மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை

மி‌‌ன்வெ‌ட்டால் ம‌க்களை‌விட ஆ‌யிர‌ம் மட‌ங்கு அரசு கவலை படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர் ஜெயல‌லிதா.

அப்ப இனி மெழுகு வத்தி தானா !!!!!


 ஆஆ என்ன ஒரு அற்புதம்  அம்மாவே கவலை படுகிறார்  . என்னமா இப்படி சொல்லிடீங்க நாங்க 24 மணிநேரமும் மின்சாரம்  இல்லை இன்னலும் பரவாஇல்லை நீங்க கவலை படாதீங்க . கட்சி தொண்டங்க கூட இப்படி சொல்ல மாட்டான் . அம்மாக்குகூட காமெடி எல்லாம் வருது ........ ஹ ஹ ஹ சிரிங்கப்பா !.

 மின்சாரப் பற்றாக்குறை, மின் உற்பத்திக் குறைவு போன்ற பிரச்னைகளை சரி செய்வது, சீர் செய்வது என்றால் அது ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஏன் ஒரு ஆண்டு காலத்திலும் முடியாது.

சரி அப்புறம் எப்படி சொன்னீங்க 3 மாதத்தில் எல்லாம் சரி செய்து விடுவோமுன்னு . எல்லாம் அரசியலு ........................ 

எவ்வளவோ பொறுதுட்டோம்  .............

ஆனால் உங்க கட்சி மீட்டிங்கு  மட்டும் எப்படி 4 மணி லிருந்தே கட்டவுட்ட எரியுது , பாக்கும்போது எங்க வைரு எரியுது ..........


உங்க ஆடம்பர கட்டவுட்டு களுக்கு முதல்ல தடை போடுங்க அப்புறம் எதிர்க்கட்சி காரங்களுக்கும் தடா போட்டுடலாம் . முதல்ல நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம் .............


 செய்தி :
  தமிழகத்தில் நிலவுகின்ற மின் பற்றாக்குறை நிலைமை பா‌ர்‌த்து பொது மக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைத்துத்  எப்படி கவலைப்படுகிறார்களோ, அதை விட ஆயிரம் மடங்கு த‌மிழக அரசு கவலை கொள்கிறது எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனை குறித்து, சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் நிலவுகின்ற மின் பற்றாக்குறை நிலைமை அனைவருக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது. பொது மக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பினரும் எப்படி கவலைப்படுகிறார்களோ, அதை விட ஆயிரம் மடங்கு இந்த அரசு கவலை கொள்கிறது.

ஏனென்றால் எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. மின்சாரம் வழங்க வேண்டிய கடமை இருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு நிச்சயம் நாங்கள் காரணம் இல்லை. 2006-ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும் போது, தமிழகம் மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருந்தது. கடந்த ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்தது.

மின்சாரப் பற்றாக்குறை, மின் உற்பத்திக் குறைவு போன்ற பிரச்னைகளை சரி செய்வது, சீர் செய்வது என்றால் அது ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஏன் ஒரு ஆண்டு காலத்திலும் முடியாது. தமிழகத்துக்குப் போதிய மின்வழித் தடம் இல்லை. ஏனெனில் நமக்கு முன்னுரிமை இல்லை. நீண்ட கால ஒப்பந்தங்களைப் போடுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களைப் போடத் தவறியது கடந்த கால தி.மு.க அரசு.

இந்தப் பிரச்சனையில் மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய மின் உற்பத்தித் திட்டத்துக்கான பல அனுமதிகளை மத்திய அரசு தரவேண்டியுள்ளது. இந்நிலையில், வேண்டுமென்றே தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருக்கும் பல பெரிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துகிறது. இதற்கு யார் காரணம்?

நமது மொத்தத் தேவையில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மின் நிலையங்களுக்கு தேவைப்படுகின்ற நிலக்கரியில் 80 சதவீதம்தான் கொடுக்கிறார்கள். ஆகவே, திமுக அரசு காட்டிய அலட்சியம், அக்கறையின்மை, நிர்வாகத் திறமையின்மை, இன்னொருபுறம் மத்திய அரசு வேண்டுமென்றே நம்மை வஞ்சிக்கிறது. இருப்பினும் இதனால் சோர்ந்து விடவில்லை.

திமுக அரசு என்ன தவறு செய்திருந்தாலும் அதை சரி செய்தே தீருவோம் என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு நம்மை வஞ்சித்தாலும் வெற்றி பெற்றே தீருவோம். வாழ்ந்து காட்டுவோம் என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பொறுமை காட்டுங்கள்: தமிழகத்தில் மோசமான மின்வெட்டு என்ற நிலையை கடந்து விட்டோம். அது முடிந்து விட்டது. என்னைப் பொருத்தவரை தமிழக மக்களை நான் வேண்டிக் கொள்வதெல்லாம், இத்தனை காலம் பொறுத்து விட்டீர்கள். இன்னும் ஓராண்டு காலம். ஓராண்டு என்று கூட சொல்ல மாட்டேன்.

அடுத்த ஜூன் மாதம் வரை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். படிப்படியாக இனிமேல் மின்வெட்டு சீரடையும். அடுத்த ஆண்டு (2013) இறுதிக்குள் இந்த மின் வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். தமிழகம் மீண்டும் ஒளிமயமான மாநிலமாகத் திகழும் என்று ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

கருத்துகள்

கருத்துரையிடுக