
1 , வெண்மையான சருமத்தை இயற்கையாக பெற...
எலுமிச்சை சாற்றில் இயற்கையாக வெளுக்க வைக்கும் குணங்கள் உள்ளது. சருமத்தை
இயற்கையாக வெளுக்க வைப்பதால், அது நம் சருமத்திற்கு மிகவும் பயன் அளிப்பதாக
விளங்குகிறது. அதனால் தான் வீட்டில் தயார் செய்யப்படும் அழகு
பொருட்களிலும் சரி, சந்தையில் கிடைக்கும் அழகு பொருட்களிலும் சரி,
2. இளமையுடன் இருக்க...
எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. இத்தகைய எலுமிச்சையை நேரடியாக
சருமத்தின் மீது தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை அடங்கியுள்ள பேஸ் பேக்கை
தடவலாம். இது கரும்புள்ளிகளையும் நாளடைவில் நீக்கும்.
உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம்.
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள
சுருக்கங்களை எதிர்த்து போராடும். சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ்
பேக் வேண்டுமா? அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும்
பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள்.
இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில்
கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.
3. எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க...
எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும
பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக
எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின்
எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும்.
அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை
பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை
கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.
நற்பதமான எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும்
முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள்
மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை
முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை
அகற்றவும் செய்யும். மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த
எண்ணெயை உபயோகப்படுத்தலாம்.
எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி,
வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால்,
உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை
மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம். அது உதட்டு பிரச்சனைகளை
தீர்க்கும்.
6.அக்குள்களைப் பராமரிக்க...
நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே
கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும்
பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை
அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே
எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள்.
வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல்
ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.
எளிதில் உடையக்கூடிய மஞ்சள் நிற நகங்களை கொண்டிருக்கிறீர்களா?
அப்படியெனில் அழகு சாதனங்களில் எலுமிச்சை இருக்கும் வரை கவலைப்பட
தேவையில்லை. எப்படியெனில், எலுமிச்சை சாற்றில் நகங்களை ஊற வைத்தால்,
நகங்கள் திடமாக இருக்கும். மேலும் இது நகங்களின் பழுப்பு நிறத்தையும்
நீக்கி, அழகாக ஜொலிக்கச் செய்யும்.
முகப்பரு மற்றும் இதர சரும புண்களுக்கு எலுமிச்சை சாறு நல்ல மருந்தாக
விளங்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளதால், சருமத்தை அது
ஆரோக்கியமாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் அதில் உள்ள
ஆல்கலைன் சருமத்தை, பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகளை ஏற்படுத்தும்
பாக்டீரியாவிடம் இருந்து பாதுகாக்கும்.
9. அழகிய கரங்களுக்கு எலுமிச்சை
முகத்தை போல கைகளும் அதிக அளவில் வெளிப்படும் ஒரு பாகமாகும். அதனால்
அதனையும் நன்றாக பராமரிக்க வேண்டும். எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும்
பாதாம் எண்ணெயை கலந்து, கைகளை மசாஜ் செய்யுங்கள். இது கைகளை சுத்தமாகவும்,
மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் இது முழங்கையில் காணப்படும் கரு
நிறத்தை வெளுப்பாக்கவும் செய்யும்.
10.உடல் எடை மெலிவதற்கு...
எலுமிச்சையில் அதிக அளவு பெக்டின் பைபர் உள்ளது. அது பசியை போக்க
உதவும். பெக்டின் உள்ள உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு குறைந்த அளவில்
உள்ளதால், அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும். மேலும் இவ்வகை உணவுகள்,
உடம்பில் உள்ள இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில்
வைக்க உதவும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து
குடித்தால், உடம்பும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இது கலோரிகளை எரித்து,
உடல் எடையை குறைக்கச் செய்யும்.
11.வாயை நற்பதத்துடனும் பற்களை சுத்தமாகவும் வைக்க...
வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பெரிதும் உதவி
புரிகிறது. மேலும் இது பல் வலி மற்றும் ஈறு வீக்கத்திற்கு நிவாரணியாக
விளங்கும். வெண்ணிற மற்றும் பளிச்சிடும் பற்களுக்கு, எலுமிச்சை பழத்தை
சிறிது உப்பு அல்லது பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களில் தேய்க்க வேண்டும்.
12.பொடுகுகளை நீக்க...
12.பொடுகுகளை நீக்க...
அரிக்கும் தலை அல்லது பொடுகு நிறைந்த தலை முடியுடன் வெளியில் செல்ல
சங்கடமாக உள்ளதா? கவலை வேண்டாம்! தொந்தரவு அளிக்கும் இந்த பொடுகுகளில்
இருந்து எலுமிச்சை காக்கும். அதற்கு தலையில் எலுமிச்சையை தேய்த்து, சிறிது
நேரம் ஊற வைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
13.அழகான கூந்தலுக்கு...
தலைமுடி தனிப்பட்டு தெரிய அல்லது தலைக்கு பயன்படுத்திய சாயங்களை
நீக்க, ஏன் எலுமிச்சை போன்ற இயற்கையான வழிமுறைகளை நாடக் கூடாது? ஏனெனில்
எலுமிச்சையை தலை முடியில் தேவையான பகுதியில் தடவி, சிறிது நேரம் சூரிய
ஒளியில் நின்று காய வையுங்கள். இதனால் தடவிய பகுதி மட்டும் தனித்து தெரிவது
உறுதி. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம், தலை முடியில் பூசிய
சாயத்தை இயற்கையான முறையில் நீக்கும்.
செரிமான பிரச்சனை அடிக்கடி வந்து செல்கிறதா? அப்படியானால் எலுமிச்சை
செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது என்பது உங்களுக்கு நல்ல செய்தியாக
விளங்கப் போவது உறுதி. அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை
கலந்து, சிறிது தேனையும் கலந்து பருகலாம். இது உடலில் தேவையற்ற
நச்சுத்தன்மையுள்ள பொருட்களை வெளியேற்ற உதவும். அழகுக்கு சருமம் மிகவும்
முக்கியமாக உள்ளதால், மின்னும் சருமத்தை பெற ஆரோக்கியமான செரிமான அமைப்பு
அவசியமான ஒன்று.
எலுமிச்சையில் வேறு பல உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது. அதில் செரிமான
அமைப்பை நன்றாக வைக்க உதவுவதோடு மட்டும் நின்று விடாமல், புண்ணான தொண்டை,
நெஞ்சு எரிச்சல் மற்றும் சரும அரிப்புக்கும் நிவாரணியாக விளங்குகிறது.
மேலும் புண்களை குணப்படுத்தவும் எலும்புகள் மற்றும் இணைப்பு தசைகளை
ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.
உடலின் திறன் அதிகரிக்க எலுமிச்சை மிகவும் உறுதுணையாக நிற்கிறது. மேலும்
எலுமிச்சை எண்ணெயின் மனம் மன நிலையை ஊக்கப்படுத்தி, மன அழுத்தத்தை
குறைக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக