தனக்கு மீறி வீட்டுலயும் வெளியவும் கணக்கில்லமா சேர்த்து வச்சிருக்கும்
கனவான்களே! கொஞ்சம் அத ஏழ்மைல இருக்குறவங்களுக்காக தொழில் தொடங்கி வேலை
குடுக்கலாமே லாபநோக்கம் இல்லாம ...இல்ல குறைஞ்ச லாபத்திற்கு அவங்க
குடுபத்தை அவனே பாத்துகுவானே. படிக்கமுடியாம இருக்குற ஏழை மாணவர்களுக்கு
கல்வி கொடுக்கலாமே எதுக்குயா கோவில், குளம், வேண்டுதல் என்ற பெயரில்
வீணடிக்கிறீங்க.
உங்க வேண்டுதலை
மாத்திக்குங்க ஒரு அநாதை குழந்தை செலவ நான் பாத்துகிறேன் கடவுளே !, நாலு
பேருக்கு நோய் சிகிச்சைக்கு உதவுறேன் கடவுளே!, உண்மையாவே உணவுக்காக கஷ்ட
படுரவங்களுக்கு உணவு கொடுக்கிறேன் கடவுளே !, மானத்தை மறைக்க ஆடை
இல்லாதவங்களுக்கு ஆடை வாங்கித் தரேன் கடவுளே ! , தண்ணீர சேர்த்து வைக்கிற
எரி, குளங்களை தூர்வாருறேன் கடவுளேனு அவங்க அவங்க வசதிக்கு ஏற்றா மாதிரி
உங்கள் நேர்த்தி கடனை செலுத்துங்க கடவுளை நீங்க நேரில் காணலாம்..
அன்பால் கருணையால் எவன் ஒருவன் இருக்கிறானோ அவர்களுக்கு கடவுள் மனித உருவில் காட்சி தருகிறான்... ''அன்பே கடவுள்''...
- கவிதை பூக்கள் பாலா
அன்பால் கருணையால் எவன் ஒருவன் இருக்கிறானோ அவர்களுக்கு கடவுள் மனித உருவில் காட்சி தருகிறான்... ''அன்பே கடவுள்''...
- கவிதை பூக்கள் பாலா
கருத்துகள்
கருத்துரையிடுக