கொள்ளை கூட்டத்தின் கொள்ளை போதவில்லை என்று புகார் ( புதுமையான கோரிக்கை )

தனியார் பள்ளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி (மக்களின் சார்பாக ) நீங்க எல்லாம் எதுக்கு பள்ளி ஆரபிச்சீங்க ........ கொள்ளை அடிக்கவ ....... ஏதாவது கொள்ளை அடிக்கிற தொழில் ( லாபம் கொழிக்கும் ) ஆரபித்து , கோடிகளை அல்லவேண்டியது தானே ! . எதுக்கு இப்படி சேவை செய்ய வேண்டிய கல்வி துறையில் நுழைந்து மக்களை பாடாய் படுத்துறீங்க .....

உடனே முந்திகிட்டு வந்துடுவாங்க தனியார் பள்ளி நிர்வாகிகள் ஏன் இங்க வரீங்க அரசு பள்ளியில் சேர்க்கவேண்டியது தானே ! . உங்க கொள்ளை தொடர்ந்தால் ஒரு நாள் அதுவும் நடக்கும் . கல்லூரி படிக்க ( தொழில் நுட்ப படிப்பு ) 32500 ரூபாய் ஆனால் பள்ளிகளில் என்ன வசூலிக்கின்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும் ........ . பணம் பண்ணும் தொழிலாக மாற்றி விட்ட நிர்வாகிகள் மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ !

முதலில் கல்வி கட்டணம் , பிற அனைத்து வியாபாரங்களும் , புத்தக விற்பனை , போக்குவரத்து வாகனம் , சிற்றுண்டி , பள்ளி சீருடை என்று ஆரபித்து இன்று அனைத்தையும் விற்கும் பல்பொருள் அங்காடியாக பள்ளி கூடங்களை மாற்றி விட்டனர் .

இவர்களுக்கு எவ்வளவு நீங்க உயர்த்தி கொடுத்தாலும் போதாது , காரணம் அரசு சாரி இல்லாத காரணமே , அரசு அவர்களுக்கே ஜால்ரா அடிப்பதால் இன்னும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது . மக்கள் தான் பாவம் இவனுங்க பேச்ச கேட்டு சண்ட போட்டதால பல பேரோட நிம்மதி போச்சி . நிர்வாகம் கட்டம் கட்டி குழந்தைகளை பாடாய் படுத்துகின்றனர் . இது தீராத ஒரு தொடர் கதையாக இந்த வருடமும் தொடரும் , வழக்கம் போல் அரசு கட்டுகிறது , தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை இன்னும் சருராக நடக்கும் . இதில் இடையில் மாட்டி நசுங்கி வீனா போக போறது என்னமோ பெற்றோர்கள் தான் .......

சென்னை : "ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்துள்ள கட்டணம் மிகவும் குறைவு. இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, நியாயமான கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாசல பாண்டியன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சமச்சீர் கல்வி வழக்கில், சென்னை ஐகோர்ட் வழங்கும் தீர்ப்பை ஏற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது தான், எங்களின் கொள்கை. தமிழக அரசு, அந்த நோக்கத்திற்காகவே செயல்பட்டு வருகிறது. எனவே, கல்வி திட்டத்தில் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர் குளறுபடி ஏற்பட்டு வருகிறது.

முதலில் நியமிக்கப்பட்ட கோவிந்தராஜன் குழுவும், தனியார் பள்ளிகளை சரியான முறையில் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயிக்கவில்லை. குழுவின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்ற ரவிராஜ பாண்டியனும், நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. மேல் முறையீடு செய்த, 6,355 பள்ளிகளுக்கு, 14ம் தேதி புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டது. இதில், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்த்தபடி கட்டணம் நிர்ணயிக்கவில்லை. மிகக் குறைவாகவே கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளுக்கு, ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை குறைத்தும், ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார். தற்போதுள்ள கட்டணத்தை வைத்துக்கொண்டு, பள்ளியை நடத்த முடியாது. அதுவும், மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து, ஒரே விதமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கூறுவது, எந்த வகையிலும் நியாயமில்லை. மூன்று ஆண்டுகளிலும், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்; நிர்வாகச் செலவும் கூடும். இதையெல்லாம், குழு கருத்தில் கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு, பள்ளி நிர்வாகிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதே நேரத்தில் பெற்றோர் பாதிக்காத வகையிலும், நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வெங்கடாசல பாண்டியன் கூறினார்.

கருத்துகள்