ஈழ தமிழனும் அவன் தலைமுறைகளும் ஆன்மாக்களும் மறவாது , மன்னிக்காது

இந்த தமிழக அரசியல்வாதிகளை  அப்பாவியாய் கொலையுண்ட தமிழ் ஈழ உயிர்கள் எந்த ஜென்மத்திலும் மன்னிக்காது . கொன்று குவித்து கொக்கலம் வெறியாட்டம்   போட்ட பின்பும் அவர்களின் பிணத்தின் மீது நின்றுக் கொண்டு
அரசியல் செய்துகொண்டிருக்கும்  இவர்களுக்கும் , ராஜபக்சேவுக்கும்   எந்த வித்தியாசம் இல்ல  ........


உங்களுக்கு மனசாட்சி இல்லன்னு தெரியும், மாநாடு நடத்தியும் , அதை  தடுத்தும் அரசியல் பண்ணும் பெரிய கட்சிகளும் , அவர்களுக்கு ஜால்ரா தட்டும் கொசுறு கட்சிகளும் , தமிழனை ஒழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு திரியும் காங்கிரஸ் கட்சியையும் தமிழக மக்களை ஏமாற்றி வோட்டு வாங்கி கொழுத்து திரிந்தாலும் , உங்களை ஒரு நாளும் ஈழ தமிழனும் அவன் தலைமுறைகளும் ஆன்மாக்களும் மறவாது , மன்னிக்காது
       - மனம்  வெறுத்து வேற ஏதும் சொல்ல முடியாத ஒரு தமிழன் பாலா 

கருத்துகள்