சினிமா

பிரபல தமிழ் நடிகை தற்கொலை!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை ஷோபனா திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் குறிப்பித்தக்க நகைச்சுவை நடிகையாக திகழ்ந்தவர், ஷோபானா. வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் நிறைய படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்தவர்.

\'சில்லுனு ஒரு காதல்\' படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்ததன் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். மேலும், \'லொள்ளு சபா\' மற்றும் \'வெண்ணிற ஆடை\' மூர்த்தியுடன் தொலைக்காட்சி நகைச்சுவை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகுவாக பரிச்சயமானவர் ஷோபனா.

திருமணமாகாத ஷோபனா தனது தாயார் வைரம்ராணியுடன் சென்னை - கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் \'எச்\' பிளாக்கில் வசித்து வந்தார். மேலும் படிக்க

அஞ்சலியிடம் சில்மிஷம்.....ரசிகர்களுக்கு பளார்!


அஞ்சலியிடம் சில்மிஷம் செய்த ரசிகர்கள்  மீது பாய்ந்து பளார் பளார் என அறைவிட்டார் புதிய இயக்குநர்  .

துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும் இணைந்து \'கிளவுட் நைன் மூவீஸ்\' சார்பில், \'தூங்கா நகரம்\' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கதாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார், கவுரவ். இவர், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். மேலும்........

நடிகர்கள் போடோஸ்  
Manmathan Ambu Team
சொகுசு கப்பலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. கமல் ஹாஸனுக்கு சம்பளம், மாதவன், த்ரிஷா சம்பளம் என எப்படிப் பார்த்தாலும் ரூ 40 கோடிக்குள் இந்தப் படம் முடிந்துவிட்டிருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இன்று சென்னையில் நடந்த மன்மதன் அம்பு பிரஸ் மீட்டில் இதுகுறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. அவர் நேரடியாக பதில் அளிக்காமல், ஐந்து விரல்களை மடக்கிக் காட்டி 50 ரூபாய் என்றார். அதாவது ஐம்பது கோடியாம்!
       இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் விநியோக உரிமையை ஜெமினிக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்தப் படம். மன்மதன் அம்புடன் மோதவிருப்பது விஜயகாந்தின் விருதகிரி!!

தவறாக விமர்சிப்பேனா...? -ஆர்யாவின் அறிக்கை!
ஆர்யாவின் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பலைகள் ஆங்காங்கே வேறு வேறு ரூபங்களில் Aryaவெறுப்பேற்றி வந்தது. இதையடுத்து கூடிய தமிழ்சினிமாவின் பல்வேறு அமைப்புகளை கொண்ட கூட்டுக்குழு பேச்சு வார்த்தை நடத்தியது. இதையடுத்து தனது விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ஆர்யா. அது பின்வருமாறு-
என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும், என்னை ஆளாக்கி ஆதரித்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.
                                                       
  குவார்ட்டர் படத்துக்கு வரி விலக்கு இல்லை என்று கூறிவிட்டது
 அரசு. பத்திரிகைகள் எழுதப் போய்தான் இப்படி ஆகிவிட்டது என்று கோபத்திலிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. இதனால் ரிலீஸ் நேரத்தில் போடப்படும் பத்திரிகையாளர் ஷோ இவர்களுக்கு வேண்டுமா என்றும் யோசிக்கிறதாம். நல்ல கோபம். கிடைக்கட்டும் லாபம்!
ரஞ்சிதா எழுதிய பிளாக்   கோடம்பாக்கத்தில் ஏமாற்றம்
ஆறிப்போன அப்பளம் மாதிரி நமுத்துப் போய்விட்டது ரஞ்சிதா விவகாரம். காவல் Ranjithaதுறை விசாரணைக்கு வருவார். நித்யானந்தா பற்றியெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த மீடியாவுக்கும் பொதுமக்களுக்கும் சைலண்ட்டாக இருந்து 'பிரசாதம்' கொடுத்ததுதான் மிச்சம். ஆனால் சாமியார் சர்ச்சையில் மாட்டுவதற்கு முன்பு அவர் ஒரு பிளாக் வைத்திருந்ததாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
தனது மெயில் வட்டார தோழர்களுக்கும், தோழிகளுக்கும் மட்டும் அந்த லிங்க்கை அனுப்பி வந்தாராம் அவர். அதில் ஸ்வாமிகளின் அற்புதங்களையும், தனது ஆன்மீக சிந்தனைகளையும் நாள்தோறும் எழுதி வந்தாராம் ரஞ்சிதா. இப்போது பிளாக்கே பிளாக் செய்யப்பட்டு விட்டது என்று புலம்புகிறார்கள் மெயில் தோழிகள்.
தனது வாழ்க்கையை ப்ளே கிரவுண்டாக ஆக்கிய அந்த சம்பவத்தை பற்றியும், ஆசிரம வாழ்க்கை பற்றியும் அவர் புத்தகம் எழுதுவார் என்று பலரும் கணித்திருக்க, தனது மிலிட்டிரி கணவருடன் பார்டருக்கு சென்று விட்டாராம் ரஞ்சிதா. ஆவி போகிற அளவுக்கு காவியை நேசித்தவர், இப்போது ஆவி பறக்க இட்லி செய்து அசத்துகிறாராம் கணவரை. நடுவுல வேற காவி ஏதும் பூந்திராம இருக்கணும் >>>>Nandhagi