இயற்கையே ! என்னை தலைவனாக ஏற்றுக்கொள்வாயானால் ........
- கடற்கரையே ! உனை சீண்டி பார்க்கும் கடலலையை கடாவில் காவல் வைப்பேன்
- கடலே ! உன்னை கரிக்கும் உப்பை வடித்து உனை வான்வெளியில் மீட்டு வைப்பேன்
- மலரே உன்னை வண்டுகள் மெயக்காமல் இருக்க மலர்கொடுமை சட்டம் அமைப்பேன்
- வண்டுகளே உங்கள் காம மயக்கம் தெளியாமல் இருக்க காமசூத்திர பயிற்றுவிப்பேன்.
- காகமே உங்களை வெண்மையாக்க, இலவச அழகு நிலையம் அமைத்து தருவேன்,
- நிலவே உன் சூரிய காதலை பிரிக்கும் பூமியை விரட்டி, அதற்கு வேற்று பாதை அமைத்து தருவேன்.
- பிரிந்திருக்கும் நட்சத்திரங்களே ! உங்களை இணைத்து கூட்டணிக்கு தலைவனாவேன் !
- பனியே உன்னை கொல்லும் சூரியனிலிருந்து காக்க ஆளுக்கொரு இலவசமாய் குடையளிப்பேன்
- இயற்கையே நீங்கள் கண்டு களிக்க, வானில் அகன்ற திரையில் தினம் மானட மயிலாட தொடர் நடத்திடுவேன்
- கண்டங்களே உங்களை ஒன்றிணைக்க மானுட வங்கியில் கடன் வாங்கி கான்கிரிட் பாலமமைப்பேன்
- மலைகளே உங்கள் அழகு மங்காமல் இருக்க, ரேசன் மூலம் இலவச அழகு பொருட்கள் வழங்குவேன்
- வற்றிய நதிகளே உங்களின் நிலை அறிவேன் , ஆதலால் நீங்கள் வற்றாமல் இருக்க கடல் நீரை மெகா மோட்டர் அமைத்து நிரப்பிடுவேன் .
- வானமே உன் கூடாரத்தை இடித்து விட்டு அழகிய கலைநயம் மிக்க பல மாடி கட்டிடம் அமைப்பேன்
- மரங்களே உங்கள் பேயாட்டம் நிறுத்த மாந்திரீகம் செய்து ஆளுக்கொரு தாயத்து கட்டி விடுவேன்
- காற்றே நீ மாசு படாமல் இருக்க மனித இனத்தை செவ்வாய்க்கு நாடு கடத்துவேன்
- ஐம்பூதங்காலே உங்கள் துறைகளை நவீனமாக்க இணையம் மூலம் ஒன்றிணைப்பேன் .
- பிரம்மனே எனக்கு ஆதரவு கொடுத்தால், நிரந்தர படைக்கும் துறை மந்திரியாக்குவேன் .
- விஷ்ணுவே என்னுடன் சேர்ந்தால் காக்கும் துறை உன் தலைமுறைக்கும் காணிக்கயாக்குவேன்
- சிவனே ! நீ மட்டும் என்னை ஆதரித்தால் உன் துறைக்கு முடிவில்லா தலைவனாக்கி , நவீன ஆயுதங்களை அண்டை யுகத்தில் வாங்கி உடன் பெருத்த சன்மானம்மும் தருவேன்
- இவை போதாதென்றால் தட்டுபாடின்றி சோமபானம் விற்று, அனைத்தும் இலவசமாக தருவேன்
- ஆதரவளியுங்கள் என் டுபாகூர் . தூள் .டக்கர் கட்சிக்கே .
- வாக்களியுங்கள் எங்கள் மண்டை ஓடு சின்னத்திற்கே !
- மறந்தும் பிறந்து விடாதீர்கள் , இறந்த பின்னும் மரத்து விடாதீர்கள் , வாக்களியுங்கள் மண்டை ஓடு சின்னத்திற்கே !...
- இயற்கை, கொய்யல எங்க கிட்டவேவா , நாங்க என்ன மனிதர்கள் மாதிரி முட்டாளுங்களா ? , இதை எல்லாம் தேர்தலுக்கு முன்னாடி செய்வியா இல்ல , அல்வா மாதிரி வேற எதையாவது கிண்டி குடுப்பியா........
- தலைய பிச்சிகினு, இதுங்களும் இப்படியான்னு நினைக்கும் போது தான் தெரிஞ்சது , சனியன் புடிச்ச எலைக்சன் நினைச்சி படுத்துட்டேன் போல , கெட்ட கெட்ட கனவா வருது . யாரவது நல்ல டாக்டர் (டிவி லா வராத இருந்த சொல்லுங்க எலைக்சன் பீவர் வரா மாதிரி இருக்கு ..........
- நீங்க தலைய பிச்சிகாதீங்க எனக்கு வந்த கனவு தான் ...............
- கேப்புல எனக்கு வோட்டு போடறத மறந்துடாதீங்கோ .... நா...... வரட்டுங்கலான்னா .........விட்ரா சாமீ எங்கேயோ கேட்ட குரல் ............
கருத்துகள்
கருத்துரையிடுக