேப்டன்/விக்கெட்கீப்பர்)
வீரேந்தர் சேவாக்(து.கேப்டன்)
சச்சின் டெண்டுல்கர்,
கௌதம் காம்பிர்,
யுவராஜ் சிங், 
சுரேஷ் ரெய்னா,
விராட் கோஹ்லி,
யூசுப் பதான்,
ஹர்பஜன்சிங்,
ப்ரவீண் குமார்,
ஜாகிர் கான்,
ஆசிஷ் நெஹ்ரா,
முனாப் படேல்,
அஷ்வின்,
பியூஷ் சாவ்லாகிரிக்கெட் லைவ் ஸ்கோர் காண இங்கே சொடுக்கவும்

 

  • 5 - 0 .தொடரை வென்றது இந்தியா, 5வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி,


 * காம்பிர் சதம் - தொடரை வென்றது இந்தியா, 3வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி,

* ரூ.26 கோடிக்கு கேப்டன் தோனியுடன் யுபி குழுமம் ஒப்பந்தம்

பெங்களூர், டிச.3: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை, விளம்பரத் தூதராக யுபி குழுமம் ரூ.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி யுபி நிறுவனம் தயாரிக்கும் மெக்டாவல் சோடா விளம்பரங்களில் தோனி தோன்றுவார். 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்திய விளையாட்டு வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14 

Indian Kabbadi Team
குவாங்ஷு: ஆசிய விளையாட்டு [^] ப் போட்டியில், இந்தியா [^] புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1982ம் ஆண்டு அதிகபட்சமாக 57 பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, தற்போதைய குவாங்ஷு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 62 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை 14 தங்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

இன்று இந்திய விளையாட்டுத் துறைக்கு முக்கிய நாள். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் அடுத்தடுத்து தங்கம் வென்று இந்தியர்களை குஷிப்படுத்தின. மேலும் தடகளத்திலும் இந்தியா தங்கத்தை அள்ளியது. இன்று ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதக்க வேட்டையை முடுக்கி விட்டுள்ளது இந்தியா. நேற்று வரை 10 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, இன்று ஒரே நாளில் 4 தங்க்ப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.

மகளிர் கபடிக்கு முதல் தங்கம்

முதலில் மகளிர் கபடி அணி மூலம் 11வது தங்கத்தை வென்றது இந்தியா.

தாய்லாந்து அணியுடன் இன்று இந்தியா கபடி இறுதிப் போட்டியில் மோதியது. இப்போட்டியில், 28-14 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது.

இந்த ஆசிய போட்டியில்தான் முதல் முறையாக மகளிர் கபடி போட்டி அறிமுகமாகியுள்ளது. முதல் தொடரிலேயே தங்கத்தை வென்று விட்டது இந்தியா. ஆடவர் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இந்திய அணியே தங்கம் வென்று இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் அணிக்கு 6வது தங்கம்

அடுத்து ஆடவர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 37-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.

இது இந்திய ஆடவர் கபடி அணிக்கு கிடைத்துள்ள 6வது தொடர் தங்கமாகும். மேலும் கபடி போட்டி அறிமுகமானதிலிருந்து இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருகிறது இந்தியா என்பது விசேஷமானது.

மகளிர் ரிலேயில் தங்கம்

இந்தியாவின் 13வது தங்கத்தை மகளிர் 4X400 தொடர் ஓட்ட அணி பெற்றுத் தந்தது. மஞ்சீத் கவுர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குஞ்சி, மந்தீப் கெளர் ஆகியோர் அடங்கிய இந்த அணி கஜகஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்து தங்கம் வென்றது.

விஜேந்தருக்கு தங்கம்

இதேபோல ஆடவர் 75 கிலோ குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

இது போக மகளிர் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் வெள்ளியும், கவிதா ராத் வெண்கலமும் வென்றனர்.

செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது.

ஆடவர் ஒற்றையர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். அதேபோல ஜோடிப் பிரிவில் அனுப் குமார், அவனி பன்சால் ஜோடி வெண்கலம் வென்றது.

இன்று கிடைத்த பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கம் 14, வெள்ளி 15, வெண்கலம் 33. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா அதிக அளவிலான பதக்கங்களை வென்றது இதுவேயாகும்.

இதற்கு முன்பு 1982ல் டெல்லியில் நடந்த போட்டியில் 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலத்துடன் 57 பதக்கங்களைப் பெற்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க வேட்டையாகும்.

குத்துச் சண்டையில் சில தங்கப் பதக்க வாய்ப்பை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. எனவே இந்த முறை சிறப்பான இடத்தை இந்தியா பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த முறை 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூசி.க்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி-இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி 

Virat Kohli
குவஹாத்தி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் குவஹாத்தியில் இரு அணிகளும் இன்று சந்தித்தன.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்தியத் தரப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டோணி ஓய்வில் இருப்பதால் கம்பீர் கேப்டன் பொறுப்புடன் முரளி விஜய்யுடன்ஆட்டத்தைத் தொடங்கினார்.

இருவரும் பெரிய ஸ்கோருக்கு எத்தனிக்க ஆரம்பித்த நிலையில், முரளி விஜய் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்பீர் 38 ரன்கள் சேர்த்து வீழந்தார்.

ஆனால் விராத் கோலி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அபாரமாக ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் அதிரடியாக 105 ரன்களைக் குவித்தார்.

பின்னர் வந்தவர்களில் யுவராஜ் சிங் 42 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மின்னல் வேகத்தில் 19 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தார்.

இறுதியில், 49 ஓவர்களில் இந்தியா 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தனது ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து ஆரம்பத்தில் தனது முக்கிய விக்கெட்களை இழந்ததால் தடுமாறியது. தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவு தொடர்ந்ததால் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

குப்டில் 30 ரன்கள் எடுத்தார். பெரிய ஸ்கோரை நோக்கி இவர் நடை போடத் தொடங்கியபோது அஸ்வின் அபாரமாக அவுட்டாக்கினார். ஹவ் 9 ரன் எடுத்திருந்தபோது அவுட் ஆனார்.

வில்லியம்சன் கட்டையைப் போட்டு 25 ரன்களைச் சேர்த்து யுவராஜ் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

டெய்லர் சற்றுப் போராடி 66 ரன்களைக் குவித்தார். ஆனால் இவரையும் அஸ்வின் அவுட்டாக்கி ஆட்டத்தில் விறுவிறுப்பைக் கூட்டினார்.

பின்னர் வந்தவர்களில் மில்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 32 ரன்களைக் குவித்துப் பார்த்தார். இருப்பினும் அதற்குள் காலம் கடந்து போய் விட்டது. முன்னணி வீரர்கள் சடசடவென போய் விட்டதால், நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹர்பஜன்சிங்-லட்சுமண் ஜோடி இந்திய அணியை காப்பாற்றியது ...
  அ
Harbhajan Singh
கமதாபாத்: நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. ஹர்பஜன் சிங் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் போட்டு ஆட்டம் டிராவில் முடிய உதவினார்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதலாவதுடெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து சரியான பதிலடி கொடுத்து 459 ரன்களைக் குவித்தது.

பின்னர் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஆரம்பத்தில் பலத்த சரிவைச் சந்தித்தது. ஆனால் வால் வரிசை வீரர் ஹர்பஜன் சிங்கும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்து அணியைக் காப்பாற்றி கரை சேர்த்து விட்டனர்.

இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் ஹர்பஜன் சிங் போட்ட அபார சதம்தான். 115 ரன்களைக் குவித்தார் ஹர்பஜன். இது அவருக்கு முதல் டெஸ்ட் சதமாகும். அது மட்டுமல்லாமல், முதல் தரப் போட்டிகளிலும் இதுவே அவரது முதல் சதம்.

அவரும் லட்சுமணும் (91) இணைந்து 7வது விக்கெட்டுக்கு 163 ரன்களைக் குவித்தனர்.

முன்னதாக நேற்று 6 விக்கெட்களை இழந்து 82 ரன்களில் அல்லாடிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை தனது ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருப்பினும் ஹர்பஜனும், லட்சுமணும் பொறுமையுடன் ஆடி நியூசிலாந்துக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டனர்.

இந்தியா 2வது இன்னிங்ஸை 266 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தது. இதனால் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கியது நியூசிலாந்து. இருப்பினும் ஆட்டம் முடிவடைந்தபோது அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமன்வெல்த் போட்டி: சிறந்த வீராங்கனை பட்டியலில் சாய்னா


டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனையைத் தேர்வு செய்து லண்டனில் வழங்கப்படும் விருதுக்கான இறுதிப் பட்டியில் சாய்னா இடம் பிடித்துள்ளார்....