
இந்த அடக்கு முறை செயல் மனித குரல் மதிக்கும் எந்த நாகரீக நாடும் அல்லது மனிதனும் மன்னிக்க மாட்டான் . அவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது மனித குலத்திற்கு எதிராக செயல் பட்டிருந்தாலோ நீங்க சொல்வதை சிறிதேனும் நம்பும் படி இருக்கும் . கபில் சிபல் என்னும் ஒரு மோச

நல்ல அரசு , மக்கள் எதையும் மறந்து விட மாட்டார்கள் பொறுத்திருங்கள் உங்களுக்கும் அடுத்து காத்திருக்கு ...........
இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் காங்கிரஸ் அல்லாத அனைத்து மாநில அரசுகளும் இந்த நிகழ்வை கடுமையாக கண்டிக்கும் போது தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதா மட்டும் ஏன் அமைதி காக்கின்றார் . காங்கிரஸ்யுடன் ரகசிய உறவு வைத்திருகின்ராரோ என்ற ஐயம் அனைவருக்கும் வருகின்றது . ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கின்றோம் , அப்படி உங்களுக்கு ஏதாவது எண்ணம் இருந்தால் அதை ஆழ் குழி தோண்டி புதைத்து விடுங்கள் . இல்லை உங்கள் ஆட்சிக்கு வைக்க படும் மிக பெரிய ஆப்பு . ஊழலுக்கும் , அராஜகத்திற்கும் , தமிழின விரோத போக்கிற்கும் எதிராக தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர் . இதை மறந்து மறுபடியும் எப்படியாவது காங்கிரசுடன் கூட்டணி , வெஞ்சாமரம் வீசுகின்றேன் என்று நீங்கள் ஆரபித்தால் மக்கள் உங்களுக்கு எதிராக மாற சற்றும் தயங்க மாட்டார்கள் . இப்போது நீங்கள் எடுத்து வரும் சில நடவடிக்கை விமர்சனத்திற்கு ஆளக்கபட்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் .
அதே போல் எதற்கு இந்த அவசரம் கொடுத்த வாக்குறுதியை இன்னும் ஒன்னரை ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று சொல்வது . கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறேன் என்றால் பாராட்ட பட வேண்டியது தான் , ஆனால் அதை விட நாட்டில் நடைமுறை படுத்த வேண்டிய அவரச திட்டம் நிறைய இருக்கிறது . உங்கள் நடவடிக்கை அனைத்தும் இன்னும் ஒரு இரு ஆண்டுகளில் வரவுள்ள பார்லிமென்ட் எலக்ச்சனை மனதில் வைத்து தானோ என்ற ஐயமும் எழுகிறது. நல்ல ஆட்சியை நடத்துங்கள் உங்களுடன் மக்கள் துணை இருப்பார்கள் . இல்லை என்றால் மறுபடியும் மாற்றம் வரும் பொறுத்திருந்து பார்போம் .
தனியார் பள்ளிகளுக்கு சாதகமான உங்கள் நிலை பாடு மக்களிடம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது . அது பள்ளி கட்டணமாக இருந்தாலும் , சமச்சீர் கல்வி முறையைய இருந்தாலும் எதிலும் தெளிவான முடிவில்லை . கல்வி கட்டணத்தை அமுல்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்பது உங்கள் பேட்டியின் மூலமே விளங்கும் . சமச்சீர் கல்வியில் குறை இருந்தால் அதை சரி செய்து அடுத்த ஆண்டு அமுல்படுத்துவோம் என்ற தெளிவான பதிலும் இல்லை . காரணம் உங்களிடம் தெளிவான முடிவு இல்லை ( அமுல்படுத்த விருப்பம் இல்லை இது தான் உண்மை ). சட்டமன்ற மாற்றம் , சமச்சீர் புத்தகங்கள் நிறுத்தி வைப்பு , அதிகாரிகள் அடியோடு மாற்றம் , இப்படி அனைத்திலும் அதிரடியாய் முடிவெடுக்கும் நீங்கள் இந்த விசயத்தில் ஏன் தயங்குகின்ரீகள் .
1. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்
2. பள்ளி கட்டனத்தை அமுல் படுத்தி அதை தீவிரமாக கண்காணிப்போம் .தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
3. சமச்சீர் கல்வி முறையை மேன்படுத்தி அடுத்த ஆண்டு கண்டிப்பாக அமுபடுத்துவோம் .
இந்த மூன்று அறிவிப்புகளையும் உங்களால் அறிவிக்க முடியுமா ?
முடியாது என்றால் நீங்கள் சொல்லியது சொல்வது மக்களை ஏமாற்ற செய்யும் தில்லு முள்ளு வேலை என்பது தெள்ள தெளிவாகும் ....
கருத்துகள்
கருத்துரையிடுக