
சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கான பகல் நேர மின் வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளளது.
சிலகாலமாக மின்வெட்டு இல்லாமல் இருந்த சென்னை நகரத்திலும் இனி மின்வெட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாநிலங்களிலும் மின்சார பற்றாக்குறையாக இருப்பதால் போதுமான மின்சாரம் பெற முடியவில்லை என்றும் இதனால் தமிழகத்தில் வீடுகளுக்கான பகல் நேர மின்வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் இனி பகலில் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படும் என்றும்,
நாளொன்று ரூ. 50 கோடிக்கு மின்சாரம் வாங்கியும் நிலைமையை சரி செய்ய முடியவில்லை என்றும், காற்றாலை மூலம் மின்சாரம் பெறப்படும்போது நிலைமை சீரடையும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தினமும் 3 மணி நேரம் மின்வெட்டும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.
இந்த மின்வெட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக