
கறுப்புப் பணம் மற்றும் ஊழல் தொடர்பாக பாபா ராம்தேவுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என்று பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார். ஆனால் டெல்லியில் நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் புகுந்த காவல்துறை அதிரடியாக பாபா ராம்தேவை கைது செய்தது.
அப்போது ஏற்பட்ட காவல்துறை நடவடிக்கையினால் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் காயமடைந்தனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்த ராம்தேவ் ஆதரவாளர்களை காவல்துறை தடியால் அடித்ததோடு கும்பலைக் கலைக்க கண்ணீர்ப்புகை வீச்சும் நடத்தியது.

நேற்று இரவு 1 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் ஏராளமான போலீஸ் படை குவிந்தது. அங்கு எதிர்ப்புகளுக்கிடையே உண்ணாவிரதப் பந்தல் கீழே சாய்க்கப்பட்டு ராம்தேவ் ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர், இதில் வன்முறை ஏற்பட்டது.
பாபா ராம்தேவ் தற்போது ஹரித்வாரில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யோகா முகாம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை ராம்தேவை கைது செய்ய வந்துள்ளது என்ற செய்தி பரவ ஆதரவாளர்கள் மனிதச் சங்கிலி அமைத்து கைது நடவடிக்கைகளை தடுக்க முற்பட்டனர்.
தன்னை கைது செய்தால் பகல் நேரத்தில் கைது செய்யுமாறு பிரதமர் மன்மோகனிடம் தான் கோரியதாக ராம்தேவ் தெரிவித்தார். காவல்துறையின் விரைவு நடவடிக்கைப் படை பாபா ராம்தேவ் ஆதரவாளர்களை வெளியே வலுக்கட்டாயமாகத் டூக்கிச் சென்றது.

பேனர்கள் கிழிந்தும், கீழ் தரை விரிப்புகள் கிழிந்து ஆங்காங்கே சிதறிக் கிடந்த காட்சிகளை அங்கு காண முடிந்தது.
ராம்லீலா மைதானப் பகுதியில் 144 தடைச் சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்கள் தாங்கள் மருத்துவமனைக்க்குச் செல்லப்போவதில்லை என்று இந்தக் காயம் தங்கள் போராட்டத்தின் அடையாளம் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே காவல்துறைச் செயல்பாட்டையும், காங்கிரஸ் அரசையும் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்திற்குள்ளாக்கியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக